விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான GOAT திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனை செய்து மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை AGS நிறுவனம் தயாரிக்க, வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது எச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார். மேலும் இது தான் தனது கடைசி படம் என்றும், இந்த படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் ஈடுபடுவேன் என்றும் விஜய் தெரிவித்துள்ளார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது. ஜனநாயகன் படமும் கிட்டத்தட்ட அரசியல் பின்னணியில் நடக்கும் கதை என்று கூறப்படுகிறது.
இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடித்து வருகின்றனர். கன்னடத்தை சேர்ந்த கேவிஎன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் முதலில் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு ரிலீஸ் தேதி குறித்த எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.

மறுபுறம் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். முதலில் சூர்யா இந்த கதையில் நடிக்க இருந்தார், ஆனால் பிறகு சில காரணங்களால் இப்படத்தில் இருந்து வெளியேறினார். சென்னை மற்றும் இலங்கை என பராசக்தி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஹிந்தி திணிப்பை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை இருக்கும் என்று கூறப்படுகிறது. கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் மற்றும் பாசில் ஜோசப் ஆகியோர் நடித்து வருகின்றனர். அமரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இப்படம் உருவாகி வருகிறது. ஆகாஷ் பாஸ்கரன் இந்த படத்தை தயாரிக்கிறார்.
ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் பராசக்தி?
பராசக்தி படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் விஜய்யின் ஜனநாயகன் படமும் பொங்கல் பண்டிகையொட்டி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. ஜனநாயகன் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக படத்தின் வெளியீடும் தற்போது தள்ளிப் போய் உள்ளது. இதனால் இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகக்கூடிய சூழல் கிளம்பியுள்ளது. இரண்டு படங்களும் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருவதால் இரண்டு பட நிறுவனங்களுமே ஒரு நல்ல பண்டிகை தேதிக்காக காத்துக் கொண்டுள்ளனர். இரண்டு நிறுவனங்களும் தங்கள் படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட தயார் ஆகி வருகின்றனர்.

பராசக்தி படத்தின் தலைப்பு வெளியான போது விஜய் ஆண்டனிக்கும் சிவகார்த்திகேயனுக்கு இடையே சில உரசல்கள் ஏற்பட்டது. விஜய் ஆண்டனியும் தான் நடித்து வரும் படத்திற்கு பராசக்தி என்று பெயர் வைத்து இருந்தார். பிறகு இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி விஜய் ஆண்டனி தனது படத்தின் தலைப்பை சக்தி திருமகன் என்று மாற்றினார். இந்நிலையில் விஜய் படத்துடன் சிவகார்த்திகேயன் படம் வெளியாகும் என்ற தகவல் மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. விஜய்யின் கோட் படத்தில் கிளைமாக்ஸ்ல் சிவகார்த்திகேயன் ஒரு கேமியோ ரோலில் நடித்திருந்தார். மேலும் விஜய் மீது சிவகார்த்திகேயனுக்கு அதிக மதிப்பும் மரியாதையும் உள்ளதால் தனது படத்தை ஜனநாயகன் படத்துடன் வெளியிட மாட்டார் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் இரண்டு பட நிறுவனங்களும் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
மேலும் படிக்க | ஷங்கர் மகன் நடிக்கும் முதல் படம்! ஹீரோயினாக விஜய் பட நாயகி..யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









