சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் 'பாகுபலி-2 தமிழ் இசை வெளியீட்டு' நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, தயாரிப்பாளர் ஷோபு, பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொள்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுமார் ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவான 'பாகுபலி 2', ஏற்கனவே வசூல் வேட்டையை துவங்கியிருப்பதாகவும், தியேட்டர்களில் திரையிடுவதற்கு முன்னதாகவே, பாகுபலி 2 படம், தயாரிப்பாளர்களுக்கு கோடிக்கணக்கில் வசூலை குவித்து வருகிறது. நாடு முழுவதும், 6,500 திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. 


படத்தை தயாரித்துள்ள அர்க்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனம், தியேட்டர் விற்பனை மூலம், 250 கோடி ரூபாயும், வெளிநாட்டு உரிமை மூலம், 100 கோடி ரூபாயும் அள்ளியுள்ளது. மேலும் டிவி உரிமை மூலம், 78 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இந்த திரைப்படத்தின் அடிப்படையில், காமிக்ஸ், நாவல்கள், வீடியோ கேம்ஸ் தயாரிக்கும் உரிமை அளித்ததன் மூலம், 10 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.


'பாகுபலி 2' வெளியீட்டிற்கு முன்பாகவே, இயக்குனர் ராஜமௌலி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


 



 


 



 


 



 


இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியை டுவிட்டர் வலைத்தளத்தில் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை சுமார் 3 


மில்லியனை எட்டியதற்கு அவர் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.