போதை பொருள் வழக்கில் சிக்கிய ஸ்ரீகாந்த், கிருஷ்ணா! லிஸ்டில் அடுத்து மூன்றெழுத்து நடிகை?

THIS Actress Also Involved In Drug Scandal :போதை பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் சிக்கியிருக்கின்றனர். அடுத்ததாக எந்தெந்த பிரபலங்கள் சிக்க இருக்கின்றனர் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.  

Written by - Yuvashree | Last Updated : Jun 25, 2025, 07:28 PM IST
  • போதை பொருள் வழக்கில் சிக்கிய ஸ்ரீகாந்த், கிருஷ்ணா
  • அடுத்து சிக்க இருக்கும் பிரபலம்..
  • யார் தெரியுமா?
போதை பொருள் வழக்கில் சிக்கிய ஸ்ரீகாந்த், கிருஷ்ணா! லிஸ்டில் அடுத்து மூன்றெழுத்து நடிகை?

THIS Actress Also Involved In Drug Scandal : சில நாட்களுக்கு முன், அதிமுகவின் முக்கிய உறுப்பினர் ஒருவர் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவருக்கு போதை மருந்து விற்பதிலும், கைமாற்றுவதிலும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் சில நாட்களுக்கு முன்பு நடிகர்கள் ஸ்ரீகாந்திற்கும் கிருஷ்ணாவிற்கும் போதை மருந்துகளை விற்றதாகவும் குறிப்பிட்டார். இது குறித்த வழக்கு விசாரணை தற்போது நடைப்பெற்று வருகிறது.

Add Zee News as a Preferred Source

ஸ்ரீகாந்த் கைது:

ரோஜா கூட்டம், பார்த்திபன் கனவு, ஏப்ரல் மாதம் உள்ளிட்ட பல மனதை ஈர்க்கும் படங்களில் ஹீரோவாக நடித்தவர் ஸ்ரீகாந்த். ஒரு காலத்தில் முக்கிய ஹீரோவாக வலம் வந்த இவர், இப்போது பெரிய பட்ஜெட் திரைப்படங்களிலும் நடிப்பதில்லை. குறைவான பட்ஜெட்டில் உருவாகும் படங்களில் ஹீரோவாக நடிக்க மட்டுமே இவருக்கு வாய்ப்புகள் வருகிறது. அதையும் தட்டிக்கழிக்காமல் தற்போது நடித்து வருகிறார்.

அதிமுக-வின் உறுப்பினரான பிரசாத், நடிகர்கள் ஸ்ரீகாந்திற்கும், கிருஷ்ணாவிற்கும் கொக்கை போதை மருந்துகளை சப்ளை செய்ததாக கூறியிருக்கிறார். இதையடுத்து, ஸ்ரீகாந்தை கைது செய்த போலீஸார் அவரது ரத்த மாதிரிகளை பரிசாேதனை செய்தனர். இதில் அவர் போதை மருந்தை உபயோகித்தது உறுதி செய்யப்பட்டது. இதனால், போதை மருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவரை, ஜுலை 7ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணாவிடம் விசாரணை:

கழுகு திரைப்பட ஹீரோ கிருஷ்ணாவும் இந்த போதைப்பொருள் வழக்கில் சிக்கியிருக்கிறார். ஸ்ரீகாந்திடம் விசாரணை நடந்த போது இவர் ஊரில் இல்லை. இதையடுத்து, அவர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. கிருஷ்ணா, தனது செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு அப்ஸ்காண்ட் ஆனதாக கூறப்பட்டது. இதையடுத்து, அவரை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்தனர். இறுதியில் அவரை பிடித்த போலீஸார், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்து சிக்கப்போகும் பிரபலங்கள்..

ஸ்ரீகாந்தின் இந்த கைது, பிரபலங்கள் இடையே பரவலாக நடந்து வந்த போதை பொருள் விற்பனையை வெளிக்கொண்டு வந்திருப்பதாக கூறப்படுகிறது. இதில், இரண்டாம் குற்றவாளியாக ஸ்ரீகாந்த் சேர்க்கப்பட்டுள்ளார். இதில் இன்னும் சில பிரபலங்கள் சிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதில், ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவிற்கு கொக்கைன் கொடுத்த அதே நபர் திரை உலகை சேர்ந்த இன்னும் சிலருக்கும் போதை பொருட்களை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஒரு பிரபல மூன்றெழுத்து இசையமைப்பாளரும், மூன்றெழுத்து நடிகையின் பெயரும் இதில் அடிபடுகிறது. இன்னும் விசாரணை நடந்தால்தான் இது குறித்த தகவல் எது என்கிற உண்மை தெரியவரும்.

திரை உலகில் பெருகிய போதை மருந்து கலாச்சாரம்?

திரை உலகில், பார்ட்டி, நடனம், கேளிக்கை விருந்துகள் என பல அடிக்கடி நடப்பது சகஜம். ஆனால், போதை மருந்து பழக்கமும் திரை உலகினர் இடையே அதிகரித்து விட்டதாக கூறப்படுகிறது. ஸ்ரீகாந்த் போல, மார்கெட் இல்லாமல் நடித்து வரும் சில நடிகர்களே, பார்ட்டி வைப்பதற்கு என்று சில க்ளப்களை நடத்தி வருவதாகவும் அதில் அவர்களே போதை மருந்துகளை விற்பனை செய்து வருவதாகவும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும், இது திரை மறைவிலேயே இருப்பதாகவும் யாரும் இது குறித்து முன்வந்து பேச மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ஸ்ரீகாந்துக்கு முன்..போதை பொருள் சர்ச்சையில் சிக்கிய பிரபலங்கள்! யாரெல்லாம் தெரியுமா?

மேலும் படிக்க | போதை பொருள் வழக்கில் சிக்கிய ஸ்ரீகாந்த்! தண்டனை உறுதியானால் எத்தனை ஆண்டுகள் ஜெயில்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News