)
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கதாநாயகனாகத் தனது 12-வது படமான ‘மார்கன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை விஜய் ஆண்டனியே சொந்தமாகத் தயாரித்து இசையமைத்துள்ளார். விஜய் ஆண்டனி நடித்த மார்கன் திரைப்படத்தின் ப்ரமோஷன் பட விழாவிற்கு நடிகர் விஜய் ஆண்டனி மதுரைக்கு வருகை தந்தார். நடிகை ப்ரித்திகா, விஜய் ஆண்டனி சகோதரியின் மகன் அஜய் திஷன் ஆகியோரும் வருகை தந்து மதுரை சொக்கிகுளம் பகுதியில் உள்ள தனியார் மாலில் உள்ள திரையரங்கில், படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து நடிகரும் இசையமைப்பாளரும் தயாரிப்பாளருமான விஜய் ஆண்டனி பேசினார்.

விஜய் ஆண்டனி பேச்சு!
மார்கன் படத்தின் இயக்குனர் லியோ ஜான்பால் அட்டகத்தி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சூது கவ்வும் ஆகிய படங்களின் விஷுவல் எடிட்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர் இயக்குனராக ஆவதற்காக என்னை தயாரிக்க கூறி கதை சொன்னார். எனது சகோதரி மகனுக்கு இந்த படத்தில் ஒரு நல்ல வாய்ப்பு இருக்கும் என கூறினார். இதனால் எடிட்டரை ஏன் ஒரு இயக்குனராக மாற்றக்கூடாது என வாய்ப்பு அளித்ததோடு எனது சகோதரி மகனுக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. மார்கன் படம் அனைவருக்கும் பிடிக்கும்.
கிராமத்து சார்ந்த படங்களை ஏன் நடிப்பதில்லை என்ற கேள்விக்கு? விரைவில் அது போன்ற படம் வரும் ஏற்கனவே அண்ணாதுரை, காளி போன்ற படத்தில் நடித்தேன். தெலுங்கில் எப்படி காந்தாரோ திரைப்படம் வந்ததோ அதே போன்று ஒரு கிராமத்து கதையை பான் இந்தியா படமாக பிரமாண்டமாக எடுக்கவுள்ளேன். அதற்கான வேலை நடைபெற்று வருகிறது. செப்டம்பர் மாதத்திற்குள் விரைவில் சூட்டிங் தொடங்கும், அதற்கான டைட்டில் இன்னும் வைக்கவில்லை என்றார். தற்போது திறந்து திரையரங்குகளில் ஒரு வாரம் படம் ஓடினாலே சக்சஸ் என கூறுவது குறித்த கேள்விக்கு? முந்தைய காலங்களில் நாளொன்றுக்கு 20 ஆயிரம் பேர் படம் பார்ப்பார்கள். தற்போது 20 லட்சம் பேர் ஒரே நாளில் படம் பார்க்கிறார்கள்.
முன்னாள் 100 நாட்கள் ஓடுகின்ற படங்கள் தற்போது 10 நாட்கள் ஓடினாலே பொருளாதாரம் ரீதியாக போதும் என்ற அளவிற்கு அதிக அளவு திரையரங்குகள் வந்துள்ளது. வியாபார ரீதியாக முன்னாலில் திரையரங்குகள் மட்டும் இருந்தது. தற்பொழுது சேட்டிலைட், டிஜிட்டல் மற்றும் திரையரங்குகள் என இருக்கும் காரணங்களால் ஒரு வாரம் ஓடினாலே சக்சஸ் என்ற சொல்லக்கூடிய நிலை உள்ளது. நடிகர்கள் போதைப் பொருள் பயன்படுத்தி கைதாகுவது குறித்த கேள்விக்கு? உலகம் கண்டுபிடித்ததில் இருந்தே போதை பொருள் உள்ளது. சிகரெட் பிடிப்பதை அடுத்த வெர்சன் தான் போதைப்பொருள், அந்த நடிகரை பிடித்திருக்கிறார்கள் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தான் நான் நினைக்கிறேன்.
அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு?
அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதற்கான அறிவுகள் என்னிடம் இல்லை. எனக்கு 50 வயது ஆகிவிட்டது. வட்டம் மாவட்டம் என அரசியல் பத்தி எதுவும் தெரியாது, இன்னும் மக்களை பார்த்து சந்தித்து புரிந்து கொள்ள வேண்டும் FRAME இருக்குது என்பதற்காக அரசியலில் குதிக்க முடியாது. உங்களுடைய படங்களுக்கு டைட்டில் வித்தியாசமாக வைப்பது ஏன் என்ற கேள்விக்கு? பணக்காரன எல்லாரும் வச்சிக்கிறாங்க. பிச்சைக்காரனா யாரும் கண்டுக்கறது என்பதனால நான் செண்டிமெண்ட் பார்ப்பது கிடையாது. அதனால எனது படத்துக்கு இது போன்ற டைட்டில்களை வைக்கிறேன். பிச்சைக்காரன் மற்றும் கொலைகாரன் படத்திற்கு பொருத்தமான பெயர் தான் வைத்துள்ளேன் என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ