)
Vijay Deverakonda and Rashmika Mandanna: தென்னிந்தியாவின் பிரபல நட்சத்திர ஜோடியான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோருக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டதாகவும், அவர்களது திருமணம் பிப்ரவரி 2026ல் நடைபெற உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி சமுக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்ட ஒரு தனியார் விழாவில் இந்த நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த ஜோடி தங்களது நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.
தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் இருந்து தள்ளியே வைத்திருக்க விரும்புவதால், இந்த ரகசியமான அணுகுமுறையை அவர்கள் கையாண்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சமீபத்தில், ராஷ்மிகா மந்தனா புடவையில் இருக்கும் தனது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படம் வெளியானதிலிருந்து, அது அவர்களது நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்று ரசிகர்களிடையே சந்தேகங்கள் பரவ தொடங்கின. மேலும் தசரா பண்டிகையன்று, நெற்றியில் குங்குமத்துடன் பாரம்பரிய உடையில் ராஷ்மிகா வெளியிட்ட புகைப்படம் இந்த செய்திகளுக்கு மேலும் வலு சேர்த்தது.

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா நீண்ட ஆண்டுகளாக காதலிப்பதாக கூறப்பட்டாலும், இருவரும் தங்கள் உறவு குறித்து இதுவரை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை. அவர்கள் விடுமுறையை ஒன்றாக கழிப்பது போன்ற செய்திகள் வெளிவந்த போதிலும், தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மௌனம் காத்து வருகின்றனர். திரைப்படங்களை பொறுத்தவரை ராஷ்மிகா மந்தனா அடுத்ததாக ஆயுஷ்மான் குரானாவுடன் 'தம்மா' என்ற திகில்-நகைச்சுவை படத்தில் நடிக்கிறார். இந்த படம் அக்டோபர் 21 அன்று வெளியாக உள்ளது. விஜய் தேவரகொண்டா கடைசியாக 'கிங்டம்' என்ற தெலுங்கு ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் நடித்திருந்தார்.
ஹைதராபாத்தின் ஃபிலிம் நகர் மற்றும் ஜூப்ளி ஹில்ஸ் போன்ற முக்கிய பகுதிகளில் விஜய் தேவரகொண்டாவிற்கு பங்களா உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.15 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் தான் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், சிரஞ்சீவி போன்ற முக்கிய ஜாம்பவான்கள் உள்ளனர். மிகவும் ஆடம்பரமான இந்த பங்களாவில் விஜய் தேவரகொண்டா தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். 2019ல் இந்த வீட்டை அவர் வாங்கியபோது, "நான் வாங்கிய வீடு மிகவும் பெரியதாக இருக்கிறது. அது எனக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இப்போது என் அம்மா தான் இதை ஒரு வீடாக மாற்ற வேண்டும்" என்று சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ