Gangai Amaran Stands With Singer Chinmayi : பாடகி சின்மயிக்கு ஆதரவாக வைரமுத்துவின் நண்பர் பேசியிருக்கும் விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
)
Gangai Amaran Stands With Singer Chinmayi : முத்த மழை பாடலுக்கு பிறகு, இப்போது பலரும் கூறி வரும் பெயர், ‘சின்மயி’. 10 ஆண்டுகளுக்கு முன்னர் டாப் பாடகியாகவும், வாய்ஸ் ஆர்டிஸ்ட் ஆகவும் இருந்த சின்மயி, காரணமே இல்லாமல் திரையுலகின் கண்களில் இருந்து மறைந்து போனார். இதையடுத்து, அவர் பாடிய முத்தமழை பாடல் பெரிதாக வைரலான நிலையில், அவருக்கு தமிழ் திரையுலகில் பெரிய அங்கீகாரத்தை கொடுக்க வேண்டும் என்பது பலரது ஒருமித்த கருத்தாக இருக்கிறது. இதற்கெல்லாம் காரணமானது, வைரமுத்துதான் என்று சிலர் கூறிவரும் நிலையில், அவரது நண்பர் ஒருவரே அவருக்கு எதிராக பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார்.
சின்மயி பிரச்சனை:
பாடகி சின்மயி, சில வருடங்களுக்கு முன்னர் #MeToo பற்றி தமிழகத்தில் பரவலாக பலர் பேசுவதற்கு காரணமாக இருந்தவர். காரணம், வைரமுத்துவால் தானும் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக கூறியிருக்கும் அவர், அவரால் பாதிக்கப்பட்ட பிற பெண்களின் புகார்களையும் முன்வைத்தார். இதற்காக பல்வேறு விமர்சனங்களையும் முன்வைத்தார். இந்த நிலையில், சின்மயி டப்பிங் சங்கத்திற்கு சந்தா செலுத்தவில்லை என்று கூறி, அதற்கு தலைவராக இருந்த ராதாரவி அவரது குரலை தமிழ் ரசிகர்கள் கேட்க முடியாத அளவிற்கு செய்து விட்டார்.
இருப்பினும் சின்மயி பிற மொழி பாடல்களில் பாடி வந்தார். சமீபத்தில் வெளியான தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரிலீஸிற்கு முன்னர் நடந்தது. அதில் பாடகி சின்மயி முத்தமழை பாடலை பாடியிருந்தார். இந்த பாடலை தமிழில் ஒரிஜினலாக பாடியிருந்தது, தீ. ஆனால், அவர் அன்று நிகழ்ச்சிக்கு வராததால், சின்மயி இதனை பாடியிருந்தார். அடுத்தடுத்த நாட்களில் சின்மயி பாடல் ட்ரெண்டானதை ஒட்டி, “இவரை ஏன் தமிழ் திரையுலகில் இருந்து நீக்கினீர்கள்?” என்று ரசிகர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.

கங்கை அமரன் ஆதரவு..
தமிழில், பெரும் பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளராக இருந்தவர், கங்கை அமரன். இவர், வைரமுத்துவின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார். #MeToo-விற்கு பிறகு வைரமுத்துவிக்கு எதிராக பலர் திரும்பினர். ஆனால், அப்போது வைரமுத்துவுக்கு எதிராகவோ ஆதரவாகவோ கங்கை அமரன் எதுவும் பேசவில்லை. கடந்த ஆண்டு, வைரமுத்து இளையராஜா-வைரமுத்து இடையே “இசை பெரிதா மொழி பெரிதா” என்று பிரச்சனை எழுந்தது. இதற்கு வைரமுத்து பேசிய கருத்துக்கு எதிராக கங்கை அமரன் “தங்களால் வளர்ந்தவர், இப்போது அவருக்கு கர்வம் ஏறிவிட்டது..” என்று கூறியிருந்தார். அப்போதே அவர் “வைரமுத்து நல்ல கவிஞர் தானே தவிர, நல்ல மனிதர் கிடையாது..” என்று கூறியிருந்தார்.
தற்போது சின்மயி முத்த மழை பாடலால் வைரலான பிறகு, அவரை பல்வேறு ஊடகங்கள் நேர்காணல் செய்து வருகிறது. அப்படியொரு நேர்காணலில் சின்மயி-கங்கை அமரன் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். இப்போதும் அவர் வைரமுத்து நல்ல கவிஞர்தான் என்பது உண்மை, ஆனால் நல்ல மனிதன் இல்லை என்று கூறியிருக்கிறார் கங்கை அமரன். அதற்கு சின்மயி, “சார் கொஞ்சம் பாத்து பேசுங்க..பக்கத்துலதான் முதலமைச்சர் வீடு இருக்கு..” என்று கூறினார். அதற்கு கங்கை அமரன், “நான் அவர் வீட்டுக்குதான் இப்போது போயிட்டு போகப்போகிறேன்” என்று கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ