Thug Life Controversy Kamal Haasan Thanked TN People : தக் லைஃப் திரைப்படத்தை, மொழி சர்ச்சை சூழ்ந்திருக்கும் நிலையில், நடிகர் கமல்ஹாசன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவர் அப்போது தமிழக மக்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தது குறித்த பேச்சு எழுந்துள்ளது.
தக் லைஃப் திரைப்படம்:
ஜூன் 5ஆம் தேதியான நாளை வெளியாக இருக்கும் தக் லைஃப் படத்தின் மீது, ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. காரணம், இந்த படம் நாயகன் படம் வெளியாகி 38 வருடங்களுக்கு பின், கமலும் மணிரத்னமும் இணையும் படமாகும். அது மட்டும் கிடையாது, நடிகர் சிம்புவும் இதில் கமலுக்கு இணையான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அபிராமி, த்ரிஷா, ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷமி, அசோக் செல்வன், நாசர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் தற்போது நடைப்பெற்று வரும் நிலையில், சென்னையில் இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது.
மொழி சர்ச்சை:
தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் “கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது” என்று கூறினார். இதற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடும் கன்டனம் தெரிவித்த நிலையில், கமல் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். அப்படி இல்லை என்றால் கர்நாடகாவில் கமலின் தக் லைஃப் படம் வெளியாகாது என்றார். இந்த நிலையில், கமல்ஹாசன் “அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது” என்று கூறினார்.
கர்நாடகாவில் படத்தை பாதுகாப்பாக தடையின்றி வெளியிட வேண்டும் என்று கமல்ஹாசன், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு கொடுத்தார். ஆனால், இந்த பிரச்சனையை மன்னிப்பு கேட்டு முடிக்குமாறு நீதிபதிகள் கூற, கமல்ஹாசன் படத்தை திட்டமிட்டது போல ஜூன் 5 அன்று கர்நாடகாவில் வெளியிடப்போவதில்லை என்று கூறிவிட்டார்.
தமிழகத்திற்கு நன்றி..!
தக் லைஃப் படத்தின் ப்ரமோஷன் விழா கேரளா, மும்பை என பல்வேறு இடங்களில் நடந்து முடிந்ததை அடுத்து, சென்னையில் இன்று நடந்தது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் பேசிய கமல், உயிரே, உறவே, தமிழே என சொன்னதற்கான அர்த்தத்தை இப்போது முழுமையாக உணர்வதாக கூறினார். மேலும், மொழி பிரச்சனையில் தனக்கு உறுதுணையாக இருந்த தமிழ் நாட்டிற்கு நன்றி என்றார்.
இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், கர்நாடகாவில் தக் லைஃப் படத்திற்கு தடை விதிக்கப்பட்டது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், இதைப்பற்றி இன்னொரு நாள் பேசிக்கொள்ளலாம் என்று கூறிவிட்டார். மேலும், தக் லைஃப் படத்தை உலகத்தரத்தில் உருவாக்கி இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க | தக் லைஃப் ப்ரீ-புக்கிங் வசூல்! மொத்தம் இத்தனை கோடியா? எவ்ளோன்னு பாருங்க..
மேலும் படிக்க | தக் லைஃப் ரிலீஸ் ஆகவில்லை என்றால் கர்நாடகாவிற்குதான் பிரச்சனை! கமலுக்கு இல்லை..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









