)
Vijay Jananayagan Movie Update: நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் ஜனநாயகன் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதன் முழு விவரத்தை இங்கே பெறலாம்.
விஜய்யின் 69வது மற்றும் கடைசி படமான ஜனநாயகன் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. நீண்ட நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது மட்டுமே நடைபெற்று வருகிறது. விஜய் அரசியலில் தீவிரமாக இறங்கி உள்ளதால் படப்பிடிப்பிற்கு நேரம் ஒதுக்குவதில் சிரமங்கள் இருப்பதால் தாமதமாவதாக கூறப்படுகிறது. அடுத்த மாதத்திற்குள் முழு படப்பிடிப்பும் முடிவடையும் என்று கூறப்படுகிறது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் சமயத்திலேயே ஜனநாயகன் படத்தில் பிசினஸ் தொடங்கியுள்ளது.
இந்த படம் மற்றும் கதை பற்றிய தகவல்கள் பெரிதாக வெளியாகவில்லை என்றாலும் பலரும் இந்த படத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். முதலில் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பு முடிவதற்கு தாமதமானதால் தற்போது பொங்கல் அன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் முதன்முறையாக நடிக்கும் படம், ஜன நாயகன். இந்த படத்தை கே.வி.என்.ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் விஜய்யுடன் இரண்டாம் முறையாக பூஜா ஹெக்டே ஜோடி சேர்ந்திருக்கிறார். இவர்கள் ஏற்கனவே, பீஸ்ட் திரைப்படத்தில் இணைந்திருக்கின்றனர். ஜன நாயகன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் மலையாள நடிகை மமிதா பைஜூ, பிரியாமணி, நரேன், பாபி டியோல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு, கடந்த அக்டோபர் மாதம் பூஜையுடன் தொடங்கியது.
ஜன நாயகன் படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்த நாள் முதல், முழு வீச்சில் படத்தின் வேலைகள் பரபரப்பாக நடந்து வந்தது. சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அதன் பிறகு, கொடைக்காணலில் சில காட்சிகள் படமாக்கப்பட்டது. ஜன நாயகன் படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்த நாள் முதல், முழு வீச்சில் படத்தின் வேலைகள் பரபரப்பாக நடந்து வந்தது. சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அதன் பிறகு, கொடைக்காணலில் சில காட்சிகள் படமாக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது விஜய்யின் ஜனநாயகன் படத்தில் தனது போர்ஷன் முழுவதுமாக நிறைவடைந்துவிட்டதாக நடிகை பூஜா ஹெட்ச் பதிவு ஒன்றை புகைப்படம் மூலம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
#JanaNayagan | Pooja Hedge Portion Shoot Gets Wrap Today pic.twitter.com/5wWXUdnIQd
— Saloon Kada Shanmugam (@saloon_kada) June 15, 2025
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ