கோடிகளில் சம்பளம்...பெரிய வீடு, ஆடம்பர கார்.. விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

Vijay Sethupathi Turns 48: ஜனவரி 16ம் தேதியான இன்று விஜய் சேதுபதி தனது 48வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரை பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 16, 2026, 10:01 AM IST
  • அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட் டூ மக்கள் செல்வன்
  • வில்லனான நடிகர் விஜய் சேதுபதி
  • 48வது வயதில் அடி எடுத்து வைக்கும் விஜய் சேதுபதி
கோடிகளில் சம்பளம்...பெரிய வீடு, ஆடம்பர கார்.. விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

Vijay Sethupathi Turns 48: தமிழ் திரையுலகில் துணை நடிகராக களமிறங்கி, தற்போது பான் இந்திய அளவில் பெரிய நடிகராக வளர்ந்துள்ளவர் விஜய் சேதுபதி. இவர், தனது 48வது பிறந்தநாளை இன்று (ஜனவரி 16) கொண்டாடுகிறார் (Vijay Sethupathi Birthday). இந்நிலையில் அவருடைய சொத்து மதிப்பு மற்றும் சம்பளம் குறித்த தகவலை இங்கே காணலாம்.

Add Zee News as a Preferred Source

அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட் டூ மக்கள் செல்வன்:

கோலிவுட்டில் கடின உழைப்பிற்கு பெயர் போன நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் பெரிய ஹீரோக்களின் படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். முதல் முறையாக ‘தென்மேற்கு பருவக்காற்று’ திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். வழக்கமான ஆக்ஷன் ஹீரோ போல இல்லாமல் யதார்த்தமான பக்கத்து வீட்டு பையன் போன்ற இவரது தோற்றம் பல பெண்களை கவர்ந்தது. முன்னணி ஹீரோக்களின் படங்களில் சைட் ரோலில் நடித்து ஓரிரண்டு வசனங்களுடன் விடைப்பெற்று கொண்டிருந்த விஜய் சேதுபதி, இன்று பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் பயங்கர வில்லனாகவும், முக்கிய நடிகராகவும் நடித்து வருகிறார்.

வில்லனான நடிகர் விஜய் சேதுபதி:

நடிகர் விஜய் சேதுபதி, முதன் முதலாக வில்லனாக நடித்த திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக ‘பவானி’ எனும் கதாப்பாத்திரத்தில் வந்திருந்தார். ஆனால் இதற்கு முன்னரே இவர் ‘சுந்தர பாண்டியன்’ படத்தில் நெகடிவ் ஷேட் பொருந்திய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படியே இவருக்கு ‘விக்ரம்’ படத்தலும் ‘சந்தனம்’ எனும் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க வாயப்பு கிடைத்தது. இப்படி இவர் ரஜினி, கமல், விஜய் என தென்னிதிய அளவில் வில்லனாக நடித்த இவர், ஷாருக்கான நடிப்பில் ஹிந்தியில் வெளியான ஜவான் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்திருந்தார்.

பிக் பாஸ் தொகுப்பாளர்:

ஒரு பக்கம் ஹீரோ, வில்லன் என மாறி மாறி நடித்து வரும் விஜய் சேதுபதி தொகுப்பாளராகவும் அசத்தி வருகிறார். விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை அடுத்து யார் தொகுத்து வழங்கப் போகிறார் என்கிற கேள்விகள் கிளம்பி வந்த தருணத்தில், நான் இருக்கேன் என வந்து 8வது சீசனை வெற்றிகரமாக நடத்தி தற்போது ஒன்பதாவது சீசனையும் அசத்தலாக தொகுத்து வருகிறார் விஜய் சேதுபதி.

48வது வயதில் அடி எடுத்து வைக்கும் விஜய் சேதுபதி:

இதனிடையே இன்று அதாவது ஜனவரி 16 ஆம் தேதி விஜய் சேதுபதி தனது 48வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரை பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்கள்:

தற்போது நடிகர் விஜய் சேதுபதி, தமிழ் படங்களை விட பிற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். அதன்படி இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கௌரவ தோற்றத்தில் நடிக்கிறார். அதேபோல் பூரி ஜெகன்நாத் இயக்கியிருக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். விஜய் சேதுபதி நடித்துள்ள "காந்தி டாக்ஸ்" (Gandhi Talks) திரைப்படம், மௌனப் படமாக (Silent Film) உருவாகியுள்ளது, இதில் அவர் ஒரு "சமாதான சிப்பாய்" வேடத்தில் நடிக்கிறார். மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நாசர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் டிரைன் (Train) படம் விரைவில் வெளியாக உள்ளது. வடசென்னை கதைகளத்தில் உருவாகி வரும் அரசன் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு - சம்பளம்:

இந்நிலையில் விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு மற்றும் தற்போது அவர் வாங்கி வரும் சம்பளம் எவ்வளவு குறித்த தகவலை இங்கே காணலாம். 

நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மாறிய விஜய் சேதுபதி தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் வான்டட் நடிகராகவும் மாறியுள்ள இந்த நிலையில் அவருக்கு 140 கோடி ரூபாய் சொத்துக்கள் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் 50 கோடிக்கு பெரிய பங்களா ஒன்று வைத்துள்ள விஜய் சேதுபதி 1.78 கோடி மதிப்பில் BMW 7 சீரிஸ் காரை வைத்திருக்கிறார். மேலும், சில கார்களும் அவருக்கு உள்ளன. அதேபோல் இவர் ஒரு படத்துக்கு 20 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் இவர் ரூ.75 கோடி சம்பளம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க - விஜய்க்கு ராகுல் காந்தி ஆதரவு.. ஜனநாயகன் விவகாரத்தில் செம ட்விஸ்ட்.. கூட்டணி கன்ஃபார்ம்? 

மேலும் படிக்க - ஜனநாயகன் சென்சார் பிரச்சனை: நடந்தது என்ன? உண்மையை புட்டு புட்டு வைக்கும் தயாரிப்பாளர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News