Thug Life Movie OTT Release : மணிரத்னம்-கமல் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம், விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
தக் லைஃப் திரைப்படம்:
கடந்த 1 மாத காலமாக, இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்த ஒரு படத்தின் பெயர், தக் லைஃப். நாயகன் படத்திற்கு பிறகு, 38 வருடங்கள் கழித்து இணையும் கமல்-மணிரத்னமின் கூட்டணி என்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. இந்த படத்தில் கமலுக்கு இணையான ரோலில் சிம்பு நடத்திருந்தார். அபிராமி, த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷமி, நாசர், ஜோஜு ஜார்ஜ் என பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தின் நடித்தது, போனஸாக இருக்கும் என்று ரசிகர்களால் பார்க்கப்பட்டது.
தக் லைஃப் படத்தை கண்டிப்பாக தியேட்டருக்கு வந்த பார்க்க வேண்டும் என்று படக்குழுவினர் ஊர் ஊராக சென்று படத்தை ப்ரமோட் செய்தனர். போதாக்குறைக்கு, கமல் “தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது” என்று பேசியது சர்ச்சையாகிப்போக, கர்நாடகாவில் இப்படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது.
படம் கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியான போது அதை பார்க்க ரசிகர்கள் ஆசை ஆசையாக தியேட்டர் சீட்டில் சென்று அமர்ந்தனர். ஆனால், “ஏன்டா வந்தோம்” என்று நினைக்கும் அளவிற்கு அவர்களை படத்தின் 2 மணி நேரம் சோதித்தாக பலர் விமர்சனங்களை தெரிவித்தனர். கமல்-மணிரத்னமிடம் இருந்து இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை என்பது படம் பார்த்தவர்களின் கருத்தாக இருந்தது.
அதுக்குள்ள ஓடிடி ரிலீஸ்?
தக் லைஃப் படம் வெளியாகி 5 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், படம் மொத்தமாக ரூ.35 கோடியைத்தான் தாண்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது இந்திய அளவு வசூல் மட்டும் அல்ல, உலகளவு வசூல். தமிழ்நாட்டில் மட்டுமன்றி, வெளிநாட்டு விமர்சகர்களே படத்தை கலாயக்கும் அளவிற்கு தக் லைஃப் படம் இருப்பதாக இணையத்தில் ரசிகர்கள் பேசிக்கொள்கின்றனர். இந்த நிலையில், தக் லைஃப் படம் குறித்து படக்குழு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாம்.
- The team is cancelling the OTT premiere deal that was scheduled for 8 weeks after the theatrical release.
Talks going with #NETFLIX #KamalHaasan #ManiRatnam #SilambarasanTR pic.twitter.com/HlAj3ixJfX
— Movie Tamil (@MovieTamil4) June 9, 2025
தியேட்டரில் ரிலீஸானதற்கு 8 வாரங்கள் கழித்து, தக் லைஃப் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட ஆரம்பத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த முடிவை தற்போது படக்குழுவினர் மாற்றிக்கொண்டுள்ளனராம். படத்தை, 8 வாரங்களுக்கு முன்பாகவே வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனராம்.
எப்போது வெளியாகும்?
தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளம் பெற்றிருக்கிறது. சுமார் ரூ.149.7 கோடி கொடுத்து தக் லைஃப் படத்தை இந்த நிறுவனம் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், படம் தியேட்டர்களில் ஓடாததால், இதனை முன்கூட்டியே ஓடிடியில் வெளியிடலாம் என்று படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசிக்கொள்கின்றனர். இதையடுத்து, இந்த ஜூன் மாத இறுதிக்குள் படத்தை ஓடிடியில் பார்க்கலாம் என்று கிசுகிசுக்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போலத்தான் கடந்த ஆண்டு இந்தியன் 2 திரைப்படமும் ஜூலை 12ஆம் தேதி வெளியானது. இதன் ஓடிடி ரிலீஸும் 8 வாரங்கள் கழித்து இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் தியேட்டர்களில் சொதப்பியதால் 4 வாரத்திலேயே நெட்ஃப்ளிஸ்கில் வெளியாகி விட்டது.
மேலும் படிக்க | நாயகன் படத்தின் காப்பியா தக் லைஃப்? இரண்டிலும் ஒரே மாதிரி இருக்கும் 4 விஷயங்கள்!
மேலும் படிக்க | தக் லைஃப் படத்தில் பாடல்கள் வெட்டப்பட்டது ஏன்? மணிரத்னம் சொன்ன பதில்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ