)
இந்த வாரம் Netflix, JioHotstar, Sun Nxt, Simply South மற்றும் பிற தளங்களில் வெளியாகும் முக்கியமான திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் முழுமையான விவரத்தை இந்த பதிவில் பார்ப்போம்.
சொட்ட சொட்ட நனையுது: இயக்குநர் நவீத் பரீத் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் சொட்ட சொட்ட நனையுது. இந்த படத்தில் நடிகர் நிஷாந்த் ரூஷோ சொட்டை தலை கெட்டப்பில் நடித்துள்ளார். அவருடன் இந்த படத்தில் பிக்பாஸ் வர்ஷினி, ஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் மறைந்த நடிகர் ரோபோசங்கர், கல்லூரி வினோத், கலக்கப் போவது ராஜா, ஆனந்த்பாபு உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வழுக்கை தலையால் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம், நாளை அதாவது அக்டோபர் 31 ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளது.
Another relatable kadhai on the way friends#Sottasottananaiyuthu premieres from Oct 31st on @ahatamil @naveedhsfareed @actornishanth @RajaMimicry @itsshaalini @varshinivenkat_ @rayeezamd @renju2786 @eega_praveen @yuvaraj_kannan_ @asulthanrajapro @trendmusicsouth… pic.twitter.com/cOWccIgcyv
— aha Tamil (@ahatamil) October 28, 2025
மரியா: பாவல் நவகீதன், சாய் ஸ்ரீ பிரபாகரன், சித்து குமரேசன், விக்னேஷ் ரவி உள்பட பலர் நடித்துள்ள படம், ‘மரியா’. அரவிந்த் கோபாலகிருஷ்ணன், பரத் சுதர்சன் இசை அமைத்துள்ளனர். மணிசங்கர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தைத் தயாரித்து, ஹரி.கே.சுதன் இயக்கி இருக்கிறார். பெண் ஒருவருக்கு அவரது இயல்புக்கு மாறான எண்ணம் தோன்றுகிறது. அதை மற்றவர்களிடம் சொல்லும்போது, அவரைச் சுற்றி இருக்கிறவர்களும் குடும்பத்தினரும் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள், அதனால் அவருக்கு ஏற்படும் பிரச்சினைகள் என்ன என்பது இதன் கதை. இந்த படம், நாளை அதாவது அக்டோபர் 31 ஆம் தேதி SimplySouth ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளது.
Faith. Freedom. Fear. Her story unfolds.#Maria, streaming on Simply South from October 31'st worldwide, excluding India pic.twitter.com/Y6Z4oOTPrh
— Simply South (@SimplySouthApp) October 28, 2025
லோகா சாப்டர் 1 : சந்திரா: 2025 ஆம் ஆண்டு, சர்ப்ரைஸ் ஆக ஹெட் கொடுத்த படங்களில் ஒன்று லோகா சாப்டர் 1 : சந்திரா. இந்த படத்தில் கல்யாண பிரியதர்ஷன் நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தின் கதை கிராமப்புறங்களில் சொல்லப்படும் யக்ஷி எனும் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எழுதப்பட்டிருந்தது. கல்யாணி பிரியதர்ஷனுடன் சேர்ந்து, நஸ்லேன், அருண் குரியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம், நாளை 31ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளது.
Lokah Chapter 1: Chandra will be streaming exclusively on JioHotstar from October 31.#Lokah #LokahChapter1 #Wayfarerfilms #DulquerSalmaan #DominicArun #KalyaniPriyadarshan #Naslen #SuperheroFantasy #Lokahthefilm #LokahOnHotstar #JioHotstar #JioHotstarMalayalam pic.twitter.com/7wPjF7ArLU
— JioHotstar Malayalam (@JioHotstarMal) October 25, 2025
காந்தாரா சாப்டர் 1: கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி வெளியான "காந்தாரா அத்தியாயம் 1" திரைப்படம். ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரித்த படம், காந்தாரா. 2022ஆம் ஆண்டில் வெளியான இந்த படத்தையும் ரிஷப் ஷெட்டியே நடித்து இயக்கி இருந்தார். இந்த படம் பெருவெற்றி பெற்றதை தொடர்ந்து, அதன் முன் கதையும் படமாக எடுக்கப்பட்டது. இந்த படத்திற்கு, காந்தாரா சாப்டர் 1 என்று பெயரிடப்பட்டது. ரிஷப் ஷெட்டியுடன் சேர்ந்து இந்த படத்தில் ஜெயராம், ராகேஷ் பூஜாரி கிட்ட பலர் நடித்திருந்தனர். ருக்மிணி வசந்த், இந்த படத்தில் வில்லியாக நடித்திருந்தார். 2022 ஆம் ஆண்டில் வெளியான காந்தாரா படத்தில் காண்பிக்கப்பட்டிருந்த குறிப்பிட்ட கிராம மக்கள் தெய்வத்தின் கதையாக இந்த படம் இருந்தது. இப்படம் நாளை அதாவது 31 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளது.
this Exclusive Trailer brings you to witness faith, fury and a folklore #KantaraALegendChapter1OnPrime, Oct 31 pic.twitter.com/Efzz5tUeyr
— prime video (@PrimeVideo) October 29, 2025
பிளாக்மெயில்: ஜிவி பிராகேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் 'பிளாக்மெயில்'. இப்படம், இன்று 30ம் தேதி சன் நெக்ஸ்ட் மற்றும் Simply South ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
One man’s blackmail,turned upside down.
— SUN NXT (@sunnxt) October 30, 2025
Unlock the secrets—Blackmail on SunNXT!!#BlackmailOnSunNXT #TamilThriller #NewOnSunNXT #CrimeDrama #SuspenseSeries #ThrillerSeries
@gvprakash @samcsmusic @teju_ashwini @bindu_madhavii @redin_kingsley pic.twitter.com/6adHGyyreX
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ