தமிழ் திரையுலகில் டாப் நடிகராக இருந்த விஜய், அரசியல் கட்சியை தொடங்கிய பிறகு தான் இனி படங்கள் எதிலும் நடிக்கப்போவதில்லை என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஜனநாயகன் லீக் ஆனதால், அவர் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

கோலிவுட்டின் டாப் நடிகராக இருந்த விஜய், சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் என்கிற கட்சியை தொடங்கினார். இதன் பிறகு, தான் சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்றும், முழு நேரமாக அரசியலில் ஈடுபடப்பாேவதாகவும் தெரிவித்தார். இவர், கடைசியாக நடிக்கும் படம் ஜனநாயகன் திரைப்படம்தான் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜனநாயகன் திரைப்படம்:
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த படம், ஜனநாயகன். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். முக்கிய கதாப்பாத்திரங்களில் மமிதா பைஜு, நரேன், பிரியாமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பாபி டியோல் வில்லனாக வந்தார். இந்த திரைப்படம், கடந்த ஜனவரி மாதம் 9ஆம் தேதியே வெளியாக இருந்தது. ஆனால், படத்தை மறு ஆய்வு செய்யாமல் சென்சார் சான்றிதழ் தர முடியாது என்று மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் கூறிவிட்டதால் படத்தை சொன்ன தேதியில் ரிலீஸ் செய்ய முடியவில்லை. படத்தை தயாரித்த கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் நீதிமன்ற வாசலை மிதித்தும், படத்திற்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை என்பதால், கடைசியில் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பும் நிலையே ஏற்பட்டது. இந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தை தேர்தல் சமயத்தில் ரிலீஸ் செய்ய முடியாது என்பதால், படக்குழு காத்துக்கொண்டிருந் நிலையில், சில நாட்களுக்கு முன்பு திடீரென படம் இணையத்தில் லீக் ஆகிவிட்டது.
இணையத்தில் கசிந்தது..
ஜனநாயகன் திரைப்படத்திலிருந்து விஜய்யின் இன்ட்ரோ காட்சியான 5 நிமிட சீன், முதலில் வெளியானது. அதன் பறிகு சில நிமிடங்களிலேயே முழு திரைப்படமும் இணையத்தில் கசிந்தது. இது, படக்குழுவிற்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை செய்தது யார் என்று விசாரணை நடந்து வரும் நிலையில், தற்போது இந்த கசிவால் விஜய் ஒரு அதிரடி முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் எடுத்த அதிரடி முடிவு!
ஜனநாயகன் திரைப்படம் லீக் ஆனதை தொடர்ந்து, கே.வி.என் தயாரிப்பு நிறுவனத்திற்கு இதனால் எந்த பாதிப்பும் வராமல் தான் பார்த்துக்கொள்வதாக அவர் வாக்கு கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தயாரிப்பு நிறுவனத்தின் நஷ்டத்தை ஈடு செய்யும் விதமாக புது படத்தில் விஜய் நடித்து கொடுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஹெச்.வினோத் இல்லாமல் அட்லீ, நெல்சன் திலீப்குமார், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட மூன்று பேரில் யாரேனும் ஒருவர் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இணையத்தில் இப்படியெல்லாம் பேசப்பட்டு வந்தாலும் இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
6 பேர் கைது!
ஜனநாயகன் திரைப்படத்தின் இணைய காப்பியில், Edit cut என்கிற வாட்டர் மார்க் இருந்தது. இதை பார்த்த சில தொழில்நுட்ப துறை சார்ந்த சினிமா பிரபலங்கள், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் எடிட்டரிடம்தான் இந்த காப்பி இருக்கும் என்றும், அவர்களில் யாரோதான் இதனை கசிய விட்டிருப்பார்கள் என்றும் கூறி வந்தனர். இதையடுத்து, ஜனநாயகன் திரைப்படம், இணையத்தில் கசிந்ததற்கு காரணமான 6 பேரை தமிழ்நாடு சைபர் க்ரைம் போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். இது குறித்த தீவிர விசாரணை நடைப்பெற்று வருகிறது. இது குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
திரைப்பிரபலங்கள் கண்டனம்:
ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியானது திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து படக்குழுவினர்களான பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்பட பலரை தாண்டி, இன்னும் பல திரையுலகினரும் கண்டனங்கள் தெரிவித்தனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், லாேகேஷ் கனகராஜ், விஜய் தேவரகொண்டா, சிரஞ்சீவி உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பலர் பைரசிக்கு எதிராகவும் படக்குழுவிற்கு ஆதரவாகவும் பதிவிட்டிருந்தனர். இதையடுத்து, கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இந்த விஷயத்தை சட்ட ரீதியாக கையாண்டு வருகிறது.
ஏப்ரல் 24 ரிலீஸ்?
ஜனநாயகன் திரைப்படத்தை, ஏப்ரல் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடபட்டு வருவதாகவும் இது தொடர்பாக விநியோகிஸ்தர்களுடன் தயாரிப்பாளர் ஆலோசனை கூட்டம் நடத்துவதாகவும் தகவல்; இதில் அனைவரும் ஆமோதித்தால் படம் வரும் 24ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:
கேள்வி : ஜனநாயகன் படத்தின் இயக்குநர் யார்?
பதில் : “ஜனநாயகன்” என்பது விஜய் நடித்த கடைசி திரைப்படமாக கூறப்படும் படம். இதை ஹெச். வினோத் இயக்கியுள்ளார்.
கேள்வி : இந்த படத்தில் யார் யார் நடித்துள்ளனர்?
பதில் : விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, நரேன் நடித்துள்ளனர். வில்லனாக பாபி டியோல் நடித்துள்ளார்.
கேள்வி : படம் ஏன் வெளியீட்டில் தாமதமானது?
பதில் : மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) மறு ஆய்வு செய்யாமல் சான்றிதழ் தர முடியாது என்று கூறியதால், திட்டமிட்ட தேதியில் படம் வெளியாகவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ