Upcoming Tami Big Films June To November 2025 : 2025ஆம் ஆண்டை பொறுத்தவரை, பல பெரிய படங்கள் வெளியாகி வருகிறது. இனி வரும் 7 மாதங்களில் என்னென்ன படங்கள் வெளியாக இருக்கிறது என்பதை இங்கு பார்ப்போம்.
2025ல் தமிழ் சினிமாவின் நிலை என்ன?
ஜனவரியில் ஆரம்பித்து டிசம்பர் மாதம் வரை, தமிழ் திரையுலகில் பெரிய படங்கள் வெளியாவது வழக்கமாக இருந்தது. ஆனால், இப்போது நிலை அப்படியில்லை. மாஸ் ஹீரோக்கள் வருடத்திற்கு 1 படத்தில்தான் நடிக்கின்றனர். 2025ஆம் ஆண்டை பொறுத்தவரை, விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப் என்று மாதத்திற்கு ஒரு பெரிய படம் வெளியாக ஆரம்பித்து விட்டது. ஆனால், அதில் ஒரு சில திரைப்படங்கள் மட்டும்தான் வெற்றி பெற்றுள்ளன. வரும் 7 மாதங்களில் ரசிகர்களை மகிழ்விக்க தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாக இருக்கின்றன. அவை என்னென்ன படங்கள் தெரியுமா?
குபேரா:
தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் குபேரா. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் தனுஷ், வித்தியாசமான தோற்றத்தில் வருகிறார். இதில் பான் இந்திய நடிகர்கள் பலர் இணைந்திருப்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. வரும் ஜூன் 20ஆம் தேதி, படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸாகிறது.
கூலி:
ரஜினிகாந்த், வேட்டையன் படத்தில் நடித்து முடித்த பிறகு கமிட் ஆன படம், கூலி. இந்த படத்தில் சத்யராஜ், சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உப்பேந்திரா உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இந்த படம், வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மதராஸி:
சூர்யா நோ சொன்ன ‘புறநானூறு’ திரைப்படத்தின் கதையத்தான் கொஞ்சம் மாற்றி பராசக்தி என்ற பெயரில் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்தி திணிப்பிற்கு எதிரான படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுதா கொங்கரா இயக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில், அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இதற்கு முன்னர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மதராஸி படம் வெளியாகிறது. இப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது.
இட்லி கடை:
தனுஷ் எழுதி, இயக்கி நடித்திருக்கும் படம், இட்லி கடை. இதில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். இந்த படம், ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டியது. ஆனால், குட் பேட் அக்லி போன்ற பெரிய திரைப்படங்கள் வெளியானது. இதையடுத்து, இட்லி கடை படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. ஒரு வழியாக இந்த படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
சர்தார் 2:
கார்த்தி நடிப்பில் வெளியாகி பெரிய ஹிட் ஆன படம், சர்தார். இந்த படத்தில் கார்த்தி இரண்டு கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படத்தின் 2வது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில், அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இந்த அப்டம், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா 45:
சூர்யாவின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கங்குவா படமும், இந்த ஆண்டு வெளியான ரெட்ரோ படமும் ரசிகர்களை பெரிதளவில் ஏமாற்றியது.
இதையடுத்து, அவர் கமிட் ஆன படம், சூர்யா 45. இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருக்கிறார். பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்த படம், வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் சூர்யா 46 படமும் பூஜையுடன் தொடங்கியது. இதுவும் நவம்பர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கிறார். வெங்கி அட்லூரி இந்த படத்தை இயக்குகிறார்.
மேலும் படிக்க | 2025-ல் ரசிகர்களை முட்டாளாக்கிய 3 தமிழ் படங்கள்! என்னென்ன தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









