வெறுப்பை கடந்து மனிதத்தை பார்ப்போம்.. இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் விஜய் ஆண்டனி!

பதிலடி கொடுக்க வேண்டும் ஆனால் அதேசமயம் பாகிஸ்தான் மக்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். 

Written by - R Balaji | Last Updated : Apr 28, 2025, 02:32 PM IST
  • இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம்
  • விஜய் ஆண்டனி கருத்து
வெறுப்பை கடந்து மனிதத்தை பார்ப்போம்.. இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் விஜய் ஆண்டனி!

காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பகல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் பலர் காயமடைந்த நிலையில், 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான 'தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' மேற்கொண்டுள்ளது. இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

Add Zee News as a Preferred Source

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தியாவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது, பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவது, அட்டாரி - வாகா எல்லை மூடல் என டிப்ளமெட்டிங், பெருளாதாரம் மற்றும் மறைமுக ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. 

பாகிஸ்தானின் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்தாலும், சிலர் பாகிஸ்தானின் மக்களை மையப்படுத்தி பேசி வருகின்றனர். ஆதாவது பாகிஸ்தானில் இருக்கும் அப்பாவி மக்கள் இதற்கு என்ன செய்வர், தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்க வேண்டும், ஆனால், பாகிஸ்தானின் அப்பாவி மக்கள் என்ன செய்யவார்கள் என குறல் கொடுத்து வருகின்றனர். 

அந்த வகையில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் தனது கருத்தை தெர்வீத்துள்ளார். அவர் கூறியதாவது, காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். அதே சமயத்தில் பாகிஸ்தானில் வசிக்கும் லட்சம் இந்தியர்களையும், பாகிஸ்தான் பொது மக்களையும், நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களும், நம்மைப் போல அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள். வெறுப்பைக் கடந்து மனிதத்தை வளர்ப்போம் என தெரிவித்துள்ளார். 

விஜய் ஆண்டனியின் இந்த பதிவிற்கு சிலர் தவறாக புரிந்து கொண்டு கமெண்ட் செய்து வந்தனர். அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாகவும் அவர் இன்னொரு பதிவியை பதிவிட்டார். அதில், காஷ்மீரில் நடந்த கொடிய படுகொலையை செய்த, அந்த மிருக வெறி கொண்ட பயங்கரவாத கூட்டத்தின் நோக்கம், நம் ஒற்றுமையை சிதைப்பதே ஆகும். இந்திய அரசும் நாமும், நம் வலிமையான கரங்களால் நம் இறையான்மையை பாதுகாப்போம் என பதில் அளித்தார். 

மேலும் படிங்க: குற்றம் தவிர் படத்தின் டிரெய்லர், பாடல்கள் வெளியீட்டு விழா

மேலும் படிங்க: ஆர்யா பாதி-சாயீஷா மீதி..அச்சு அசலாக இருக்கும் அவர்களின் மகள்! வைரல் போட்டோஸ்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ'

About the Author

Trending News