எதிர்பார்ப்புகள் ஏமாற்றமா? தக் லைஃப் படம் எப்படி? X தள விமர்சனம்!

Thug Life Movie X Review Tamil : கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் தக் லைஃப் திரைப்படத்திற்கு ரசிகர்கள் X தளத்தில் விமர்சனங்களை பகிர்ந்த வண்ணம் இருக்கின்றனர்.  

Written by - Yuvashree | Last Updated : Jun 5, 2025, 12:49 PM IST
  • தக் லைஃப் திரைப்படத்தின் X விமர்சனம்
  • படம் ஏமாற்றியதா?
  • ரசிகர்கள் கூறுவது என்ன?
எதிர்பார்ப்புகள் ஏமாற்றமா? தக் லைஃப் படம் எப்படி? X தள விமர்சனம்!

Thug Life Movie X Review Tamil : மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் வெளியாகி இருக்கும் படம், தக் லைஃப். இந்த படம், ஜூன் 5ஆம் தேதியான இன்று வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் X தள விமர்சனத்தை இங்கு பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

தக் லைஃப்:

மொழி சர்ச்சைக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் படம், தக் லைஃப். கமல், “தமிழ் கன்னடத்தில் இருந்து பிறந்தது” என்று கூறிய ஒரு வாக்கியம் பெரும் புயலை கிளப்பியது. கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட முடியாது என்று கன்னடர்கள் பிரச்சனை செய்தனர். மன்னிப்பும் கேட்க முடியாது, கர்நாடகாவிலும் படத்தை ரிலீஸ் செய்ய மாட்டேன் என முடிவு செய்த கமல், ரிஸ்க எடுத்து பான்-இந்திய அளவில் படத்தினை வெளியிட்டிருக்கிறார்.

தக் லைஃப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்திருக்க காரணம், கமல்-மணிரத்னமின் பல வருடங்கள் கழித்த வெற்றி கூட்டணிதான். இதே போல படத்தில் சிலம்பரசன், அபிராமி, த்ரிஷா என ஒரு நட்சத்திர பட்டாளமே இருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் படத்தின் பெரிய ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது.

கலவையான விமர்சனங்கள்..

தக் லைஃப் திரைப்படம், இந்தியாவில் வெளியாவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் வெளிநாடுகளில் ரிலீஸாகி விட்டது. இதனால், அங்கு படத்தை பார்த்தவர்கள், படத்திற்கு கலவையான விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர். அப்படி அவர்கள் என்ன கூறியிருக்கின்றனர்? இங்கு பார்ப்போம்.

சுமாராக இருக்கிறது..

தக் லைஃப் திரைப்படத்திற்கு அமெரிக்காவில் இருந்து பார்த்த ஒருவர் அதற்கு விமர்சனத்தை கொடுத்திருக்கிறார். 

#ThugLife Review

FIRST HALF

Decent

Starts well but then gets into some lags#KamalHaasan shines and his De-Ageing is neatly done#SilamabarasanTR is fire

Technical Aspects

Music

Supporting Cast#ThugLifeFDFS #ThugLifeReview #Trisha #ashokselvan #ManiRatnam pic.twitter.com/qi51dSpHO3
— Swayam Kumar Das (@KumarSwayam3) June 5, 2025

ஒரு முறை பார்க்கும் அளவிற்கு படம் பொழுதுபோக்காக இருப்பதாகவும், தியேட்டர் அனுபவம் நன்றாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும், திரைக்கதை நன்றாக இருந்தாலும், ஆங்காங்கே மெதுவாக நகர்வதாக கூறியிருக்கிறார்.

யூகிக்க கூடிய கதை:

தக் லைஃப் படத்தின் கதை, முன்கூட்டியே யூகிக்க கூடியதாக இருப்பதாகவும், கதை எமோஷனே இல்லாமல் நகர்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Painful 1st half, so far movie runs flat with predictable storyline without emotion.Kamal deageing is good..!! No standout episode, Should have avoided trailer..!! Hope 2nd half saves.. #ThugLife
— Peter Reviews (@urstrulyPeter) June 4, 2025

முதல் பாதிதான் இப்படி, 2ஆம் பாதி எப்படியிருக்கும் என தெரியவில்லை என்று ஒருவர் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

கமல்ஹாசனுக்கு கம்-பேக்:

ஒருவர், கமல்ஹாசனுக்கு இது கம்-பேக் படமாக இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

#ThugLifeFDFS #ThugLifeBlockBuster

Wow wow wow what a first half and a stellar interval block 

Rock solid come back by #KamalHassan sir#ThugLife
— C.R. Madhusudhan (@isatyagrahaa) June 5, 2025

அதே போல, இடைவேளை காட்சியும் நன்றாக இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

ஏன் இவ்வளவு நெகடிவ் விமர்சனங்கள்?

தக் லைஃப் படத்திற்கு 10ல் 8 நெகடிவ் விமர்சனங்களாகத்தான் இருக்கின்றன. ஒரு வேளை மொழி பிரச்சனையில் கமல் பேசியதற்கு ஆதரவு தெரிவிக்காதவர்கள் இப்படி வெறுப்பை பரப்புகிறார்களா, அல்லது உண்மையிலேயே படம் நன்றாக இல்லையா என்பது தெரியவில்லை. 2-3 நாட்கள் சென்ற பின்புதான் படத்தின் உண்மையான கருத்து என்ன என்பது தெரியும்.

மேலும் படிக்க | மாமன் vs DD நெக்ஸ்ட் லெவல்: எந்த படம் நல்லா இருக்கு? X தள விமர்சனம்!

மேலும் படிக்க | சூர்யாவின் சம்பவமா..சூர்யாவுக்கு சம்பவமா? ரெட்ரோ படம் எப்படி? X தள விமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News