மணிரத்தினம் இயக்கத்தில் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் நடித்திருக்கும் படம் தக் லைப் (Thug Life). நாயகன் படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் இணைகிறார்கள் என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்தே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. அதன் பிறகு இந்த படத்தில் சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் நடிக்கிறார்கள் என்றதும் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமானது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்க ஏஆர் ரகுமான் இசையமைத்து உள்ளார். சமீபத்தில் எழுந்த தமிழா? கன்னடமா? என்ற சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் தக் லைப் (Thug Life) படம் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க | தக் லைஃப் ப்ரீ-புக்கிங் வசூல்! மொத்தம் இத்தனை கோடியா? எவ்ளோன்னு பாருங்க..
படத்தின் கதை!
டெல்லியில் அண்ணன் தம்பியான நாசர் மற்றும் கமல் கேங்ஸ்டர்களாக இருந்து வருகின்றனர். ஒரு எதிர்பாராத துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிறு வயது சிம்புவை தத்தெடுத்து தனது மகனாக வளர்கிறார் கமல். ஒரு கட்டத்தில் கமலை அவரது கூட்டமே எதிர்க்கின்றனர், கொலை செய்யவும் திட்டமிடுகின்றனர். இந்த சதி திட்டத்தில் இருந்து கமல் தப்பித்தாரா? இல்லையா? கமல் அனைவரையும் எப்படி பழிவாங்கினார் என்பதே தக் லைப் (Thug Life) படத்தின் கதை.
படத்தின் முதல் 15 நிமிட காட்சிகள் படு பயங்கரமாக இருந்தது. ஒரு மேன்சனில் நடக்கும் துப்பாக்கிச் சூடு காட்சிகளும், அதனை படமாக்கப்பட்ட விதமும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக இளம் வயது கமலை காட்டிய ஒவ்வொரு காட்சிகளும் கைத்தட்டல்களை பெற்றது. முதல் பாதியில் சிம்புவிற்கும் கமலுக்கும் உள்ள பாண்டிங் நன்றாக இருந்தது, ஒரு சில இடங்களில் நடிப்பில் கமலையே தூக்கி சாப்பிட்டு செல்கிறார் சிம்பு. கமலின் மனைவியாக நடித்திருக்கும் அபிராமி தனது அனுபவத்தை இந்த படத்தில் சிறப்பாக காட்டியுள்ளார். திரிஷாவிற்கு ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் என்றாலும், அந்த கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார். நாசர், ஜோஜு ஜார்ஜ், வையாபுரி ஆகியோர் அந்தந்த கதாபாத்திரங்களில் தனித்து நிற்கின்றனர்.
கமல்ஹாசன் இந்த படத்தில் சற்று வித்தியாசமான ஒரு தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மணிரத்தினத்தின் மேக்கிங்கில் படம் ஓரளவிற்கு தப்பித்து விடுகிறது. கமல் மற்றும் சிம்பு போன்ற பெரிய நட்சத்திரங்கள் இருப்பதால் தான் தக் லைப் (Thug Life) படத்தை முழுவதும் பார்க்க முடிகிறது. அவர்கள் இல்லை என்றால் சுத்தமாக தேறிருக்காது. கதையாகவே மிகவும் பழையதாக இருப்பதால், திரைக்கதையில் எவ்வளவு வேலை பார்த்து படத்தை காப்பாற்ற முடியவில்லை. ரகுமானின் பின்னணி இசை மற்றும் பாடல்கள், படத்தின் ஒளிப்பதிவு பல இடங்களில் படத்திற்கு பலம் சேர்க்கிறது.
கமல் மற்றும் மணிரத்தினம் இருவரும் 35 வருடங்களுக்கு பிறகு இணைவதால், அனைவருக்கும் இருக்கும் அந்த எதிர்பார்ப்பை தக் லைப் (Thug Life) படம் பூர்த்தி செய்யவில்லை. 35 வருடங்களுக்கு பிறகு இப்படி ஒரு கதையில இணைந்து நடிக்க வேண்டுமா என்ற கேள்வி படம் பார்க்கும் அனைவரது மத்தியிலும் எழுகிறது. அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது படம் பார்க்கும் நமக்கே தெரிகிறது. அந்த அளவிற்கு தான் திரைக்கதையின் பலம் உள்ளது. சண்டைக் காட்சிகள் படமாக்க விட்டு விதம் நன்றாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் சலிப்பு தட்டுகிறது. படத்தில் ட்விஸ்ட் என்று வரும் எதுவுமே உண்மையில் ட்விஸ்ட்டாக இல்லை. இது போன்று படம் முழுவதும் நிறைய பிரச்சனைகள் இருப்பது நல்ல ஒரு படம் பார்க்கும் உணர்வை தரவில்லை.
மேலும் படிக்க | தக் லைஃப் ரிலீஸ் ஆகவில்லை என்றால் கர்நாடகாவிற்குதான் பிரச்சனை! கமலுக்கு இல்லை..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









