120 கிலோ உடல் எடையுடன் இருந்த விஜய் சேதுபதி மகன்... இப்ப எப்படி ஆயிட்டார் பாருங்க!

நடிகர் விஜய் சேதுபதியில் மகன் சூர்யா நடிப்பில் உருவான பீனிக்ஸ் திரைப்படம் வரும் 4ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், சூர்யா இப்படத்திற்கு முன்பாக 120 கிலோ உடல் எடையுடன் இருந்ததாக கூறி உள்ளார். 

Written by - R Balaji | Last Updated : Jul 2, 2025, 05:47 PM IST
  • விஜய் சேதுபதி மகன் சூர்யா
  • பீனிக்ஸ் படம் ஜூலை 4ஆம் தேதி ரிலீஸ்
120 கிலோ உடல் எடையுடன் இருந்த விஜய் சேதுபதி மகன்... இப்ப எப்படி ஆயிட்டார் பாருங்க!

பிரபல நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி. இவர் அவரது தந்தை படமான சிந்துபாத் மூலம் அனைவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். இந்த நிலையில், பீனிக்ஸ் படத்தின் மூலம் ஹீரோவாக எண்டரி கொடுக்கிறார். இப்படத்தை பிரபல பைட் மாஸ்டர் அனல் அரசு இயக்கி உள்ளார். அவரது மனைவி ராஜலட்சுமி தயாரித்துள்ளார். இப்படம் ஜூலை 4ஆம் தேதி திரையரங்குகிளில் வெளியாகிறது. இந்த நிலையில், தான் 120 கிலோ உடல் எடையுடன் இருந்ததாகவும் ஒண்டரை ஆண்டு ஜிம்மில் கடினமாக உழைத்ததாகவும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். 

Add Zee News as a Preferred Source

இது தொடர்பாக பேசிய விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, படம் தொடங்குவதற்கு முன்பு, நான் சுமார் 120 கிலோ எடையுடன் இருந்தேன். என் எடையைக் குறைக்க ஒன்றரை ஆண்டுகள் ஆனது. என் எடையைக் குறைக்கும் செயல்பாட்டில், நான் MMA கற்றுக்கொண்டேன், அதுதான் படத்தின் மையக்கரு என கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், தனக்கு எவ்வாறு பீனிக்ஸ் படத்தில் நடிப்பதற்னான வாய்ப்பு கிடைத்தது என்பதை பகிர்ந்துகொண்டார். "எனக்கு ஒரு நடிகனாகணும்னு ஒரு எண்ணம் இருந்துச்சு. ஆனா அதை எப்படி செய்றது, எப்படி அந்த இடத்தை அடைறதுன்னு தெரியல. திடீர்னு, ஜவான் படத்தின் க்ளைமாக்ஸ் ஷூட்டிங்ல அப்பாவைச் சந்திக்கப் போனப்போ, அன்ல் அரசு சார் என்னைப் பார்த்துட்டு, அப்பாகிட்ட பீனிக்ஸ் கதையைச் சொன்னார். அவர், 'நான் சூர்யாவோட ஒரு படம் பண்ணணும்னு ஆசைப்படுறேன். 

உங்களுக்குப் பரவாயில்லையா சார்?' என்றார். அப்பா அதுதான் அவருடைய விருப்பம் என்றார். அவர்தான் முடிவு செய்யணும், அவரே கதையைக் கேட்டு அவரே முடிவு செய்யட்டும். நான் கதையைக் கேட்டேன். மூன்று நாட்களுக்குப் பிறகு, நான் சரின்னு சொன்னேன். அப்படித்தான் பயணம் ஆரம்பிச்சது. நான் கதையைத் தேர்ந்தெடுக்கலன்னு நினைக்கிறேன். கதையும், இயக்குனரும் என்னைத் தேர்ந்தெடுத்தாங்க எனக் கூறினார். 

விஜய் மற்றும் சிலம்பரசனின் ரசிகன் 

முன்னதாக ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த அவர், தனக்கு பிடித்த நடிகர்கள் யார் என கூறினார். அதில், நான் விஜய் மற்றும் சிம்புவின் தீவிர ரசிகன். இவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவங்க நடந்து வரும்போது இருக்குற ஒரு மேஜிக். அவங்க பேசுற டயலாக் எல்லாம் சூப்பராக இருக்கும். சில படங்களை திரும்ப திரும்ப பார்த்திருக்கிறேன். குறிப்பாக மெர்சல் படம் எல்லாம் 30 தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன். செக்க சிவந்த வானம் படத்துல சிம்புவும் – எங்க அப்பாவும் இடையில் நடக்குற பைட் சீன் ரொம்ப பிடிக்கும்.நான் மாஸ்டர் படத்தை விஜய்க்காக, அவரோட ரசிகனா தான் பார்த்தேன். அந்த படத்தின் இண்ட்ரோ சீனை எத்தனை தடவை பார்த்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. ஆனால் ஜனநாயகன் படம் தான் அவரது கடைசி படம் என நினைக்கும்போது எமோசனலாக இருக்கிறது என விஜய் சேதிபதியின் மகன் சூர்யா கூறினார். 

மேலும் படிங்க: போதை பொருள் வழக்கு: அடுத்து சிக்கப்போகும் முன்னணி நடிகை! யார் தெரியுமா?

மேலும் படிங்க: 2025ல் சர்ப்ரைஸ் ஹிட் அடித்த 5 படங்கள்! என்னென்ன தெரியுமா? லிஸ்ட் இதோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News