விஜய் சேதுபதியுடன் மோதப் போகும் பகத் பாசில்.. எந்த படம் தெரியமா?

Vijay Sethupathi Fahadh Fasil Movie Update: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்கள் தான் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில். தற்போது இவர்கள் இருவரும் ஒன்றாக நடிக்கப் போகும் படம் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.   

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 26, 2025, 01:35 PM IST
  • விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் இணையும் படம்.
  • இவர்கள் இருவரும் ஒன்றாக நடிக்கப் போகும் படம்.
  • இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக பகத் பாசில்.
விஜய் சேதுபதியுடன் மோதப் போகும் பகத் பாசில்.. எந்த படம் தெரியமா?

Vijay Sethupathi Fahadh Fasil Movie Update: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்கள் தான் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில். தற்போது இவர்கள் இருவரும் ஒன்றாக நடிக்கப் போகும் படம் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக பகத் பாசில் நடிக்க போவதாக கூறப்படுகிறது.

Add Zee News as a Preferred Source

கமர்ஷியல் இயக்குநர் பூரி ஜெகன்நாத் சமீபத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், தனது அடுத்த கனவுப்படமாக உருவாகும், பான்-இந்தியா திரைப்படத்தின் அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது அனைவரும் அறிந்ததே. இந்த அறிவிப்பானது உகாதி திருநாளில் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த பிரம்மாண்டத் திரைப்படத்தை, பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான பூரி கனெக்ட்ஸின் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனதக்காகவும் அறிவிப்பு வெளியானது.

நடிகர் விஜய் சேதுபதிக்காக இயக்குநர் பூரி ஜெகன்நாத் மிகவும் தனித்துவமான ஒரு கதையை மிக நுணுக்கமாக வடிவமைத்துள்ளார். இதில் விஜய் சேதுபதி இதுவரை எவரும் பார்த்திராத ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் உணர்வுப்பூர்வமான கதை, அழுத்தமான பாத்திரம், விஜய் சேதுபதியின் புதிய அடையாளத்தை திரையுலகிற்கு வெளிப்படுத்துவதாக இருக்கும்.

இந்தப் படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை தபு ஒப்பந்தமாகியுள்ளார். தனித்துவமான கதைத் தேர்வுகளுக்கு பெயர் பெற்ற தபு, இந்த படத்தின் கதாபாத்திரத்தாலும், அழுத்தமான கதைக்களத்தாலும் உடனடியாக ஈர்க்கப்பட்டு இந்த படத்தில் நடிக்க, உடனடியாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்த படத்தில் அவரது பாத்திரம் ரசிகர்கள் அனைவரையும் ஈர்க்கும் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கப்போகும் நடிகர் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று கசிந்துள்ளது. அதன்படி வேலைக்காரன் படத்தின் மூலம் வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பிறகு சூப்பர் டூலெக்ஸ், மாமன்னன், புஷ்பா போன்ற அதிரடி படங்களில் அதிரடி வில்லனாக நடித்து வரும் மிகப்பெரிய மலையாள நடிகர் பகத் பாசில் இந்த படத்தில் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நானி நடிக்கும் HIT: The Third Case! 

மேலும் படிக்க | சமந்தா குறித்து பேசிய பிரபல பெண் இயக்குநர்.. வைரலாகும் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News