இந்த படத்துக்கு 1 கோடி சம்பளம் வாங்கினேன்.. விஜய் ஆண்டனி ஓபன் டாக்

இசையமைப்பாளர், நடிகர்கள், தயாரிப்பாளர் என்று பல தோற்றத்தை கொண்ட விஜய் ஆண்டனி தான் முதல் முதலில் எந்த படத்திற்காக ஒரு கோடி சம்பளம் வாங்கியிருந்தார் என்கிற தகவலை பகிர்ந்ததுள்ளார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 7, 2025, 06:41 PM IST
  • இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி இப்போது நடிகராக இருக்கிறார் விஜய் ஆண்டனி.
  • மீண்டும் இசையமைக்க உள்ளார்.
  • தன்னுடைய சினிமா வாழ்க்கையை பற்றி பேசிய விஜய் ஆண்டனி.
இந்த படத்துக்கு 1 கோடி சம்பளம் வாங்கினேன்.. விஜய் ஆண்டனி ஓபன் டாக்

இசையமைப்பாளர், நடிகர்கள், தயாரிப்பாளர் என்று பல தோற்றத்தை கொண்ட விஜய் ஆண்டனி தான் முதல் முதலில் எந்த படத்திற்காக ஒரு கோடி சம்பளம் வாங்கியிருந்தார் என்கிற தகவலை பகிர்ந்ததுள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

Add Zee News as a Preferred Source

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி இப்போது நடிகராகவும் வளர்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி ஆரம்ப காலத்தில் ஒலிப் பொறியாளராகப் பணி புரிந்து பின்னர் இசையமைப்பாளரானார். தமது கல்லூரிப் படிப்பை முடித்தப் பின்னர் தாமே ஆடியோபைல்ஸ் என்ற ஒலியரங்கை நிறுவினார். அங்கு ஒலி பொறியாளராக சோதனைகள் செய்து தொலைக்காட்சிகளுக்கும் ஆவணப்படங்களுக்கும் சில இசைத்துண்டுகளை அமைத்தார். அப்போது தான் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தமது டிஷ்யூம் திரைப்படத்திற்கு இசையமைக்க அழைத்தார். ஆனால் விஜய் ஆண்டனி இசையமைத்த முதல் திரைப்படமாக சுக்ரன் திரைப்படம் முதலில் வெளிவந்தது.

இதன் பின்னர் இவர் நினைத்தாலே இனிக்கும், நான் அவன் இல்லை, காதலில் விழுந்தேன், வேட்டைக்காரன், உத்தம புத்திரன், அங்காடித்தெரு, வேலாயுதம், அவள் பெயர் தமிழரசி, நான், தமிழ், பிச்சைக்காரன், சைத்தான் போன்ற படங்களுக்கு இசையமைத்தார். இந்த படங்களில் சில பாடல்களின் வரிகளும் புரியாத அளவிற்கு துள்ளல் இசையுடன் இருக்கும். அதிலும் நாக்க முக்க, ஆத்திச்சூடி, பன்னாரஸ் பட்டு கட்டி போன்ற பாடல்கள் எவர்கிரீன் பாடல்கள் ஆகும். ஆனால் கதாநாயகனாக சினிமாவில் நடிக்க தொடங்கிய பிறகு சில வருடங்களாக இசையமைப்பதை விட்டு விட்டு முழுக்க முழக்க நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆனால் இப்போது தான் மீண்டும் இசையமைக்க போவதாக அவர் சமீபத்தில் கூறி இருக்கிறார். அது மட்டுமின்றி தன்னுடைய படங்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற நடிகர்களின் படங்களுக்கும் நான் இனி இசை அமைக்க போவதாக கூறியிருக்கிறார். இந்த நிலையில் விஜய் ஆண்டனி தன்னுடைய சினிமா வாழ்க்கையை பற்றி பேசிய நேர்காணல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மார்கன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் விஜய் ஆண்டனி, தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது, அத்துடன் தற்போது இந்த படத்தின் ப்ரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய விஜய் ஆண்டனி தான் முதல் முறையாக ஒரு கோடி சம்பளம் வாங்கியது நடிகர் விஜய் நடித்த வேலாயுதம் திரைப்படத்திற்கு தான். அதற்கு முன்பு தனக்கு இவ்வளவு சம்பளம் கிடைத்ததில்லை. ஆனால் விஜய் படத்திற்கு முன்பே நான் முடிவு செய்துவிட்டேன் இனி நாம் அதிகமான சம்பளம் வாங்க வேண்டும். அதே போல் தான் வேலாயுதம் படத்தில் ஒரு கோடி சம்பளம் கிடைத்தது. நான் இசையாமைப்பாளராக வாங்கிய முதல் அதிகமான சம்பளம் இந்த படம் தான், அதற்குப் பிறகு வேட்டைக்காரன், உத்தமபுத்திரன் போன்ற படங்களுக்கு இசையமைத்த போது நான் இண்டஸ்ட்ரியிலிருந்து வெளியே வந்து விட்டேன்.

அதற்கு பிறகு இரண்டு வருடம் கழித்து நடிக்க ஆரம்பித்தேன். அந்த நேரத்தில் எல்லா படமும் ஹிட் ஆனது. பொதுவாக யாரும் தனது சம்பள விஷயத்தை வெளியே சொல்ல மாட்டார்கள். ஆனால் தற்போது விஜய் ஆண்டனி தான் முதலில் அதிகம் வாங்கிய சம்பளத்தை பற்றி கூறியுள்ளது மிகவும் வைரலாகி வருவதுடன், பலரையும் வியக்க வைத்துள்ளது.

மேலும் படிக்க | எதிர்பார்ப்புகள் ஏமாற்றமா? தக் லைஃப் படம் எப்படி? X தள விமர்சனம்!

மேலும் படிக்க | இன்று வெளியான தக் லைஃப்.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News