Actors Reactions On Operation Sindoor : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதில், சுற்றுலா பயணிகள், உள்ளூர் வாசிகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டுமென இந்தியா காத்திருந்த நிலையில், மே 7ஆம் தேதியான இன்று நள்ளிரவு முதல் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ எனும் தாக்குதலை ஆரம்பித்தது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் இந்த தாக்குதலானது நடந்தது.
ஆப்ரேஷன் சிந்தூர்:
பஹல்காம் தாக்குதலில் 26 பேரை கொன்று, அவர்களின் மனைவிகளின் சிந்தூரை (திருமணத்திற்கு பின் வைக்கப்படும் குங்குமம்) அளித்ததற்கு பதிலடி கொடுக்கும் தாக்குதல் என்பதால் இதற்கு ஆப்ரேஷன் சிந்தூர் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாகிஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதிகளில் இந்த தாக்குதலானது நடந்தது. குலாபூர், பஹவால்பூர் உள்ளிட்ட 9 இடங்களில் இந்த தாக்குதலானது நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. பயங்கரவாதத்தை பரப்பும் பாகிஸ்தானுக்கு எதிராக இப்படியொரு தாக்குதல் நடப்பதை நாடே காெண்டாடி வருகிறது. இந்த நிலையில், இது குறித்து சில நடிகர்களும் அரசியல் கட்சி தலைவர்களும் தங்களின் இணையதள பக்கங்களில் பதிவுகளை வெளியிட்டு இருக்கின்றனர்.
ரஜினிகாந்த்:
நடிகர் ரஜினிகாந்த், ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிரார். அதில், “போராளிகளின் சண்டை தொடங்கி விட்டது. வந்த வேலை முடியும் வரை நிறுத்த வேண்டாம்” என்று கூறியிருக்கிறார்.
The fighter's fight begins...
No stopping until the mission is accomplished!
The entire NATION is with you. @PMOIndia @HMOIndia#OperationSindoor
JAI HIND
— Rajinikanth (@rajinikanth) May 7, 2025
கூடவே பிரதமர் நரேந்திர மோடியை டேக் செய்துள்ள அவர், ஒட்டுமொத்த நாடும் அவருடன் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். கூடவே, ஜெய் ஹிந்த் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
விஜய் ட்வீட்:
நடிகரும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவருமான விஜய், சில நாட்களுக்கு முன்பு தனது கடைசி படமான ஜன நாயகன் திரைப்படத்தில் பிசியாக இருந்தார். தற்போது சென்னை திரும்பியிருக்கும் அவர், தனது தவெக பக்கத்தில் ஒரு ட்வீட்டை வெளியிட்டிருக்கிறார். அதில், “இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்!
— TVK Vijay (@TVKVijayHQ) May 7, 2025
சிவகார்த்திகேயன் ட்வீட்:
நடிகர் சிவகார்த்திகேயன், கடைசியாக அமரன் படத்தில் இந்தியா ராணுவ அதிகாரியாக நடித்திருந்தார். புல்வாமா தாக்குதல் சமயத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் அமரன். சிவகார்த்திகேயனின் தந்தையும் காவல் துறையில் பணியாற்றியவர். இதனாலேயே, அவருக்கு காவல்துறை, ராணுவத்தினர் ஆகியார் மீது மிகுந்த மரியாதை இருப்பதாக சில நேர்காணல்களில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ஆப்ரேஷன் சிந்தூர் குறித்தும் அவர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
#OperationSindoor
This is the face of the Indian Army
Jai Hind— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) May 7, 2025
“இதுதான் இந்திய ராணுவத்தின் முகம்” என்ற தனது அமரன் படத்தின் டைலாக்கை குறிப்பிட்டு ஜெய் ஹிந்த் என பதிவிட்டிருக்கிறார்.
தமிழ் நடிகர்களை தாண்டி, பிற மொழி நடிகர்களும் ஆப்ரேஷன் சிந்தூருக்கு ஆதரவாக பதிவினை வெளியிட்டிருக்கின்றனர்.
பவன் கல்யாண்:
நடிகரும், ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண், ஆப்ரேஷன் சிந்தூருக்கு ஆதராக பதிவிட்டிருக்கிறார்.
वीरता जहाँ पर नहीं, पुण्य का क्षय है,
वीरता जहाँ पर नहीं, स्वार्थ की जय है।
-Dinakarదశాబ్దాలుగా సహనం.. సహనం!
మితిమీరిన సహనంతో చేతులు కట్టేసిన సమస్త భారతం కి "ఆపరేషన్ సింధూర్" తో తిరిగి భారత సమాజంలో వీరత్వాన్ని నింపిన త్రివిధ… pic.twitter.com/sk9BvDHfRE
— Pawan Kalyan (@PawanKalyan) May 7, 2025
இந்த பதிவில் அவர் இந்தியாவின் முப்படைக்கும் பின்னால் நின்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என குறிப்பிட்டிருக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான்:
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இமோஜிக்களை மட்டும் வைத்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.அதில், அவர் அமைதியை குறிக்கும் பறவையை இணைத்திருக்கிறார். கூடவே ஒரு ஹார்ட் மற்றும் இந்தியாவின் கொடியையும் இணைத்துள்ளார்.

இதற்கு, என்ன அர்த்தம் என்று அவரது ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | பஹல்காம் தாக்குதல் எதிரொலி! பாகிஸ்தான் நடிகர்களுக்கு எதிராக இந்தியா எடுத்த முடிவு..
மேலும் படிக்க | கமல்ஹாசன் to மோகன்லால்: பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பிரபலங்கள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









