)
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில், அறிமுக இயக்குநர் ராஜபாண்டி நடித்து இயக்கிய "திவ்யா" திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிக் பாஸ் புகழ் திவாகர், திரைப்படத்தைப் பார்த்த பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். "இந்தத் திரைப்படத்தில் நடித்தவர்கள் அனைவரும் புதுமுகங்கள். பொதுவாகப் புதுமுகங்கள் ஆரம்பத்தில் நடிப்பதற்குச் சிரமப்படுவார்கள். ஆனால், இதில் நடித்தவர்கள் எந்தச் சிரமமும் இல்லாமல் இயல்பாக நடித்திருந்தார்கள்."
"இந்தப் படத்தைப் பார்க்கும்போது, சசிகுமார் அண்ணன் எடுத்த 'நந்தன்' படம் போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. இயக்குநர் சசிகுமார் அண்ணனைப் போலவே இவர்களும் பல சமுதாய சீர்திருத்தப் படங்களை எடுத்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்."
திவ்யா திரைப்படத்தைப் பார்த்துவிட்டேன். இந்தப் படம் எப்போது வெளியாகும் என மக்கள் எதிர்பார்ப்பது போலவே நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து எழுந்த விமர்சனங்கள் மற்றும் தனது அனுபவங்களைப் பற்றியும் அவர் வெளிப்படையாகப் பேசினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு ஸ்கிரிப்ட் என்று அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால், பிக் பாஸில் எந்தவித ஸ்கிரிப்டும் கிடையாது. அங்கு நடந்த அனைத்தும் உண்மை. அனைவரும் என்னை மெலிந்துவிட்டீர்கள் என்று கூறுகின்றனர். நாங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றவுடன் எங்களை வெளியுலகத் தொடர்பிலிருந்து துண்டித்து அடைத்து விடுவார்கள். நிறைய ரிவியூவர்கள் தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள். பிக் பாஸ் வீட்டிற்குள் உணவுக்கும் கேம்ஸுக்கும் தட்டுப்பாடு இருந்தது. அவர்கள் சொல்லும் டாஸ்க்குகளை மட்டுமே நாங்கள் செய்துகொண்டே இருக்க வேண்டும்.
ஒரு பள்ளியில் படித்தால்கூட நமக்கு ஓய்வு கிடைக்கும். ஆனால், நான் பிக் பாஸ் வீட்டில் வீட்டு வேலைகள் கத்துக்கொண்டேன். சுடுதண்ணிகூட வைக்கத் தெரியாத நான், பாத்திரம் கழுவுவதில் இருந்து டாய்லெட் கழுவுவது வரை அனைத்தையும் கற்றுக்கொண்டேன். வெவ்வேறு குணங்களுடைய 20 பேர் ஒரு இடத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொண்டேன்.
நான் பிக் பாஸிலிருந்து வெளியேறியவுடன் நிறைய குழந்தைகள் அழ ஆரம்பித்துவிட்டார்கள். 'நடிப்பு அரக்கன்' என்ற சொல் பச்சைக் குழந்தை முதல் பெரியவர் வரை வைரலாகியது.
பிக் பாஸில் டைட்டில் வின்னர் யார் வருவார் என இப்போதைக்குச் சொல்ல முடியாது. வைல்ட் கார்டு என்ட்ரி உள்ளே நுழைந்தால் கேம் இன்னும் மாறலாம். மதுரை மீனாட்சி தாயின் அருளால் தான் நான் பிக் பாஸிற்குச் சென்றேன் என்று கூறினார்.
தொடர்ந்து படத்தின் இயக்குநர் ராஜபாண்டி, திரைப்படம் உருவானபோது சந்தித்த சவால்கள் குறித்துப் பேசினார். இந்தப் படம் ஆரம்பித்ததில் இருந்தே மிகப்பெரிய போராட்டத்தைச் சந்தித்தோம். ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோதே, உசிலம்பட்டியில் அங்கிருக்கும் மக்கள், 'என்ன இப்படி எல்லாம் படம் எடுக்கிறீர்கள்? என்ன இந்த மாதிரி எல்லாம் வசனம் பேசுகிறீர்கள்?' எனக் குழப்பமும் பிரச்சனையும் வந்தது. பிரச்சினைகளைச் சமாளிக்க, வசனம் பேசாமல் (வாயை அசைக்காமல்) ஷூட்டிங் செய்து, பிறகு டப்பிங்கில் அதைச் சரிசெய்தோம்.
இந்த படத்தில் என்னுடைய கதையை எடுக்கிறீர்கள், என்னை அசிங்கப்படுத்துகிறீர்கள்' என ஆட்களைக் கூட்டி வந்து பெரிய பிரச்சனைகளைச் சந்தித்தோம். இதையெல்லாம் கடந்து ஷூட்டிங்கை முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன் போகும்போதும் போராட்டமாகவே இருக்கிறது. இருந்த பணத்தை எல்லாம் ஷூட்டிங் செய்வதற்கே செலவழித்துவிட்டோம். கையில் காசு இல்லாமல் அம்மா உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு, ஒவ்வொருவரிடமும் உதவி கேட்டு, பல பேரின் உழைப்பால்/உதவியால் இந்தப் படம் வந்துள்ளது.
படத்தை எடுத்துவிட்டு, கையில் வைத்துக்கொண்டு வெளியிடத் தெருத் தெருவாக அலையும் நிலைதான் உள்ளது. பத்தோடு பதினொன்றாகத்தான் நிற்கிறோம். பெரிய டீம் மற்றும் யூனிட் வைத்துப் படம் எடுத்துக்கொண்டு வெளியிடுவதற்குச் சென்றால், நாம் நிற்கும் வரிசையில் இன்னொருவர் செல்போனில் எடுத்த படத்தைக் கொண்டு வந்து நிற்கிறார். நம்மைத் தனிப்படுத்திக் காட்டுவதே பெரிய போராட்டமாக இருக்கிறது.
இந்தப் படம் எடுத்து சில வருடங்கள் ஆகிவிட்டது. கால தாமதமான வெற்றியும்கூட ஒரு வகையில் தோல்விதான் என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ