2025-ல் முதல் நாளில் அதிக வசூல் பெற்ற டாப் 5 படங்கள்! முதல் இடத்தில் எந்த படம் தெரியுமா?

Tamil Films With Biggest Box Office Opening In 2025 : 2025ஆம் ஆண்டு தொடங்கி, சில மாதங்களே ஆகின்றது. இந்த சமயத்தில், இதுவரை வெளியான சில திரைப்படங்கள், முதல் நாளில் நல்ல வசூலை பெற்றிருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : May 6, 2025, 11:40 AM IST
  • 2025ல் அதிக வசூல் பெற்ற படங்கள்!
  • முதல் இடத்தில் எந்த படம்?
  • ஒரே லிஸ்டில் 2 அஜித் படங்கள்!
2025-ல் முதல் நாளில் அதிக வசூல் பெற்ற டாப் 5 படங்கள்! முதல் இடத்தில் எந்த படம் தெரியுமா?

Tamil Films With Biggest Box Office Opening In 2025 : 2025ஆம் ஆண்டு தொடங்கி, சில மாதங்கள் கடந்து விட்டது. கடந்த ஆண்டு போல இல்லாமல், இந்த ஆண்டு தொடக்கம் முதலே பல பெரிய படங்கள் வெளியாக ஆரம்பித்து விட்டது. இந்த நிலையில், இதுவரை இந்தாண்டில் வெளியான படங்களில், முதல் நாளில் அதிக பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனை கொடுத்த படங்கள் எவை? என்பதை இங்கு பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

5.மதகஜராஜா:

“லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்” என்ற டைலாக்கிற்கு எடுத்துக்காட்டாக அமைந்த படம், மதகஜராஜா. விஷால் ஹீரோவாக நடித்திருந்த இந்த படம்,12 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. சுந்தர்.சி இயக்கத்தில் அப்போதே வெளியாக இருந்த இந்த திரைப்படம், நிதி சிக்கல் காரணமாக அப்போது வெளியாகாமல் இருந்தது. இதில், சந்தானம், ஆர்யா, அஞ்சலி, வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி, மதகஜராஜா திரைப்படம் வெளியானது. இந்த படம், வெளியான முதல் நாளே சுமார் ரூ.3.20 கோடி கலெக்ட் செய்ததாக கூறப்படுகிறது. இறுதியில், உலகளவில் சுமார் ரூ.63 கோடியை இப்படம் வசூலித்ததாக கூறப்படுகிறது. 

4.டிராகன்:

இந்த ஆண்டின், மிகப்பெரிய ஹிட் படமாகவும், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற படமாகவும் கருதப்படுகிறது, டிராகன் படம். இதில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

கல்லூரியில் படிக்கும் போது ஊதாரியாக சுற்றுவதை கெத்து என நினைத்துக்கொண்டிருந்த மாணவன், இறுதியில் அதே கல்லூரிக்கு வந்து தனது தவறுகளை திருத்திக்கொள்கிறான். இதுதான் டிராகன் படத்தின் ஒன்லைன் கதை. இது, இளசுகள் மத்தியில் பெரிதாக கொண்டாடப்பட்ட படமாக மாறியது. இதனை அஷ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார். இந்த படம், முதல் நாளிலேயே சுமார் ரூ.5.75 கோடி வரை வசூலித்தது. இறுதியில், மொத்தமாக ரூ.150 கோடி கலெக்ட் செய்ததாக கூறப்படுகிறது.

3.ரெட்ரோ:

கடந்த சில ஆண்டுகளாக கவிழ்ந்து கிடந்த சூர்யாவின் மார்கெட்டை கங்குவா படம் தூக்கி விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த படமோ, சூர்யாவிற்கு பெரும் தோல்வியாக அமைந்தது. அடுத்ததாக அவரை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்த படம், ரெட்ரோ.

சில நாட்களுக்கு முன்னர் வெளியான ரெட்ரோ படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. அது மட்டுமல்ல, இது, சூர்யாவிற்கு தமிழகத்தில் பெரிய ஓபனிங் கொடுத்த படமாகவும் இருக்கிறது. இந்த படம், முதல்னாளிலேயே சுமார் ரூ.14  கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது.

2.விடாமுயற்சி:

அஜித்-மகிழ் திருமேனி கூட்டணியில் உருவான படம், விடாமுயற்சி. இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தனர். படப்பிடிப்பில் தாமதம், வெளியீட்டில் தாமதம் என ஆரம்பம் முதலே இந்த படம் குறித்த அனைத்து ஆரம்பங்களும் தடங்களாகவே இருந்தது. ஒரு வழியாக படம் கடந்த பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி வெளியானது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் 20% கூட படம் பூர்த்தி செய்யவில்லை என்று கூறப்பட்டது. இப்படம், முதல் நாளில் ரூ.25.5 கோடி வசூலித்திருந்தது. இறுதியில், ரூ.100 கோடி வசூலித்தும், பாக்ஸ் ஆபிஸில் இப்படம் தோல்வியை தழுவியதாக கூறப்பட்டது.

1.குட் பேட் அக்லி:

பெரிய நடிகர், கொஞ்சம் மசாலா தூவிய காட்சிகள், பிற படங்களின் ரெஃபரன்ஸ் இருந்தா போதும், படம் ஹிட் ஆகிவிடும் எனும் லாஜிக்கிற்கு எடுத்துக்காட்டாக அமைந்த படம் குட் பேட் அக்லி. அஜித் குமார் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை அவரது ரசிகரும் இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.

இப்படம், கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி வெளியானது. முதல் நாளில் இப்படம், சுமார் 28 கோடி வரை கலெக்ட் செய்ததாக கூறப்படுகிறது. மொத்தமாக இப்படம், 246 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | 2025-ன் முதல் தோல்வி படம்! 100 கோடி வசூலித்தும் பாழாப்போச்சு..எந்த தமிழ் படம் தெரியுமா?

மேலும் படிக்க | 3 மாதம்..72 படங்களில் 5 மட்டுமே ஹிட்!! என்ன காரணம் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News