பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் காய் விபத்தி சிக்கி உள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் ஐஸ்வர்யா ராயின் சொகுசு கார் உள்ளது. பின்னால் ஒரு பேருந்து இருக்கிறது. அதன்படி ஐஸ்வர்யாவின் சொகுசு காரின் பின்னால் பேருந்து மோதியதாக கூறப்படுகிறது.
வீடியோவை தொடர்ந்து பார்த்தபோது, அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்திருந்தனர். அவர்கள் ஐஸ்வர்யா ராய் காரை அங்கிருந்து செல்ல அனுமதி கொடுத்தனர். மேலும், ஐஸ்வர்யா ராய் காரில் சேதம் ஏதம் ஏற்படவில்லை என தெரிகிறது. இந்த வீடியோவை நெட்டிசன்கள் பகிர்ந்து கலாய்த்து வருகின்றனர்.
மேலும் படிங்க:வீர தீர சூரன் படம் வெளியாவதில் சிக்கல்.. வெளியான அதிர்ச்சி தகவல்
ஐஸ்வர்யா ராய் தமிழில் இருவர் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து ஜீன்ஸ், எந்திரன் படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனின் மனைவி ஆவார். இவரை 2007ஆம் ஆண்டு கரம்பிடித்தார். சமீபத்தில் ஐஸ்வர்யா ராய்யும் அவரது கணவர் அபிஷேக் பச்சனும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், அவர்களது மகள் குறித்து சில தேவையில்லாத வதந்திகளும் பரவி வந்தன.
அதாவது, அவரது மகளின் உடல்நிலை குறித்து தேவையில்லாத தகவல்கள் பரவின. ஆனால், இந்த வதந்திகளுக்கு ஐஸ்வர்யா ராய் எவ்வித ரியாக்ஷனும் கொடுக்கவில்லை. பின்னர் அவர்கள் தங்களின் குடும்பத்துடன் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தனர்.
பொன்னியன் செல்வன் படம் தான் ஐஸ்வர்யா நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான படம். இப்படத்தில் அவரது கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. இப்படத்திற்கு பிறகு அவர் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்து வருகிறார். இந்த நிலையில், அவர் காரின் பின்னால் பேருந்து மோதியதாக வீடியோ வைரலாகி வருகிறது. இது குறித்த செய்தி முழுமையாக வெளியாகவில்லை என்றாலும், வீடியோவை பகிர்ந்து ரசிகர்கள் கருந்து பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிங்க: மனோஜ் பாரதிராஜாவின் இறப்புக்கு இதுதான் காரணம் - நடிகர் தம்பி ராமையா வருத்தம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









