Asha Bhosle Tamil Songs: வட இந்தியக் குயிலாக இருந்தாலும், தமிழின் உச்சரிப்பை நேர்த்தியாகக் கையாண்டு, உணர்ச்சிகரமான மெல்லிசைகள் முதல் துள்ளல் பாடல்கள் வரை அவர் வழங்கிய டாப் ஹிட் பாடல்களின் தொகுப்பு இதோ.

Asha Bhosle Tamil Songs: பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மாரடைப்பு காரணமாக மும்பையில் இன்று (ஏப்ரல் 12) காலமானார். அவருக்கு வயது 92. மும்பை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவரின் இறுதிச்சடங்குகள் நாளை (ஏப்ரல் 13) மும்பை சிவாஜி பார்க் பகுதியில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.
சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாக இசைத் துறையில் பங்காற்றிய அவர், இந்தி, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியிருக்கிறார். இவர் பாடகி லதா மங்கேஷ்கரின் இளைய சகோதரி ஆவார். இவர் திரைத்துறையினருக்கு நாட்டில் வழங்கப்படும் உச்சப்பட்ச விருதான தாதாசாகேப் பால்கே விருதை 2000ஆம் ஆண்டில் பெற்றார். 2008ஆம் ஆண்டு இந்தியாவின் 2வது மிகப்பெரிய விருதான பத்ம விபூஷண் விருதை பெற்றார்.
இந்நிலையில் இசை உலகின் சகாப்தம் ஆஷா போஸ்லே, பல மொழிகளில் பாடியிருந்தாலும் தமிழ் சினிமாவில் அவர் பதித்த முத்திரை தனித்துவமானது. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற ஜாம்பவான்களின் இசையில் அவர் பாடிய பல பாடல்கள் இன்றும் ரசிகர்களின் ஃபேவரைட். வட இந்தியக் குயிலாக இருந்தாலும், தமிழின் உச்சரிப்பை நேர்த்தியாகக் கையாண்டு, உணர்ச்சிகரமான மெல்லிசைகள் முதல் துள்ளல் பாடல்கள் வரை அவர் வழங்கிய டாப் ஹிட் பாடல்களின் தொகுப்பு இதோ.
"செண்பகமே செண்பகமே" (எங்க ஊரு பாட்டுக்காரன்)
படம்: எங்க ஊரு பாட்டுக்காரன் (1987)
இசை: இளையராஜா
நடிகர்கள்: ராமராஜன், ரேகா, சாந்திப்ரியா
"நீ பார்த்த பார்வை" (ஹே ராம்)
படம்: ஹேராம் (Hey Ram)
இசை: இளையராஜா
நடிகர்கள்: கமல்ஹாசன், ராணி முகர்ஜி
"செப்டம்பர் மாதம்" (அலைபாயுதே)
படம்: அலைபாயுதே (Alaipayuthey)
இசை: ஏ. ஆர். ரகுமான்
நடிகர்கள்: ஆர். மாதவன் மற்றும் ஷாலினி
"கொஞ்ச நேரம்" (சந்திரமுகி)
படம்: சந்திரமுகி (Chandramukhi)
இசை: வித்யாசாகர்
நடிகர்கள்: ரஜினிகாந்த், நயன்தாரா
"எங்கெங்கே" (நேருக்கு நேர்)
படம்: நேருக்கு நேர் (1997)
இசை: தேவா
நடிகர்கள்: சூர்யா, சிம்ரன்
"சாத்து நட சாத்து" (சேதுபதி ஐபிஎஸ்)
படம்: சேதுபதி ஐபிஎஸ் (Sethupathi IPS)
இசை: இளையராஜா
நடிகர்கள்: விஜயகாந்த், மீனா
"வெண்ணிலா" (இருவர்)
படம்: இருவர் (1997)
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
நடிகர்கள்: மோகன்லால், ஐஸ்வர்யா ராய்
"முத்து முத்து" (தங்கத்தின் தங்கம்)
படம்: தங்கத்தின் தங்கம் (1990)
இசை: எஸ்.ஏ. ராஜ்குமார்
நடிகர்கள்: ராமராஜன், ராகசுதா
"அதிகாலை நேரம்" (நான் சொன்னதே சட்டம்)
படம்: நான் சொன்னதே சட்டம் (1988)
இசை: இளையராஜா
நடிகர்கள்: சரண்ராஜ் மற்றும் ரேகா
"எங்க ஊரு காதல பத்தி" (புது பாட்டு)
படம்: புது பாட்டு (1990)
இசை: இளையராஜா
"பழைய விலங்கு" (மீரா)
படம்: மீரா (1992)
இசை: இளையராஜா
நடிகர்கள்: விக்ரம், ஐஸ்வர்யா
"குலுங்குதடி கொலுசு" (அணிச்ச மலர்)
படம்: அணிச்ச மலர் (1980/1981)
இசை: சங்கர் - கணேஷ்
"ஒரு தேவதை வந்து" (நான் சொன்னதே சட்டம்)
படம்: நான் சொன்னதே சட்டம் (1988)
இசை: இளையராஜா
"ஓ பட்டாம்பூச்சியே" (மீரா)
படம்: மீரா (1992)
இசை: இளையராஜா
நடிகர்கள்: விக்ரம், ஐஸ்வர்யா
இதனிடையே பாடகி ஆஷா போஸ்லே தனது 90வது வயதிலும் தொடர்ந்து பாடி தான் வந்தார். ஹன்ஸ்ராஜ் பாஹ்ல், ஓ. பி. நய்யார், மதன் மோகன், ஆர். டி. பர்மன், இளையராஜா, அனு மாலிக் முதல் ஏ. ஆர். ரஹ்மான் வரையிலான கலைஞர்களுடன் அவர் பணியாற்றியுள்ளார். அதுமட்டுமின்றி ரஃபி, முகேஷ் மற்றும் கிஷோர் முதல் பாய் ஜார்ஜ் மற்றும் ஆதித்யா நாராயண் வரையிலான பல்வேறு கலைஞர்களுடன் இணைந்து அவர் பாடியுள்ளார்.
கடந்த 1995-ஆம் ஆண்டில், உஸ்தாத் அலி அக்பர் கானுடன் இணைந்து வெளியிட்ட ஒரு இசைத் தொகுப்பிற்காக அவர் கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். ஆஷா போஸ்லே 10,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இதில் ஏறக்குறைய அனைத்து பாடல்களுமே மிகப்பெரிய அளவில் ஹிட் பாடல்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
ஆஷா போஸ்லே யார்?
ஆஷா போஸ்லே இந்தியாவின் மிகச்சிறந்த மற்றும் புகழ்பெற்ற பின்னணி பாடகிகளில் ஒருவர். இவர் 'இசைக்குயில்' லதா மங்கேஷ்கரின் இளைய சகோதரி ஆவார்.
அவர் எத்தனை பாடல்களைப் பாடியுள்ளார்?
ஆஷா போஸ்லே இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி என பல்வேறு மொழிகளில் சுமார் 12,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
அவர் எந்தெந்த இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்?
பழம்பெரும் இசையமைப்பாளர்கள் ஓ.பி. நய்யார், ஆர்.டி. பர்மன் முதல் நவீன கால இசையமைப்பாளர்களான ஏ.ஆர். ரஹ்மான், அனு மாலிக் வரை பல தலைமுறை கலைஞர்களுடன் அவர் இணைந்து பணியாற்றியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ