இந்த வாரம் ஓடிடியில் 12 புதுப்படங்கள்.. எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

This Week OTT Releases July 14th to July 20th : பல புதுப்புது படங்களும் தொடர்களும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கின்றன. அவற்றை எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 14, 2025, 07:50 PM IST
  • ஓடிடி தளங்களின் வருகை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருக்கிறது.
  • என்னென்ன படங்கள் தெரியுமா?
இந்த வாரம் ஓடிடியில் 12 புதுப்படங்கள்.. எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

This Week OTT Releases July 14th to 20th 2025 : ஓடிடி தளங்களின் வருகை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருக்கிறது. இதையடுத்து, தியேட்டர்களில் வெளியாகும் பல படங்கள் ஓடிடியிலும் வெளிவந்து விடுகின்றன. இந்த வாரம், பல புதுப்படங்களும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களும் வெளியாகின்றன. அவை என்னென்ன படங்கள் தெரியுமா?

Add Zee News as a Preferred Source

Kuberaa | குபேரா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் கொடிகட்டி பறந்து வருகிறார். இதற்கு முன்னர் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து மற்றொரு தெலுங்கு இயக்குனரான சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து நாகார்ஜுனா, ராஸ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோரும் நடித்துள்ளனர். ராம் மோகன் ராவ் மற்றும் சுனில் நரங் இந்த படத்தை தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த ஜூன் 20 ஆம் தேதி தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடா, தெலுங்கு என ஐந்து மொழிகளில் வெளியானது.

இந்நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் குபேரா திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி மற்றும் எந்த தளத்தில் வெளியாகப் போகிறது என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி குபேரா படத்தின் OTT உரிமைத்தை முன்னணி ஸ்ட்ரீமிங் நிறுவனமான அமேசான் பிரைம் பெற்றுள்ளது. அதன்படி இந்தப் படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி வெளியாகிறது.

Bun Butter Jam | பன் பட்டர் ஜாம்
ரெய்ன் ஆப் ஆரோஸ் (Rain of Arrows) நிறுவனம் சார்பாக சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில் உருவானப் படம் பன் பட்டர் ஜாம். இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக நடித்துள்ளார்.  கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜூலை 18 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் படங்களில் அதிகளவில் புரமோஷன் செய்யப்படும் படம் என்றால் அது பன் பட்டர் ஜாம் என்கிற திரைப்படம் தான்.

Sattamum Nidhiyum | சட்டமும் நீதியும்
சரவணன் நடிப்பில் உருவாகி இருக்கும் சட்டமும் நீதியும் என்கிற வெப் தொடர் ஜூலை 18 ஆம் தேதி முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

மேலும் படிக்க | Saroja Devi Death : கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி மரணம்! சோகத்தில் திரையுலகம்..

மேலும் படிக்க | எம்.ஜி.ஆர் மேல இவ்ளோ பாசமா? அவருக்காக சரோஜா தேவி செய்த விஷயம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News