)
Top Cooku Dupe Cooku 2 New Contestent Names: கடந்த ஆண்டு மக்கள் மத்தியில் அதிகம் டிரெண்ட்டான் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி தற்போது மீண்டும் புதிய போட்டியாளர்களுடன் தொடங்கயுள்ளது. இதில் பங்கேற்கப் போகும் போட்டியாளர்களின் முழு விவரத்தை இங்கே காணலாம்.
டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி சீசன்:
குக் வித் கோமாளி நிகழ்ச்சி போன்று சன் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான நிகழ்ச்சி டாப் குக்கு டூப் குக்கு. இந்த நிகழ்ச்சியில் நடிவாராக வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் ராம்மோகன் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியின் வின்னராக நரேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. அதனுடன் இந்த சீசன் முடிவடைந்த நிலையில் இதன் இரண்டாவது சீசன் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தனர்.
டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி சீசன் 2 எப்போது ஆரம்பம்:
இதனிடையே தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் பிரம்மாண்டமாக வருகிற வருகிற ஆகஸ்ட் `17 ஆம் தேதி ஆரம்பம் ஆகயுள்ளது. இது தொடர்பான ப்ரோமோ வீடியோ அண்மையில் வெளியானது. அதுமட்டுமின்றி இந்த சீசன் இல் விஜே ராகேஷ் உடன் சிவாங்கி தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார். இதனால் இந்த சீசன் மீதான எதிர்பார்ப்பு இன்னுமும் அதிகரித்துள்ளது.
டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2 : டூப் குக்கு முழு விவரம்
கடந்த சீசன் போலவே இந்த சீசனிலும் டூப் குக்காக அதிர்ச்சி அருண், பாரத், தீனா, மோனிஷா, முகுந்த், சௌந்தர்யா, கதிர் ஆகியோர் கலந்துக் கொள்ள உள்ளனர். இவர்கள் மூன்று அணியாக பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை வழி நடத்துவதற்காக கடந்த சீசன் போலவே இந்த சீசனனிலும் மூன்று செஃப் இருப்பார்கள்.
டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2: 8 புதிய போட்டியாளர்கள் அறிமுகம்
இந்நிலையில் தற்போது இதில் கலந்துகொள்ளப் போகும் 8 போட்டியாளர்களின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த சீசன் இல் கிரண், நடிகை பிரியங்கா, சீரியல் நடிகை டெலனா, ஷிவானி நாராயணன், ராப் பாடகர் வஹீசன், நடிகை ப்ரீத்தா, நடிகர் ரோபோ ஷங்கர், மற்றும் நடிகர் பெசன்ட் ரவி ஆகிய போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ