)
Tragedy After Madhan Bob Death : பல தமிழ் படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களிலும், காமெடி கதாப்பாத்திரங்களிலும் நடித்திருப்பவர் மதன்பாப். இவர், சமீபத்தில் தனது 71வது வயதில் உயிரிழந்தார்.
மதன்பாப்:
நடிகர் மதன்பாப்பின் பெயரை கேட்டவுடன், இவரது முகம் அனைவருக்கும் நினைவுக்கு வருகிறதோ இல்லையோ, இவரது சிரிப்பு அனைவருக்கும் நினைவிற்கு வந்து விடும். சிலர் ஒரு விஷயம் நகைச்சுவையாக இல்லை என்றாலும் கூட, அவர்கள் சிரிக்கும் விதத்தை பார்த்தே பிறருக்கு சிரிப்பு வரும். அப்படிப்பட்டவர்களுள் ஒருவர், மதன்பாப்.
முட்டை முட்டை விழியை விரித்துக்கொண்டு இவர் செய்யும் காமெடி, பலருக்கும் பிடித்தது போல இருக்கும். இவரது இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. சினிமாவிற்கு வந்த பின் தன் பெயரை மாற்றிக்கொண்டார். இவர் நடிகர் மட்டும் கிடையாது, சுய ஹிப்னாடிசம் கலையை கற்ற இவர் காமெடியை தாண்டி ஹெவி வெயிட் பாக்ஸிங்கையும் கற்றுக்கொண்டாராம். மேலும், இவர் ஒரு இசையமைப்பாளரும் கூட.
உயிரிழப்பு:
மதன்பாப், கடந்த சில ஆண்டுகளாகவே புற்றுநோய் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதியன்று மாலை 5 மணிக்கு உயிரிழந்ததாக ஊடகத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இவரது இறப்பு தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியது.
இவர் இறந்த செய்தியே வெளி உலகிற்கு தாமதமாகத்தான் தெரிவிக்கப்பட்டது. காரணம், அந்த நாளில் அனைவரும் கூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த செய்திகளை கவர் செய்வதில் பிசியாக இருந்தனர். அதே நேரத்தில், மதன்பாப் உயிரிழப்பதற்கு சில வருடங்களுக்கு முன்பிருந்தே திரையுலகில் பெரிதாக ஆக்டிவாக இல்லை. இதனாலும் இவர் குறித்த செய்தி அவ்வளவாக நிறைய பேரை சென்றடையவில்லை.
நேர்ந்த சோகம்..
வழக்கமாக, எந்த திரையுலக பிரபலங்கள் இறந்தாலும், அவர்களை பல நட்சத்திரங்கள் சென்று பார்ப்பது வழக்கம். நேரில் வர முடியாதவர்கள், குடும்பத்தினருக்கு ஏதேனும் ஒரு வகையில் அறுதலாவது தெரிவிப்பர். ஆனால், மதன்பாப் விஷயத்தில், அவரது இறப்பிற்கு பெரும்பாலான பிரபலங்கள் வரவில்லை என்று கூறப்படுகிறது. இவர், பிரபலமான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியிலும் முக்கிய உறுப்பினராகவும் நடுவராகவும் இருந்தார். அந்த டீமில் இருந்தும் யாருமே வரவில்லை என்று கூறப்படுகிறு.
இது குறித்து பேசிய மதன்பாப்பின் உறவினர் ஒருவர், மதன்பாப் இறந்த வீடு வெறிச்சாேடி கிடந்தததாக கூறினார். சின்னத்திரை, வெள்ளித்திரையில் டாப் நடிகர்களில் இருந்து, பிரபலமாகாத நடிகர் வரை பலருடன் மதன்பாப் பயணித்துள்ளார். ஆனால், அவர்கள் யாருமே அவரது இறப்பில் வந்து கலந்து கொள்ளவில்லை என்பது மன வேதனைக்குரிய ஒரு விஷயமாக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
இவரது இறப்பிற்கு, எஸ்.ஏ.சந்திரசேகர், கே.எஸ்.ரவிகுமார், Y.G.மகேந்திரன், டி.இமான் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். டி.ராஜேந்தர், இயக்குநர் விக்ரமன் உள்ளிட்ட சிலர் இரங்கல் தெரிவித்தனர்.
மதன்பாப்பின் கவனிக்க வேண்டிய படங்கள்:
மதன்பாப், பல படங்களில் காமெடி கதாப்பாத்திரங்களில்தான் நடித்திருக்கிறார். அதில் குறிப்பாக சதி லீலாவதி, பிரியமுடன், ஃப்ரெண்ட்ஸ் உள்ளிட்ட பல படங்களை குறிப்பிடலாம். ”மேனேஜர் சுந்தரேசன்” கேரக்டரை இவரை விட்டால் வேறு யாராலும் செய்திருக்க முடியாது. பல நூறு படங்களில் நடித்திருக்கும் இவர், நடித்த எமன் கட்டளை படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ