)
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பன்மொழிகளில், தனது கவர்ச்சியான நடனத்தால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் நடிகை முமைத் கான். குறிப்பாக, போக்கிரி படத்தில் வரும் என் செல்லப்பேரு ஆப்பிள், வேட்டையாடு விளையாடு படத்தில் சிக்கி முக்கி நெருப்பே மற்றும் கந்தசாமி படத்தில் என் பேரு மீனா குமாரி போன்ற பாடல்கள், இன்றும் முமைத் கானின் அடையாளமாக திகழ்கின்றன. தற்போது 40 வயதாகும் அவர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனது காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியிருப்பது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2001ம் ஆண்டு, பிரசாந்த் நடிப்பில் வெளியான மஜ்னு திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி, தமிழ் சினிமாவில் அறிமுகமானார் முமைத் கான். அதை தொடர்ந்து பாய்ஸ், தலைநகரம், மருதமலை, வில்லு, சிறுத்தை என பல முன்னணி நடிகர்களின் படங்களில், ஒரு பாடலுக்கு நடனமாடி பெரும் புகழ் பெற்றார். நடனம் மட்டுமின்றி, பிரசாந்தின் மம்பட்டியான் திரைப்படத்தில், சொர்ணம் என்ற முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து, தனது நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தினார். சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே, 2017ம் ஆண்டு, தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு, 49 நாட்கள் வரை போட்டியில் நீடித்து, மக்களின் கவனத்தை ஈர்த்தார். அதை தொடர்ந்து, சில வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசிய முமைத் கான், எனக்கு சமீபத்தில் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது. அதிலிருந்து சிகிச்சைக்கு பிறகு இப்போதுதான் குணமடைந்து வருகிறேன். கடந்த காலத்தில், நான் ஒரே நேரத்தில் நான்கு பேருடன் டேட்டிங்கில் இருந்தேன். ஆனால், அது எதுவும் சரிவரவில்லை. அவர்களை விட்டு பிரிந்து விட்டேன். தற்போது, அவர்கள் யாருடனும் நான் தொடர்பில் இல்லை என்று தைரியமாக தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், இப்போது நான் தனியாக, மிகவும் வசதியான மற்றும் மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். எனக்கு யாருடைய துணையும் தேவைப்படவில்லை. ஆனால், எதிர்காலத்தில் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருக்கிறது. அதற்கான சரியான வாய்ப்பு அமையும் போது, நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார். ஒரு காலத்தில் தென்னிந்திய திரையுலகின் ஹாட் டாப்பிக்காக இருந்த முமைத் கான், தனது கடந்த கால வாழ்க்கை குறித்து எந்தவிதமான தயக்கமும் இன்றி, வெளிப்படையாக பேசியிருப்பது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ