ஜெர்சி படத்தை இயக்கிய கவுதம் தின்னனூரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் “கிங்டம்”. அதிரடியும், உணர்ச்சியும் நிறைந்த கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்கியஸ்ரீ போர்ஸ், சத்தியதேவ் காஞ்சரனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்திரன் இந்த படத்திற்கு இசையமைக்க, சிதாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். ஜோமோன் T ஜான் ISC & கிரீஷ் கங்காதரன் ISC ஆகியோர் இணைந்து இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர். நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
மேலும் படிங்க: சக நடிகரின் மனைவியையே திருமணம் செய்த பிரபல தமிழ் நடிகர்! யார் தெரியுமா?
I wish i could share with you how i feel right now..
i wish you could all feel this with me..Aah Venkanna Swami daya
Mee Andari Prema
Inka em kavali naa lanti okkadki pic.twitter.com/WD54upPW4z— Vijay Deverakonda (@TheDeverakonda) July 31, 2025
படத்தின் கதை
படத்தின் கதாநாயகன் விஜய் தேவரகொண்டா காவல்துறையில் கான்ஸ்டேபிலாக பணிபுரிந்து வருகிறார். தனது அதீத கோபத்தால் உயர் அதிகாரிகளை அடித்து கிட்டத்தட்ட சஸ்பெண்ட் ஆகும் வரை செல்கிறார். அந்த சமயத்தில் இவருக்கு அண்டர் கவர் ஆபரேஷனில் ஈடுபட ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதன் மூலம் சிறு வயதில் தொலைந்து போன தனது அண்ணனை தேடி கண்டுபிடித்து வடலாம் என்பதால் அதனை ஏற்றுக்கொள்கிறார் விஜய் தேவரகொண்டா. இறுதியில் அண்டர்கவர் ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்தாரா? தனது அண்ணனை கண்டுபிடித்தாரா? இறுதியில் என்ன ஆனது என்பதே கிங்டம் படத்தின் கதை.
நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய் தேவரகொண்டாவிற்கு அவரது நடிப்பு திறனை காட்டுவதற்கு ஒரு நல்ல படமாக கிங்டம் அமைந்துள்ளது. ஆக்சன் காட்சிகளிலும் எமோஷனல் காட்சிகளிலும் கைத்தட்டல்களை பெறுகிறார். அவரது அண்ணனாக நடித்திருக்கும் சத்தியதேவிற்கு ஹீரோவிற்கு ஈக்குவலான ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது, அதனை உணர்ந்து நல்ல ஒரு நடிப்பை கொடுத்துள்ளார். இவர்களை தாண்டி படத்தில் மற்றவர்களுக்கு முக்கியமான கதாபாத்திரம் இல்லை. கதாநாயகிக்கு படத்தில் வேலையே இல்லை என்றாலும் சில காட்சிகளில் மட்டுமே வந்து செல்கிறார்.
இயக்குனரை தாண்டி படத்தை மொத்தமாக படத்தை காப்பாற்றுவது அனிருத்தின் பின்னணி இசை தான். முதல் காட்சி தொடங்கி இறுதி வரை சிறப்பான ஒரு இசையை கொடுத்துள்ளார் அனிருத். கவுதம் தின்னனூரி முதல் காட்சி முதலே நம்மை அவரது உலகிற்கு கொண்டு சென்று விடுகிறார். ஆரம்பத்தில் கமிஷனர் அலுவலகத்தில் நடக்கும் காட்சிகள், ஜெயிலில் நடக்கும் காட்சிக,ள் பெண்ணை முதல் மறையாக தீவை விட்டு வெளியே கொண்டு வரும் காட்சிகள் என அனைத்தும் சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தது. படம் முழுக்க வரும் சண்டை காட்சிகளும் அதிரடியாகவும் வித்தியாசமான முறையிலும எடுத்திருந்தனர்.
ஹீரோவின் புத்திசாலித்தனத்தை காட்டும் விதமாக காட்டப்பட்டுள்ள அனைத்து காட்சிகளும் கைத்தட்டல்களை பெறுகிறது. ஜோமோன் T ஜான் ISC & கிரீஷ் கங்காதரன் ISC என இந்த இருவரின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. 2 மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடும் ரன்டைமை மட்டும் இன்னும் சிறிது குறைத்து இருந்தால் சிறப்பான ஒரு படமாக வந்திருக்கும் கிங்டம். விஜய் தேவரகொண்ட ரசிகர்களுக்கும், ஆக்சன் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கும் கிங்டம் ஒரு விருந்தாக அமையும்.
KINGDOM - 5/3.5
மேலும் படிங்க: தர்ஷன் நடித்துள்ள House Mates படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









