)
Vijay Deverakonda and Rashmika Mandanna: விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து நடித்ததில் மிகவும் பிரபலமான மற்றும் பாராட்டப்பட்ட படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்தத் திரைப்படங்கள் எந்த OTT தளத்தில் பார்க்கலாம் என்று தெரிந்துக்கொள்வோம்.
தென்னிந்தியாவின் பிரபலமான நட்சத்திர ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ரகசியமாக நிச்சயதார்த்தம் sசெய்துக் கொண்டதாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பான தகவல் பரவி வருகிறது. அதனுடன் இந்த இந்த ஜோடிகளுக்கு வருகிற பிப்ரவரி 2026-ஆம் ஆண்டு திருமணம் நடக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்ட ஒரு தனியார் விழாவில் நிச்சயதார்த்தம் நடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த இரண்டு நட்சத்திரங்களும் இதுவரை தங்களது நிச்சயதார்த்தம் அல்லது திருமணம் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகாவின் நிச்சயதார்த்தம் குறித்த தகவல்கள் ரசிகர்களை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
அர்ஜுன் ரெட்டி என்கிற படத்தின் மூலம் இந்திய சினிமாவின் நாயகனாக மாறினார் நடிகர் விஜய் தேவரகொண்டா, இவருக்கு பெண்களின் ஃபேன்ஸ் அதிகம். அதேபோல் நடிகை ராஷ்மிகா மந்தனா நேஷ்னல் கிரஷ் என்று அழைக்கப்படுவார். இவர் தற்போது முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். எனினும் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் கீதா கோவிந்தம் திரைப்படத்தில் முதல் முறையாக இணைந்து நடித்தனர். அந்த சமயத்தில் இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது. அதைத் தொடர்ந்து இவர்கள் இருவரும், டியர் காம்ரேட் படத்திலும் இணைந்து நடித்தனர். அப்போதிருந்து இவர்களது காதல் உறவு வலுப்பெற்றது. எனினும் இது தொடர்பாக இவர்கள் இருவரும் நேரடியாக இதுவரை எவ்வித பதிலளிக்காமல், மறைமுகமாகவே பதிலளித்து வந்தனர்.
சமீப காலமாக, இவர்களது திருமணம் விரைவில் நடைபெறும் என்று பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது அண்மையில் தசரா பண்டிகையை முன்னிட்டு, ராஷ்மிகா மந்தனா புடவையில் இருக்கும் தனது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படம் வெளியானதிலிருந்து, அது அவர்களது நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்று ரசிகர்களிடையே சந்தேகங்கள் பரவ தொடங்கின. மேலும் தசரா பண்டிகையன்று, நெற்றியில் குங்குமத்துடன் பாரம்பரிய உடையில் ராஷ்மிகா வெளியிட்ட புகைப்படம் இந்த செய்திகளுக்கு மேலும் வலு சேர்த்தது.
இந்நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து நடித்துள்ள படம் குறித்து இங்கு காணலாம். மேலும் எந்த ஓடிடி தளத்தில் இந்த படங்களை காணலாம் என்று பார்ப்போம்.
கீதா கோவிந்தம்: கடந்த 2018ம் ஆண்டு பிளாக்பஸ்டரான ‘கீதா கோவிந்தம்’ படத்தில் முதன்முதலில் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்திருந்தனர். காதல் கதைக்களத்தில் உருவாகி இப்படம் வெளிவந்தது. இப்படத்தை இயக்குநர் பரசுராம் இயக்கியிருந்தார். 7 வருடங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தை இப்போது காண வேண்டும் என்றால் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காணலாம்.
டியர் காம்ரேட்: கடந்த 2019 ஆம் ஆண்டில் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படம் டியர் காம்ரேட். இந்த படத்தை பாரத் கம்மா இயக்கி இருந்தார். 6 வருடங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தை இப்போது காண வேண்டும் என்றால் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் காணலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ