நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் தற்போது தளபதி 69 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகின்றனர்.
இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இப்படம் வருகிற ஆக்டோபர் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி தியோல் நடிக்கிறார். இவர் அனிமல் மற்றும் கங்குவா படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
மேலும் படிங்க: வித்தியாசமான லூக்கில் துருவ் விக்ரம்.. பட்டையை கிளப்பும் பைசன்!
சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. குடியரசு தினத்தன்று இந்த போஸ்டர்கள் வெளியாகின. இப்படம் அரசியல் தொடர்பான திரில்லர் கதைகளத்தில் உருவாகி வருகிறது என கூறப்படுகிறது.
தற்போது அரசியலில் விஜய் குதித்துள்ளதால் இதுவே அவரது கடைசி படம் என அறிவித்திருக்கிறார். இதனால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், இயக்குநார் எச். வினோத் படம் என்பதாலும் இப்படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது. இவரது இயக்கத்தில் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துனிவு உள்ளிட்ட திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில், ஜன நாயகன் படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி ஜன நாயகன் படப்பிடிப்பு ஜூன் மாதம் இறுதிக்குள் நிறைவடையும் என அப்டேட் வெளியாகி உள்ளது. மேலும், இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் போது அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்படத்தை 2026 பெங்கல் தினத்தன்று திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் படிங்க: அஜித்தின் 'குட் பேட் அக்லி'.. புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









