)
Thalaivan Thalaivi OTT Release Date : கடந்த மாதம் 25 ஆம் தேதி வெளியான தலைவன் தலைவி திரைப்படத்தில் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான முழு விவரத்தை இங்கே காணலாம்.
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் தலைவன் தலைவி. இந்த படம் கடந்த மாதம் 25 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் முதல் முறையாக இணைந்து நடித்திருந்தனர்.
விஜய் சேதுபதி, நித்யா மேனன் கணவன்-மனைவியாக நடித்திருக்கும் படம், தலைவன் தலைவி. திருமணமான கணவன்-மனைவிக்குள் குடும்பத்தால் வரும் பிரச்சனைகளை அலசுகிறது, இந்த படம். விஜய் சேதுபதி, இந்த படத்தில் பரோட்டா மாஸ்டராக நடித்திருக்கிறார்.
தலைவன் தலைவி படத்தின் டிரைலர் வெளியான போது, இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆனால், படம் அவர்களை சிறிதளவு ஏமாற்றியிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், படம் ரிலீஸான முதல் இரண்டு நாட்களும் தியேட்டர்கள் ஹவுஸ் புல்லாக இருந்தன. இரண்டாம் நாள் முடிவில், தலைவன் தலைவி படம், ரூ.4.50 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாக கூறப்பட்டது.
அதேபோல் படம் வெளியாகி இன்றுடன் 18 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இந்தப் படம் இதுவரை உலகளவில் ரூ. 93 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மூன்று வாரங்கள் ஆகியும் வசூல் வேட்டையாடி வரும் தலைவன் தலைவி படம் கூடிய விரைவில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று கூறப்படுகிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தலைவன் தலைவி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தை வருகிறது.
தலைவன் தலைவி படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடித்துள்ளனர். அதிக காதலுடன் இருக்கும் தம்பதிக்குள், ஏன் விவாகரத்து நிகழ்கிறது என்பதை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் தான் தலைவன் தலைவி. இதில் ”பொட்டல முட்டாயே” பாடல் பெரிதளவில் வைரலானது. இந்த படம் நல்ல காமெடி கதை கொண்ட படமாக இருக்கிறது என்று படம் பார்த்தவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது படம் வெளியாகி மூன்று வாரம் கடந்துள்ள நிலையில் கூடிய விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்கிற எதிர்ப்பார்கப்படுகிறது. பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு படம் திரையரங்கில் வெளியானால் நான்கு வாரம் கழித்து ஓடிடி தளத்தில் வெளியாகும். அதன்படி இந்த படம் செப்டம்பர் முதல் வாரம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி தலைவன் தலைவி படத்தை வாங்கியுள்ள அமேசான் பிரைம் 6 வாரங்கள் கழித்து இந்த படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறுகின்றனர்.
இதற்கிடையில் இந்த படம் சில நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். அதன் வீடியோவை இங்கே காணலாம்.
Not in theatres, but now in your feed! A never seen before deleted scene from #ThalaivanThalaivii
— Sathya Jyothi Films (@SathyaJyothi) August 10, 2025
https://t.co/bCsiv6lG03@VijaySethuOffl @MenenNithya @pandiraaj_dir @iYogiBabu@Music_Santhosh @Lyricist_Vivek @thinkmusicindia @studio9_suresh@Roshni_offl @kaaliactor…
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ