Perusu Movie OTT Release Announcement : தமிழ் சினிமா மட்டுமல்ல, உலகளவில் எந்த திரையுலகை எடுத்துக்கொண்டாலும், 18+ படங்களுக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதனால், இது போன்ற கதைகள் உருவாக்கப்பட்டு, அவை படங்களாக மாறுவதும் வழக்கமான ஒன்று. அந்த வகையில், தமிழ் திரையுலகில் சமீபத்தில் உருவான படம் பெருசு.
பெருசு திரைப்படம்:
பெருசு படத்தை புதுமுக இயக்குநர் இளங்கோ ராம் என்பவர் இயக்கியிருக்கிறார். இதில் வைபவ், சுனில் ரெட்டி, சாந்தனா, விடிவி கணேஷ், தீபா ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இன்ஸ்டாகிராம் பிரபலமான நிஹாரிகா, வைபவ்வின் மனைவியாக இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
கடந்த மார்ச் 14ஆம் தேதி, இப்படம் வெளியானது. இது வெளியாவதற்கு முன்னர் செலிப்ரிட்டி ஷோவும், அதன் பிறகு பத்திரிகையாளர்களுக்கான பிரஸ் ஷோவும் நடந்தது. இரண்டிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஓடிடியில் வெளியீடு:
திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்துமே டிஜிட்டல் உரிமைகள் வாங்கப்பட்டு ஓடிடியிலும் வெளியாகி விடும். அந்த வகையில், பெரிசு திரைப்படமும் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இதன் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. படம் திரையரங்குகளில் வெளியாகி 10 நாட்களே ஆகியிருப்பதால், இப்படம் இன்னும் சில வாரங்களில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பார்க்கலாம்.
This family puts the 'fun' in 'funeral'
Perusu is coming to Netflix in Tamil, Telugu, Malayalam and Kannada after its theatrical release! #NetflixPandigai pic.twitter.com/QfsLPbGBRj— Netflix India South (@Netflix_INSouth) January 15, 2025
கதை என்ன?
ஊரிலேயே பெரிய மனிதராக வாழ்பவர் ஹாலாஸ்யம். எதிர்பாராமல் இவர் இறந்து விட, இவரது ஆண்குறி விரைத்த நிலையில் அப்படியே நிற்கிறது. இவரது இறப்பு, குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் முதலில் இந்த விஷயத்தை ஊர்க்காரர்களிடம் இருந்து எப்படி மறைப்பது என திணருகின்றனர். இதற்காக என்னென்னவோ முயற்சிகள் செய்தும் அவை அனைத்துமே பயணளிக்காமல் போய் விடுகிறது.
டேப் போட்டு ஒட்டியும், கயிறு போட்டு கட்டியும் பார்க்கின்றனர். ஆனால், ஒன்றும் பயணளிக்காமல் போகிறது. இதனால், இவர்கள் இந்த இறப்பை ஊர் காரர்களிடம் இருந்து மறைக்கின்றனர். ஆனால், எப்படியோ இந்த விஷயம் அனைவருக்கும் தெரிந்து, துக்கம் விசாரிக்க அனைவரும் இவர்கள் வீட்டிற்கு வருகின்றனர். கடைசியில் ‘அந்த’ விஷயம் அனைவருக்கும் தெரிய வந்ததா இல்லையா? குடும்பத்தினர் இதனை எப்படி சமாளித்தார்கள்? என்பதே கதையாக இருக்கிறது.
இரட்டை அர்த்த வசனங்கள்..
‘பெருசு’ என்ற டைட்டிலே இரட்டை அர்த்த வசனத்துடன்தான் இருக்கிறது. படத்திலும் பல எதிர்பாராத நேரங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் வந்து தியேட்டரையே குலுங்க வைத்தது. அதிலும், ஆண்களுக்கு, தங்களுடன் தொடர்பு படுத்திக்கொள்ளும் பல விஷயங்கள் படத்தில் இருந்ததால், அதுவும் படத்தின் ஹிட்டிற்கு காரணமாக இருந்தது.
பாராட்டு மழையில் நனைந்த படம்..
பெருசு படத்தை தியேட்டரில் பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாக பாராட்டினர். அதில், நடிகர் சிம்புவும் ஒருவர். படம், இன்னும் சில நாட்கள் திரையரங்குகளில் தாக்குப்பிடிக்கலாம். ஓடிடியில் வெளியான பிறகு, இன்னும் பெரிய ரசிகர்கள் கூட்டத்தையும் இந்த படம் எட்டிப்பிடிக்கலாம்.
மேலும் படிக்க | இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் படங்கள்.. எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
மேலும் படிக்க | டிராகன் படம் இன்று ஓடிடியில் ரிலீஸ்! 'இந்த' தளத்தில் பார்க்கலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ