Ravikumar And Manoj Kumar Dies On The Same Day : இந்திய திரையுலகில், கடந்த சில ஆண்டுகளாகவே நல்ல நடிகர்களையும், இயக்குநர்களையும் இழந்து வருகிறாேம். சமீபத்தில் கூட, யாரும் எதிர்பார்க்காத வகையில், இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி உயிரிழந்தார். இதையடுத்து, இன்றும் 2 பிரபலங்களை இந்திய திரையுலகம் இழந்துள்ளது. அவர்கள் யார் யார் தெரியுமா?
மனோஜ் குமார் உயிரிழப்பு:
நடிகரும் இயக்குநருமான மனோஜ் குமார், தனது 87வது வயதில் உயிரிழந்திருக்கிறார். இவரை செல்லமாக பலர் பரத் குமார் என்று அழைப்பர். நாட்டுப்பற்று குறித்து எடுக்கப்பட்ட பல படங்களில் நடித்திருக்கும் இவர், Cardiogenic shock காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, இன்று காலையில் அவரது உயிர் பிரிந்துள்ளது. இத்துடன் சிரோசிஸ் நோய் பாதிப்பால் இவர் அவதிப்பட்டு வந்ததாகவும், இன்று அத்துடன் சேர்த்து மாரடைப்பும் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்துள்ளதாகவும் மருத்துவமனை அறிவிப்பில் கூறப்பட்டது. 1 மாத காலமாக இவர் இந்த நோயுடன் போராடி வந்ததை ஒட்டி, தற்போது உயிரிழந்திருப்பது இவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
1957ல் ஆரம்பித்து 1995ஆம் ஆண்டு வரை, கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேல் பல படங்களில் நடித்துள்ள இவர், பத்மஸ்ரீ விருது, தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்டவற்றை வாங்கியிருக்கிறார். மனோஜ் குமாருக்கு மரியாதை செலுத்தும் நிமித்தம், திரை பிரபலங்கள் பலர் அவரது உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு வருகை புரிந்திருக்கின்றனர்.
ரவிகுமார் உயிரிழப்பு:
தமிழ் திரையுலகில், பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தவர் ரவிகுமார். இவர், தனது 71 வயதில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்திருக்கிறார்.
திருச்சூர், கேரளாவை சேர்ந்த இவர் மலையாள தயாரிப்பாளர் பாரதி மேனனின் மகனாவார். இவர் இதுவரை தமிழ் மற்றும் மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் முக்கியமாக அவர்கள், இவர், அங்காடி உள்ளிட்டவை ஆகும். டெலிவிஷன் தொடர்களிலும் நடித்து பிரபலமான இவர், பல தமிழக இல்லங்களில் பரீச்சியமான முகமாக இருக்கிறார்.
சித்தி, செல்வி, அரசி போன்ற ராதிகாவின் தொலைக்காட்சி தொடர்களில் தவறாமல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். கஸ்தூரி, இதயம், செல்லமே, வாணி ராணி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்த இவர், சமீத்தில் கண்ணெதிரே தோன்றினாள் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்திருந்தார்.
கடந்த சில ஆண்டுகளாகவே, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த இவர், இன்று காலை உயிரிழந்தார். இவரது உடல், வளசரவாக்கததில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது மகன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
மேலும் படிக்க | மனோஜ் பாரதிராஜாவின் அதே சாயலில் அவரது மகள்கள்! வைரலாகும் குடும்ப போட்டோக்கள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









