மாலையும் கழுத்துமாக ஜெயம் ரவி..பக்கத்தில் இந்த பொண்ணா? வைரலாகும் புகைப்படம்!

Photo Of Jayam Ravi With Aarti Before Divorce Controversy : நடிகர் ரவி மோகன் (அ) ஜெயம் ரவி, மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அது என்ன புகைப்படம் என்பதை இங்கு பார்ப்பாேம்.  

Written by - Yuvashree | Last Updated : May 23, 2025, 05:56 PM IST
  • மாலையும் கழுத்துமாக ஜெயம் ரவி
  • பக்கத்தில் இந்த பொண்ணா?
  • வைரலாகும் போட்டோ..
மாலையும் கழுத்துமாக ஜெயம் ரவி..பக்கத்தில் இந்த பொண்ணா? வைரலாகும் புகைப்படம்!

Photo Of Jayam Ravi With Aarti Before Divorce Controversy : தமிழ் திரையுலகில் பெரிய நடிகராக விளங்குபவர், ரவி மோகன் என்கிற ஜெயம் ரவி. கடந்த சில நாட்களாகவே இணையம் முழுவதும் எங்கு திரும்பினாலும் இவர் பேச்சாகத்தான் இருக்கிறது. மனைவியை பிரிந்தது, விவாகரத்து, புது தோழியுடன் திருமணத்தில் கலந்து கொண்டது என்று இவரை பற்றி ரசிகர்கள் வரிசையாக பேசவதற்கு பல கண்டண்ட்களை வைத்திருக்கின்றனர். இந்த நிலையில், இவர் மாலையும் கழுத்துமாக இருக்கும் ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரவி மோகன்-ஆர்த்தி பிரிவு:

ரவி மோகன், தனது மனைவியை விட்டு பிரிந்து விட்டதாகவும் விவாகரத்து பெற இருப்பதாகவும் கடந்த ஆண்டு அறிவித்தார். இதற்கு இன்னொரு அறிக்கை மூலம் இந்த விவாகரத்து அறிவிப்பு குறித்து தனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று ஆர்த்தி கூறினார். இந்த அறிவிப்பு வெளியான சூடு ஆறுவதற்குள், ரவி கெனிஷாவுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இருவரும் தாங்கள் காதலர்கள் இல்லை என்று கூறியதை அடுத்து, இந்த சர்ச்சைக்கு ஒரு முடிவு கட்டப்பட்டது. ஆனால், சமீபத்தில் ஒரு திருமண நிகழ்வில் ரவி, கெனிஷாவுடன் மேட்சிங் ஆக ஆடை அணிந்து வந்து அவரை கைப்பிடித்து அழைத்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்ட ஆர்த்தி, தானும் குழந்தைகளும் வாழும் வீட்டை காலி செய்ய வேண்டுமென, ரவி நாேட்டீஸ் அனுப்பியிருப்பதாக கூறினார். மேலும், ஒரு தகப்பனாக தனது கடமைகளை செய்ய அவர் மறந்து விட்டார் என்றும் குறிப்பிட்டிருந்தார். இது ஒரு புறம் புயலை கிளப்ப, ரவி மாேகன் அதற்கு பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தான் நிதி, உடல் மற்றும் மன ரீதியாக மனைவி மற்றும் அவரது குடும்பத்தாரால் பாதிக்கப்பட்டதாக கூறி ஒரு பதிவை வெளியிட்டார். அதில், கெனிஷா முதலில் தனக்கு ஒரு நல்ல தோழியாகத்தான் அறிமுகமானதாகவும், பின்பு தன் வாழ்வின் ஒளியாக மாறியதாக குறிப்பிட்டார்.

இதற்கிடையில் ரவி மோகனின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தனது மருமகனை இன்னும் மகனாக நினைப்பதாக கூறி முதன்முறையாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். பின்பு ஆர்த்தி, ‘அந்த வாழ்வின் ஒளி’ திருமண விவாகரத்து பேச்சுக்கு முன்பிருந்தே ரவி மோகனின் வாழ்வில் இருப்பதாக ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். இப்படி, நாலு சுவற்றுக்குள் பேசி முடிக்க வேண்டிய பிரச்சனையை இவர்கள் மாறி மாறி அறிக்கைகளாக வெளியிட்டதால், ரசிகர்கள் உண்மையாகவே இவர்கள் விஷயத்தில் எரிச்சலடைய தொடங்கினர்.

40 லட்சம் கேட்ட ஆர்த்தி..!

ரவி மோகன்-ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு சமீபத்தில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில், ஆர்த்தி மாதம் ரூ.40 லட்சத்தை ஜீவனாம்சமாக கேட்டு மனு தாக்கல் செய்திருக்கிறார். இது, ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால், ஆர்த்திக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் கூட அப்படியே ரவி மோகனின் பக்கம் திரும்பினர்.

வைரலாகும் புகைப்படம்..

ரவி மோகன்-ஆர்த்தியின் பிரச்சனை தற்பாேது தலைவிரித்தாடும் நிலையில் இதில் கெனிஷாவும் பலிகிடாவாகி இருக்கிறார். அவரை நெட்டிசன்கள் பலரும், “குடும்பத்தை பிரித்தவள், வீட்டை கெடுத்தவள், நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவளா?” என்றெல்லாம் வசைபாடி வருகின்றனர். இந்த சமயத்தில்தான், ரவி மோகனின் பழைய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் அவர் மாலையும் கழுத்துமாக ஆர்த்தியின் அருகில் அமர்ந்து கொண்டிருக்கிறார். இது, இவர்கள் பிரிவதற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் இருவருமே பார்ப்பதற்கு சிரித்துக்கொண்டும் கண்கள் முழுவதும் காதலுமாய் இருக்கின்றனர். இது, இவர்கள் வீட்டு விசேஷத்தில் எடுத்திருந்த புகைப்படமாய் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | பிரபல நடிகருடன் உறவில் ஆர்த்தி ரவி? உண்மை வெளிவருவது எப்போது? பிரபலம் சொன்ன தகவல்!

மேலும் படிக்க | “மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்..” வைரலாகும் கெனிஷாவின் இன்ஸ்டா பதிவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News