)
Surprise Hit Tamil Films Of 2025 : 2025ஆம் ஆண்டை பொருத்தவரை, ரசிகர்களின் எதிர்பார்ப்பை தோன்றிய சில படங்கள் பெரிதாக தோல்வியடைந்தன. ஆனால் ஒரு சில படங்கள், சர்ப்ரைஸ் ஹிட் கொடுத்தன. இதில் ஹைலைட் என்னவென்றால், அந்த படங்கள் அனைத்தும் சிறிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்தது. அப்படி ரசிகர்களை மகிழ்வித்த சில படங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
மதகஜராஜா:
விஷால் நடிப்பில் 12 ஆண்டுகளுக்கு முன்பு உருவான படம் மதகஜராஜா. சுந்தர் சி இயக்கிய இந்த படத்தில், விஷால் உடன் சேர்ந்து சந்தானம், ஆர்யா, சடகோபன் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோரும் விஷாலுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்திருந்தனர். 12 ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி இருந்த படம் என்பதால், இது ஹிட் அடிக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. இருந்தாலும் இந்த படத்தில் இருந்த காமெடியும் பஞ்ச் டயலாக்குகளும் இப்போதும் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் இருந்தது. எனவே ரசிகர்களுக்கு இந்த படம் பிடித்து போக, மொத்தம் 54 கோடிக்கும் மேல் வசூல் செய்து நல்ல விமர்சனங்களை பெற்று படம் வெற்றி பெற்றது.
சப்தம்:
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவான படம் சப்தம். ஆதி ஹீரோவாக நடித்திருந்த இந்த படம், தமிழில் வெளியான போது சில பிரச்சினை காரணமாக பல தியேட்டர்களில் ஸ்கிரீனிங் கிடைக்காமல் போனது. இருப்பினும் இந்த படத்தை பார்த்தவர்கள், படம் நன்றாக இருப்பதாக விமர்சனங்களை கொடுத்தனர். நல்ல விமர்சனங்களை பெற்றிருந்த படத்தை ஓடிடி-ல் பார்க்க ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.
டூரிஸ்ட் ஃபேமிலி:
புதுமுக இயக்குனர் அபிஷான் ஜீவிந்த் இயக்கத்தில் உருவான படம் டூரிஸ்ட் பேமிலி. கடந்த மே 1ஆம் தேதி இந்த படத்துடன் சேர்த்து ரெட்ரோ படமும் வெளியானது. சூர்யா நடித்திருந்த அந்த படத்தை காட்டிலும், டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். இந்த படத்தில் சசிகுமார், சிம்ரன், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வரும் இலங்கை மக்களை பறைசாற்றும் வகையில் இந்த கதை இருந்தது. தியேட்டர்களில் வெளியான போதும், ஓடிடி-ல் ரிலீசான போதும் இந்த படத்தை பார்த்த ரசிகர்கள், இதனைவெகுவாக பாராட்டினர்.
மாமன்:
சூரி ஹீரோவாக நடித்திருந்த படம், மாமன். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியிருந்த இந்த படம், குடும்ப பின்னணியையும், அதில் இருக்கும் பாசத்தையும் சொன்ன படமாக இருந்தது. இதில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்திருந்தார். ஸ்வாசிகா, கீதா கைலாசம், ராஜ்கிரண் உள்ளிட்டோர் இதில் முக்கிய கதாப்பாத்திரங்களாக வந்தனர். கடந்த ஜூன் மாதம் வெளியான படங்களில் நல்ல விமர்சனத்தையும் வசூலையும் பெற்ற படம், மாமன்.
DNA:
அதர்வா-நிமிஷா சஜ்ஜயன் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவான படம், DNA. குழந்தை கடத்தலையும், அதை மீட்க தாய்-தந்தை படும் பாசப்போராட்டத்தையும் காண்பித்த படமாக இது இருந்தது.
இந்த படம் வெளியான போது இது இவ்வளவு நல்ல க்ரைம் த்ரில்லர் படமாக இருக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் ரிலீஸிற்கு பின் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ