நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வீர தீர சூரன் 2. இப்படத்தை சித்தா பட இயக்குநர் அருண்குமார் இயக்கி இருக்கிறார். இப்படம் நாளை (மார்ச் 27) உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் துஷாரா விஜயன், சுராஜ், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படம் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஒரே இரவில் நடக்கும் விஷயங்களை கொண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைது படம் வெளியானது.
இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. டிரெய்லரை வைத்து பார்க்கையில் நடிகர் விக்ரமின் கதாபாத்திரத்தை மாஸாக உருவாக்கி இருப்பது தெரிகிறது. இப்படத்திற்கு முன்பாக வெளியான தங்கலான் படம் விக்ரமிற்கு சரியாக போகாததால், இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. படத்தில் வரும் முதல் 20 நிமிட காட்சிகளை யாரும் மிஸ் பண்ணிவிட வேண்டும் என இயக்குநர் அருண்குமார் கூறியிருந்தார். அதேபோல் இப்படம் சாமி, தூள் படம் போல் பீல் கொடும் என எஸ்.ஜே. சூர்யா கூறியிருந்தார். எனவே இப்படம் சூப்பர் ஹிட்டாகும் என ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.
மேலும் படிங்க: மனோஜ் பாரதிராஜாவின் இறப்புக்கு இதுதான் காரணம் - நடிகர் தம்பி ராமையா வருத்தம்
இச்சூழலில் ப்டத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக செய்தி வெளியாகி இருக்கிறது. அதாவது படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படத்திற்கு மும்பையை சேர்ந்த B4U என்ற தயாரிப்பு நிறுவனமும் முதலீடு செய்திருக்கிறது. இதன் காரணமாக படத்தின் டிஜிட்டல் உரிமையை தயாரிப்பு நிறுவனம் அந்த நிறுவனத்திற்கு எழுதி கொடுத்துவிட்டதாம்.
அதேநேரத்தில் ஒப்பந்தத்தில் உள்ளபடி இன்னும் படம் ஓடிடி உரிமை விற்கப்படவில்லை. அதற்குள்ளாவே படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து, ரிலீஸுக்கும் தயாராகிவிட்டது. ரிலீஸ் தேதியை அறிவித்ததால், படத்தை ஓடிடிக்கு விற்க முடியவில்லை. இதனால் முதலீட்டில் 50 சதவீதம் நஷ்டம் அடைந்ததாக B4U நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தெரிவித்து இருக்கிறது. ஆனால் B4U நிறுவனம் தொடர்ந்த வழக்கை டெல்லி நீதிமன்றம் ஒத்தி வைத்திருக்கிறது. மேலும், படத்தை நாளை காலை 10.30 மணி வரை படத்தை வெளியிடக்கூடாது என இடைக்கால உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது.
மேலும் படிங்க: மனோஜ் பாரதிராஜா மறைவு.. விஜய் முதல் கவுண்டமனி வரை.. அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









