இந்தியா கூட்டணி உருவாவதற்கு திருமா பங்கும் இருக்கிறது - கே. ராஜன் பேச்சு!

நடிகை லிசி ஆண்டனி நடிக்கும் 'குயிலி' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் தொல்.திருமாவளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

Written by - RK Spark | Last Updated : Jun 4, 2025, 10:18 AM IST
  • மதுப்பழக்கம் ஒரு தனி மனிதனை மட்டும் பாதிப்பதில்லை.
  • சமூகத்தையே பாதிக்கிறது.‌ போதைப்பொருள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
  • பிறகு முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் - திருமாவளவன்.
இந்தியா கூட்டணி உருவாவதற்கு திருமா பங்கும் இருக்கிறது - கே. ராஜன் பேச்சு!

B M ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெ.வ. அருண்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் நடிகை லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'குயிலி' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் 'எழுச்சித் தமிழர்' தொல். திருமாவளவன் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜூ ஸ்மித் இசையமைத்திருக்கிறார். ஒரு தாயின் வைராக்கியம் மிக்க தொடர் வாழ்க்கை போராட்டத்தை எடுத்துக்காட்டும் விதமாகவும் மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை விநியோகஸ்தர் மோகன் வெளியிடுகிறார். 

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | “நான் வேதனையில் இருக்கிறேன்...” மொழி பிரச்சனையில் கமல் பரபரப்பு அறிக்கை!

விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு நிகழ்வில் படக்குழுவினருடன் மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன், மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநரும் நடிகருமான பாலாஜி சக்திவேல், இயக்குநர் ஸ்ரீஜர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நடிகை தாஷ்மிகா பேசுகையில், ''இந்தப் படத்தில் நடிப்பதற்கு எனக்கு திடீரென்று வாய்ப்பு கிடைத்தது. அதனால் எனக்கு இந்த தருணம் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏதோ ஒரு படப்பிடிப்பில் சிறிய வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இப்படத்தில் நடிப்பதற்கான அழைப்பு வந்தது. குடிக்கு எதிரான படத்தில் நீங்கள் நாயகியாக நடிக்க வேண்டும் என படக் குழுவினர் சொன்னவுடன் உற்சாகம் அடைந்தேன். என் மேல் நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி,'' என்றார். 

மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன் பேசுகையில், ''இந்தியா கூட்டணி உருவாவதற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை போல் திருமாவிற்கும் பங்கு இருக்கிறது. பாராளுமன்றத்தில் இவருடைய குரல் ஓங்கி ஒலித்திருக்கிறது, ஒலித்துக்கொண்டே இருக்கிறது. பி எம் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த 'குயிலி' திரைப்படம் அற்புதமான குடும்ப படம். ஒரு தாய் தன் குடும்பத்திற்காக எப்படி போராடுகிறார் என்பதை அற்புதமாக சொல்லி இருக்கிறார்கள். இதற்காக இயக்குநர் முருகசாமியையும் இப்படத்தை துணிச்சலுடன் தயாரித்த தயாரிப்பாளர் அருண்குமாரையும் பாராட்டுகிறேன். இந்தத் திரைப்படம் குடிகாரர்களை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் கவர்ச்சி இல்லை, ஓரளவு அறிமுகமான நடிகர்களை வைத்து இயற்கையாக உருவாக்கியிருக்கிறார்கள். குடியினால் என்ன கொடுமை நடைபெறுகிறது என்பதை அற்புதமாக சொல்லி இருக்கிறார்கள்" என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில், ''வணிக நோக்கில் திரைப்படங்களை தயாரிக்க வேண்டும், அதில் வெற்றி பெற வேண்டும், அதில் லாபம் பெற வேண்டும் என்று எண்ணாமல் சமூகப் பொறுப்புணர்வோடு மக்களுக்கு வழி காட்ட வேண்டும், இந்த குடியின் துன்பத்திலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும், விடுதலை பெற வேண்டும் என்ற வேட்கையுடன் இளைய தலைமுறையினர் இந்த படைப்பை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது, என்பதை விட பெருமை அளிக்கிறது. இந்த குழுவினரை பார்த்து பெருமிதம் கொள்கிறேன். அவர்களை ஆரத் தழுவி என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அண்மையில் மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு ஒன்றினை நாங்கள் நடத்தினோம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அது பேசு பொருளாகவும் மாறியது. கடும் விமர்சனங்களுக்கும் உள்ளானது. 

மகாத்மா காந்தியை நாம் தேசிய தலைவராக ஏற்றுக் கொள்கிறோம். அவருடைய திருவுருவ படத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சடிக்கிறோம். அவருடைய கொள்கைகளில் முக்கியமானது மதுவிலக்கு. மகாத்மாவை தேசத் தந்தை என்று ஏற்றுக் கொண்டிருக்கும் நாம் அவருடைய உயிர் மூச்சான கொள்கையான மதுவிலக்கை பொருட்படுத்துவதில்லையே? இன்றைக்கு மது மட்டுமல்ல கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களும் பகிரங்கமாக விற்பனை செய்யப்படுகிறன. நகர்ப்புறங்களில் மட்டுமே புழக்கத்தில் இருந்த போதைப் பொருள்கள்.. தற்போது கிராமங்களிலும் ஊடுருவி இருக்கிறது.  இதற்காக ஒரு மாநாடு நடத்தி, அதில் இந்தியா முழுவதும் மது ஒழிப்பு தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும் என ஒன்றிய அரசினை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினோம். இது விமர்சனத்திற்கு உள்ளானது. அரசியல் ரீதியாகவும் விமர்சிக்கப்பட்டது. 

மேலும் படிக்க | தக் லைஃப் படக்குழுவினரால் கடுப்பான மணிரத்னம்? காரணம் இதுதான்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Trending News