Tourist Family Director Love Proposal Viral Video : சசிகுமார் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம், டூரிஸ்ட் பேமலி. இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இதில் இந்த படத்தின் இயக்குநர் மேடையில் தனது காதலிக்கு செய்த ப்ரப்போஸ் வீடியோ வைரலாகி வருகிறது.
டூரிஸ்ட் பேமிலி திரைப்படம்:
கோலிவுட்டில் விரைவில் வெளியாக இருக்கும் காமெடி-குடும்ப படங்களுள் ஒன்று டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தபடத்தை அபிஷான் ஜீவிந்த் என்ற இயக்குநர் இயக்கியிருக்கிறார். இது, இவரது முதல் படமாகும். இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் மக்களை கவர்ந்தது. சசிகுமார் இதில் குடும்பத்தலைவனாக நடிக்க, அவருக்கு ஜாேடியாக சிம்ரன் நடித்திருக்கின்றார்.
குட் நைட், லவ்வர் பாேன்ற சிறிய பட்ஜெட் வெற்றிப்படங்களை கொடுத்த, மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம், டூரிஸ்ட் பேமலி படத்தையும் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில், இப்படத்தின் இயக்குநர் தனது காதலிக்கு திருமண ப்ரப்போஸ் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
காதலிக்கு மேடையில் ப்ரப்போஸ்..
டூரிஸ்ட் பேமிலி நிகழ்ச்சியில் பேசிய அப்படத்தின் இயக்குநர், அபிஷான் ஜீவந்த், தனக்கு இந்த படத்தை இயக்க வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். சிம்ரனை தனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறிய அவர், அவர் வந்த பிறகு படத்தை பற்றி அனைவரும் பேச ஆரம்பித்ததாகவும் கூறினார். நடிகர் சசிகுமார், படத்தில் வந்த 2 மகன்களுக்கு மட்டும் அல்லாது, தன்னையும் தந்தை போல பார்த்துக்கொண்டதாக தெரிவித்தார். தொடர்ந்து படத்தில் நடித்த திலக் ரமேஷ், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். கடைசியாக ஒருவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கூறிய அவர் தனது காதலியை குறிப்பிட்டார்.
Wow !! So Cute & Heartwarming clip #TouristFamily Director Abishan PROPOSES his girlfriend & asks to marriage at the pre release event pic.twitter.com/1UEW9fMlWF
— AmuthaBharathi (@CinemaWithAB) April 27, 2025
“அகிலா இளங்கோவன், எனக்கு உன்னை 6வது படிக்கும் போதிலிருந்து தெரியும். 10வது படிக்கும் போதிலிருந்து நெருக்கமாக இருக்கிறோம். இப்போது வரை அப்படி க்ளோஸாகத்தான் இருக்கிறோம். உன்கிட்ட ஒன்னே ஒன்னு கேக்கனும். வர்ர அக்டோபர் மாசம் 31ஆம் தேதி என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?” என்று தனது காதலியை பார்த்து பேசினார். தற்போது இந்த வீடியோ அனைத்து இணைதளங்களிலும் வைரலாகி வருகிறது. இது, படத்திற்கு நல்ல ப்ரமோஷனாக அமைந்ததோடு, இயக்குநரின் முகத்தையும் வெளியில் காண்பித்துள்ளது.
கதை என்ன?
கொரோனா ஊரங்கின் போது, இலங்கையின் பொருளாதாரம் சீர்குலைந்து போகிறது. அந்த சமயத்தில், அங்கு வாழும் தமிழ் குடும்பம் எப்படி வாழ்வாதாரத்தை காப்பாற்றுகின்றனர்? அதற்காக எங்கு செல்கின்றனர் என்பதை மையக்கருவாக வைத்து இந்த படம் எடுக்கபட்டிருக்கிறது.
இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் யோகி பாபு, எம்.எஸ்.பாச்கர், ரமேஷ் திலக், இளங்கோ குமாரவேல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படம், வரும் மே 1ஆம் தேதி வெளியாகிறது. இத்துடன் சூர்யாவின் ‘ரெட்ரோ’ படமும் வெளியாக இருக்கிறது.
மேலும் படிக்க | காதலர் தினத்தில் சங்கீதாவுக்கு விஜய் கொடுத்த பரிசு!! வைரலாகும் வீடியோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









