விஜய்யின் 69வது மற்றும் கடைசி படமான ஜனநாயகன் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. நீண்ட நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது மட்டுமே நடைபெற்று வருகிறது. விஜய் அரசியலில் தீவிரமாக இறங்கி உள்ளதால் படப்பிடிப்பிற்கு நேரம் ஒதுக்குவதில் சிரமங்கள் இருப்பதால் தாமதமாவதாக கூறப்படுகிறது. அடுத்த மாதத்திற்குள் முழு படப்பிடிப்பும் முடிவடையும் என்று கூறப்படுகிறது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் சமயத்திலேயே ஜனநாயகன் படத்தில் பிசினஸ் தொடங்கியுள்ளது.
இந்த படம் மற்றும் கதை பற்றிய தகவல்கள் பெரிதாக வெளியாகவில்லை என்றாலும் பலரும் இந்த படத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். முதலில் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பு முடிவதற்கு தாமதமானதால் தற்போது பொங்கல் அன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | அஜித்துடன் மோதும் ரஜினி! கூலி படத்தின் ரிலீஸ் தேதி என்ன தெரியுமா?
சாதனை படைத்த ஜனநாயகன்
விஜய்யின் படங்கள் எப்போதும் வசூலில் சாதனை படைக்கும். அதே போல இந்த படமும் புதிய சாதனை படைத்துள்ளது. ஜனநாயகன் படத்தில் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் 121 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஒட்டுமொத்த சினிமா வட்டாரங்களில் உள்ளவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் 55 கோடிக்கு வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. வெறும் ஓடிடி மற்றும் சேட்டிலைட் மூலம் தயாரிப்பாளருக்கு ரூபாய் 175 கோடி வருமானம் கிடைத்துள்ளது. படப்பிடிப்பு முடிவதற்குள் இது போன்ற வருமானம் பெறுவது விஜய்யின் மார்க்கெட்டை மேலும் அதிகரித்துள்ளது.
ALL-TIME Record Overseas Rights - ₹75crs
LL-TIME Record OTT Rights - ₹121crs (Amazon Prime)
LL-TIME Record Satellite Rights - ₹68crs (Sun TV)
ALL-TIME Record TN theatrical Rights - ₹100crs (7screenstudio)THALAPATHY ERA pic.twitter.com/1h7TYG0jhz
— Lets OTT x CINEMA (@LetsOTTxCinema) April 2, 2025
எச் வினோத் இயக்கம் இந்த படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய் தவிர இந்த படத்தில் பூஜா ஹெக்தே, பாபி டியோல், மமீதா பைஜூ, பிரியாமணி, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சத்தியன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, அன்பரிபு ஸ்டன்ட் மாஸ்டர்களாக பணிபுரிகின்றனர். செல்வகுமார் கலை மற்றும் பிரதீப் ராகவ் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். விஜய்யின் பிறந்த நாள் அன்று படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









