Valimai Release date: பிப்ரவரி 24 வலிமை ரிலீஸ்... கன்ஃபார்ம் செய்தி

வலிமை படத்தின் ரிலீஸ் குறித்த வதந்திகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 2, 2022, 12:32 PM IST
Valimai Release date: பிப்ரவரி 24 வலிமை ரிலீஸ்... கன்ஃபார்ம் செய்தி title=

நடிகர் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் தயாராகி உள்ளது. கொரோனா பரவலால் இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தது. இதனால், வலிமை 'அப்டேட்' (Valimai Update) வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் இணைத்தில் 'டிரெண்ட்' செய்து வந்தனர். 

வலிமை (Valimai Release) அப்டேட் என்ற வார்த்தையை வைத்து அரசியல் தலைவர்களும் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் அளவுக்கு இந்த வார்த்தை பிரபலமானது. ஒரு வழியாக படப்பிடிப்பு முடிவடைந்து படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நிலைமை மாறியதால், இந்த படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டது.

ALSO READ | வலிமை வைரலாகும் 'மனசு வலிக்குது' போஸ்டர்!!

நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் 'வலிமை' படத்தில் அஜித்திற்கு (Ajith Kumar) ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். அண்மையில் 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அஜித்தின் லுக் இளமையாக இருப்பதாக பலரும் மோஷன் போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

இதற்கிடையில் அண்மையில் வெளியான 'வலிமை' டிரெய்லரும் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பினை எகிற செய்துள்ளது. 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழகத்தில் கொரனோ பரவல் காரணமாக திரையரங்கங்களில் 50% பார்வையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் திட்டமிட்டபடி 'வலிமை' படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு உறுதியாக இருந்தது.

அதன்படி தற்போது படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை வலிமை திரைப்படம் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார். அத்துடன் இந்த படம் தமிழ், தெலுங்கும் இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. வலிமை படக்குழுவின் இந்த அறிவிப்பால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

 

ALSO READ | வலிமை ரிலீஸ் தேதி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News