ரெட்ரோ ப்ரீ-புக்கிங் வசூல்ச சாதனை..போதை வழக்கில் நடிகர் விடுதலை! டாப் 5 சினிமா செய்திகள்

Today Top 5 Tamil Cinema News : தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங்கில் பல செய்திகள் இருக்கின்றன. அதில் டாப் 5 செய்திகள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.

Written by - K.Nagappan | Edited by - Yuvashree | Last Updated : Apr 29, 2025, 06:04 PM IST
  • இன்றைய டாப் 5 சினிமா செய்திகள்
  • ரெட்ரோ to ஷைன் டாம் சாக்கோ
  • இந்த செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்
ரெட்ரோ ப்ரீ-புக்கிங் வசூல்ச சாதனை..போதை வழக்கில் நடிகர் விடுதலை! டாப் 5 சினிமா செய்திகள்

Today Top 5 Tamil Cinema News : இன்றைய டாப் 5 தமிழ் சினிமா செய்திகள். இதோ பார்க்கலாம்..

படங்களின் ரீ-ரிலீஸ்!

1.தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வரும் திரைப்படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. ரஜினியின் பாபா, கமலின் வேட்டையாடு விளையாடு, ஆளவந்தான், விஜய்யின் கில்லி, சச்சின், அஜித்தின் வாலி, தீனா உள்பட பல படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டன.  இதனைத் தொடர்ந்து  அஜித்தின் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, சூர்யாவின் ‘காக்க காக்க’, விஜய்யின் ‘தெறி’, பாரதிராஜாவின் ‘கிழக்கு சீமையிலே’ ஆகிய படங்களை மறு வெளியீடு செய்ய உள்ளதாக தயாரிப்பாளர் தாணு கூறியுள்ளார்.

2.நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள  'ஹிட் -தி தேர்ட் கேஸ்' திரைப்படம் மே 1-ம் தேதி தெலுங்கு, தமிழ், இந்தி உட்பட 5 மொழிகளிலும் வெளியாகவுள்ளது .இத்திரைப்படத்தை சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார்.மேலும் இந்தப் படத்தை தமிழில் சினிமாக்காரன் நிறுவனம் வெளியிடுகிறது. ஹைதராபாத்தில் நடந்த இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் ராஜமவுலி பேசுகையில், தான் இயக்க உள்ள ‘மகாபாரதம்’ படத்தில் நானி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், தற்போது அவரை மட்டுமே ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகர் உயிரிழப்பு..

3.ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் சீசன் 3ல் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந் பாலிவுட் நடிகர்  ரோஹித் பாஸ்ஃபோரின் மர்ம மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான அஸ்ஸாமிற்குச் சென்ற  ரோஹித் பாஸ்ஃபோர்,  நண்பர்களுடன் கர்பங்கா வனப்பகுதி நீர்வீழ்ச்சிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கர்பங்கா வனப்பகுதி நீர்வீழ்ச்சியில் ரோஹித் விழுந்துவிட்டதாகப் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்த ரிசர்வ் போலீஸார் ரோஹித்தை மீட்டு கவுகாத்தி மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளார். ரோஹித் உடலை பிரேதப் பரிசோதனை செய்து பார்த்ததில் தலை, முகம்  உட்பட உடம்பு முழுக்க காயம்  இருப்பதாக மருத்துவர்களும், போலீஸாரும் தெரிவித்துள்ளனர். ரோஹித்தை அவரது நண்பர்களே அடித்துக் கொலை செய்துவிட்டதாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். 

ரெட்ரோ ப்ரீ-புக்கிங்:

4.நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ'  திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.  சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தப் படம் மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்தில் உலக அளவில் சுமார் 3,000-க்கும் அதிகமான திரையரங்குகளிலும், தமிழ்நாட்டில் மட்டும் 500 திரையரங்குகளிலும் வெளியாகிறது. தற்போது கோடை விடுமுறை என்பதால் ரெட்ரோ படம் பெரிய அளவில் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விடுதலை..

5.பிரபல மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ, தமிழில் பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், குட் பேட் அக்லி முதலிய திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில், கொச்சியில் உள்ள ஓட்டலில் கஞ்சா விற்பனை செய்ததாக தஸ்லீமா என்பவரை போலீஸார் கைது செய்தனர். அப்போது அந்த ஓட்டலில் இருந்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ தப்பியோடிய நிலையில், சிசிடிவி காட்சியின் அடிப்படையில் ஷைன் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டார். இவரைத் தொடர்ந்து, ஸ்ரீநாத் பாசி மற்றும் நடிகை செளமியா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், போலீஸார் விசாரணையில் இந்த மூவருக்கும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. ஆனால், இவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியான நிலையில், நடிகர் ஷைன் டாம் சாக்கோவை போலீஸார் தொடுபுழாவில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் அவரது குடும்பத்தினரின் ஒப்புதலுடன் சேர்த்துள்ளனர். மேலும், ஸ்ரீநாத் பாசி மற்றும் சௌமியா ஆகியோரை விசாரணையிலிருந்து விடுவித்துள்ளனர்.

மேலும் படிக்க | 69 வயது நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா! அவர் யார் தெரியுமா?

மேலும் படிக்க | 38 வயதில் கோடிகளில் புரளும் சமந்தாவின் சொத்து மதிப்பு.. ஒரு படத்துக்கு சம்பளம் இவ்வளவா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News