விஜய் சேதுபதியின் படத்தில் பிரபல கன்னட நடிகர்! ரசிகர்கள் குஷி..

Vijay Sethupathi Pan Indian Film : 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் பான் இந்திய படத்தில் இணையும் 'சாண்டல்வுட் டைனமோ' விஜய் குமார்  

Written by - Yuvashree | Last Updated : Apr 29, 2025, 07:53 PM IST
  • விஜய் சேதுபதி நடிக்கும் படம்
  • பான் இந்திய படம்
  • பூஇர் ஜெகன்நாத் இயக்கும் படம்
விஜய் சேதுபதியின் படத்தில் பிரபல கன்னட நடிகர்! ரசிகர்கள் குஷி..

Vijay Sethupathi Pan Indian Film : இயக்குநர் பூரி ஜெகன்னாத்- 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் புதிய பான் இந்திய திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவின் கவனத்தை கவர  தயாராகி வருகிறார். பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோர் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகை தபு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

Add Zee News as a Preferred Source

தற்போது இந்தத் திரைப்படத்தில் 'சாண்டல்வுட் டைனமோ' விஜய்குமார் இணைந்திருக்கிறார். 'வீர சிம்ஹா ரெட்டி' படத்திற்கு பின்னர் விஜயகுமார் நடிக்கும் படம் இது.‌ இவர் திரை தோற்றத்திலும் .. தரமான நடிப்பிலும் பெயர் பெற்றவர்.

விஜய் சேதுபதி அவருடைய திரையுலக பயணத்தில் புதிய தளத்தை உருவாக்கும் வகையில் துணிச்சலான வேடத்தில் நடிக்கிறார். ஒரு சக்தி வாய்ந்த கதாபாத்திரத்தின் மூலம் நடிகை தபு மீண்டும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நடிக்கிறார். இவர்களுடன் விஜய் குமார் இணைந்து நடிக்கவிருக்கிறார். கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான இவர் .. தன்னுடைய புதிய தோற்றத்தில் மின்னும் கதாபாத்திரத்தில் நடிப்பதால்... பல  அற்புதமான தருணங்களை எதிர்பார்க்கலாம். 

பூரி எழுதிய கதையுடன் டிராமா -அதிரடி ஆக்சன் - உணர்வுபூர்வமான காட்சிகளைக் கொண்ட துடிப்பான படைப்பு - என இப்படம் உறுதி அளிக்கிறது.  இது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி ஆகிய மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு எதிர்வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது.

மேலும் படிக்க | ரெட்ரோ ப்ரீ-புக்கிங் வசூல்ச சாதனை..போதை வழக்கில் நடிகர் விடுதலை! டாப் 5 சினிமா செய்திகள்

மேலும் படிக்க | சசிகுமாரின் டூரிஸ்ட் பேமிலி படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News