விஜய்யால் மமிதாவுக்கு அடிச்ச ஜாக்பாட்! 4 டாப் ஹீரோக்களின் படங்களில் இவர்தான் ஹீரோயின்..

Upcoming Tamil Movies Of Mamitha Baiju : பிரபல மலையாள நடிகையான மமிதா பைஜூ, வரிசையாக பெரிய தமிழ் படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். இது குறித்த விவரத்தை இங்கு பார்ப்போம்.  

Written by - Yuvashree | Last Updated : Mar 19, 2025, 06:59 PM IST
  • மமிதா பைஜூவின் அடுத்தடுத்த படங்கள்
  • அதுவும் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாகிறார்..
  • அந்த நடிகர்களின் படங்கள் லிஸ்ட்..
விஜய்யால் மமிதாவுக்கு அடிச்ச ஜாக்பாட்! 4 டாப் ஹீரோக்களின் படங்களில் இவர்தான் ஹீரோயின்..

Upcoming Tamil Movies Of Mamitha Baiju : தமிழ் திரையுலகிற்குள் சமீபத்தில் என்ட்ரி கொடுத்திருக்கும் நாயகி, மமிதா பைஜூ. பிரேமலு திரைப்படம் மூலம் மக்கள் மத்தியில் பெரிய பிரபலமான இவர், தற்போது அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். அந்த படங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

யார் இந்த மமிதா பைஜூ?

கோலிவுட்டில் மலையாள நடிகைகளை கொண்டாடுவது புதிதல்ல. அப்படி, சமீபத்தில் தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் நாயகி மமிதா பைஜூ. தமிழில் பென்சில் என்ற படத்தில் நடித்த இவர், அதன் பிறகு மலையாளத்தில் பிரேமலு படத்தில் ‘ரீனு’ எனும் பாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இப்போது, மலையாளத்தை விட தமிழில் பல படங்களில் இவர் கமிட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. 

விஜய்யுடன் ஒரு படம்..

விஜய் அரசியலில் முழு நேரமாக நுழைவதற்கு முன்பு ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மமிதா, முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். மமிதாவுடன் சேர்ந்து பூஜா ஹெக்டே, பாபி டியோல், நரேன், பிரியாமணி உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர்.

தனுஷுடன் ஒரு படம்!

அடுத்து வரும் 2 வருடங்களுக்கு ஒரு லீவ் கூட எடுக்க முடியாதபடி, வரிசையாக படங்களில் கமிட் ஆகி இருக்கிறார், நடிகர் தனுஷ். இதில் ஒரு படத்தை, போர் தொழில் திரைப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்குகிறார். இந்த படத்தில், தனுஷுக்கு ஜோடியாக மமிதா நடிப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

சூர்யாவுடன் ஒரு படம்..

கங்குவா தோல்விக்கு பிறகு கம்-பேக் கொடுக்க தயாராகி வருகிறார் நடிகர் சூர்யா. ரெட்ரோ படம் ரிலீஸிற்கு தயாராகி கொண்டிருக்க, தற்போது சூர்யா 45 படத்திலும் முழு மூச்சுடன் கவனம் செலுத்தி வருகிறார். இவர், அடுத்ததாக ‘லக்கி பாஸ்கர்’ பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில், இவருக்கு ஜாேடி மமிதாதான் என்ற பேச்சும் அடிபடுகிறது.

பிரதீப்புடன் ஒரு படம்..

இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன், டிராகன் படத்திற்கு பிறகு LIK படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து அவர் நடிக்கும் இன்னொரு படத்தில் அவருக்கு ஜோடி மமிதா பைஜூதான்.

விஷ்ணு விஷாலுடன் ஒரு படம்..

சமீபத்தில் மமிதாவும் விஷ்ணு விஷாலும் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் பெயர், இரண்டாம் வானம்.

வேகமான வளர்ச்சி..

நடிகை மமிதா, முதலில் நடிக்க இருந்த தமிழ் படம் ‘வணங்கான்’. பாலா இயக்கிய இந்த படத்தில் இருந்து நாயகனாக நடிக்க இருந்த சூர்யா விலகினார். இதை தொடர்ந்து, ஹீரோயினாக நடித்து கொண்டிருந்த மமிதாவும் விலகினார். பின்னர்தான் இவருக்கு பென்சில், ஜன நாயகன் போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிட்டியது. 23 வயதே ஆகும் மமிதா, வெகு விரைவில் அதுவும் இந்த இளமை காலத்திலேயே இப்படி பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போடுவதை பார்த்த பலர், இது குறித்து இணையத்தில் பேசி வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால், இவரும் நயன்தாரா, த்ரிஷா போல ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பிரேமலு 2 எப்போது?

மமிதாவை தூக்கிவிட்ட படம், பிரேமலு. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நஸ்லேன் நடித்துள்ளார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படம், இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | சிம்புவின் அடுத்த படத்தில் 2 ஹாட் நாயகிகள்! இவங்கள பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..

மேலும் படிக்க | தன்னை விட 18 வயது குறைந்த நாயகிக்கு ஜோடியாகும் தனுஷ்! யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News