)
Vijay Deverakonda Rashmika Wedding Date : தென்னிந்திய திரையுலகின் ட்ரெண்டிங் காதல் ஜோடியாக இருப்பவர்கள்தான் ராஷ்மிகா மந்தானவும் விஜய் தேவரகொண்டாவும். இவர்களுக்கு வரும் 2026ஆம் ஆண்டு திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
ராஷ்மிகா மந்தனா-விஜய் தேவரகொண்டா காதல்:
கன்னட திரையுலகில் அறிமுகமாகி, இப்போது இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் நடிகைதான் ராஷ்மிகா மந்தனா. இவருக்கு, தெலுங்கில் பெரிய பிரேக் கொடுத்த படம், கீதா கோவிந்தம். இந்த படத்தில் அவர் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்திருந்தார். இந்த படம் வெற்றிபெற்றதற்கு பெரிய காரணம், இப்படத்தில் இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரிதான். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, இவர்கள் இருவரும் ‘டியர் காம்ரேட்’ படத்தில் நடித்தனர். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பினை பெற்றது. அதன் பிறகு இவர் தமிழிலும் சுல்தான் மற்றும் வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்தியில் ராஷ்மிகா நடித்த அனிமல் மற்றும் சவ்வா ஆகிய படங்கள் மாஸ் ஹிட் ஆனதை தொடர்ந்து, இப்போது இவரது மார்கெட் வேற லெவலில் இருக்கிறது.
ராஷ்மிகாவிற்கும் விஜய் தேவரகொண்டாவிற்கும் ஆன் ஸ்கிரீனை தாண்டி ஆஃப் ஸ்கிரீனிலும் அதிக கெமிஸ்ட்ரி இருப்பதாக ரசிகர்கள் பலர், கமெண்ட் அடித்து வந்தனர். அதை நிரூபிக்கும் வகையில், இவர்களின் செயல்பாடுகளும் இருந்தது. இதையடுத்து, இருவரும் ஒன்றாக படத்தில் நடிப்பதை தவிர்த்தனர். வெளியிலும் கேமராவின் கண்களில் இவர்கள் ஒன்றாக தென்படவில்லை. இருப்பினும், இருவரும் ஒன்றாக வெக்கேஷன் செல்வதை ரசிகர்கள் கண்டுபிடித்து விட்டனர்.
திருமண நிச்சயதார்த்தம்:
ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் சீக்ரெட்டாக டேட்டிங் செய்து வந்த தகவல் வலம் வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு, ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் நடந்ததாகவும், இதற்கு நிறைய பேருக்கு அவர்கள் அழைப்பு விடுக்கவில்லை என்றும் தகவல் வெளியானது.
திருமணம் எப்போது?
தற்போது ராஷ்மிகாவிற்கும் விஜய் தேவரகொண்டாவிற்கும் எப்போது, எங்கே திருமணம் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. இருவருக்கும் ராஜஸ்தானின் உதய்பூரில் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல, அடுத்த ஆண்டு காதலர் தின மாதமான பிப்ரவரி மாதத்தின் 26ஆம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.
ஒன்றாக தீபாவளி கொண்டாடினார்களா?
ராஷ்மிகா மந்தானவோ, விஜய் தேவரகொண்டாவோ இதுவரை ஒன்றாக புகைப்படங்களை வெளியிட்டதில்லை. இருப்பினும், சில புகைப்படங்களை பதிவிடும் போது தாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்பதற்கான ஹிண்ட்களை கொடுத்து வந்தனர். சமீபத்தில் விஜய் தேவரகொண்டா, தான் தீபாவளி காெண்டாடியிருந்த வீடியோவை பகிர்ந்திருந்தார். அதில், பின்னணியில் ஒரு பெண்ணின் குரல் கேட்டது. இது ராஷ்மிகா மந்தனாதான் என சில ரசிகர்கள் ஃபிக்ஸ் ஆகி விட்டனர். இவர்களின் திருமண செய்திக்காக பலர் காத்த்துக்கொண்டுள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ