Tamil Films Releasing On June 20th 2025 : 2025ஆம் ஆண்டு ஆரம்பித்த நாளில் இருந்து, தமிழ் திரையுலகம் பஞ்சமில்லாமல் பெரிய பட ரிலீஸ்களால் ஓடிக்கொண்டு இருக்கிறது. விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப், ரெட்ரோ என பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகின. எதிர்பாராத விதமாக சில சிறிய படங்கள், பெரிய ஹிட்டும் அடித்தன. புத்தாண்டு, பொங்கல் பண்டிகை, கோடி விடுமுறைகள் முடிந்த நிலையில், இந்த வார வீக்-எண்டை குறிவைத்து தற்போது 3 திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. அதில் ஒரு படத்திற்குதான் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கிறது.
குபேரா:
தனுஷ் ஹீரோவாக நடித்திருக்கும் குபேரா படத்தை சேகர் கமுலா இயக்கியிருக்கிறார். இதில் தனுஷுடன் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுன, திலிப் தாஹில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். சமூகம் சார்ந்த கதையாக உருவாகியிருக்கும் இந்த படம், த்ரில்லராகவும் இருக்கிறது. இந்த படம், தமிழ்-தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகியிருக்கிறது. இதில், தனுஷ் பிச்சைக்காரராக நடித்திருக்கிறார்.
இந்த படம், பல கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு ஊர் ஊராக சென்று படக்குழுவினர் ப்ரமோஷனும் செய்து வருகின்றனர். இந்த படத்திற்கு தமிழ் திரையுலகிலும், தெலுங்கிலும் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இந்த படத்தை ஜூன் 20 அன்று தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது வரை இப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் சுமார் ரூ.35 லட்சமாக இருப்பதாக கூறப்படுகிறது.
DNA:
அதர்வா முரளி நடித்திருக்கும் படம், டிஎன்ஏ. இதில் நிமிஷா சஜ்ஜயன் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்திருக்கிறார். கூடவே ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர், பாலாஜி சக்திவேல், சுப்பிரமணியம் சிவா உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியிருக்கிறார்.
இந்த படம், குழந்தை கடத்தல் மற்றும் அதில் சிக்கிக்கொள்ளும் ஒரு ஜோடியை அடிப்படையாக வைத்த கதையாக இருக்கிறது. இதனை ஜூன் 20ஆம் தேதியன்று தியேட்டர்களில் பார்க்கலாம்.
சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்:
வைபவ் ஹீரோவாக நடித்திருக்கும் படம், சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்திருக்கிறார். கூடவே மணிகண்டன் ராஜேஷ், ஆனந்த் ராஜ், லிவிங்க்ஸ்டன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்ரானர். இந்த படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருன் கேஷவ் ஆகியோர் இயக்கியிருக்கின்றனர்.
இது ஒரு காமெடி படமாகும். ஒரு வங்கியை கொள்ளையடிக்க செல்லும் கும்பல் சந்திக்கும் பிரச்சனைகளை இதில் நகைச்சுவையுடன் சொல்வது போல கதை எழுதி இருக்கின்றனர். இந்த படமும் ஜூன் 20ஆம் தேதி அன்று வெளியாகிறது.
மேலும் படிக்க | ஜூன் to நவம்பரில் வெளியாகும் மாஸ் தமிழ் படங்கள்! அதிரடி லிஸ்ட் இதோ
மேலும் படிக்க | 2025-ல் ரசிகர்களை முட்டாளாக்கிய 3 தமிழ் படங்கள்! என்னென்ன தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ