)
Vijay Sachein Movie Actress Rashmi Smrithi Biography : தமிழ் திரையுலகில் ரீ-ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்து விட்டது. புதிதாக வெளியாகும் திரைப்படங்களை விட, பழைய படங்களைத்தான் ரசிகர்கள் அதிகமாக தியேட்டர்களில் கண்டு களித்து மகிழ்ந்து வருகின்றனர். அப்படி, ரசிகர்களை ரீசண்டாக கவர்ந்துள்ள ரீ-ரிலீஸ் திரைப்படம், சச்சின். இந்த படத்தில் விஜய்-ஜெனிலியா ஆகியோர் ஜோடிகளாக நடித்திருந்தனர். இவர்கள் மட்டுமன்றி, இந்த படத்தில் ஜெனிலியாவின் தோழியாக வந்த நடிகை வெளியிட்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சச்சின் ரீ-ரிலீஸ்:
தமிழில் எத்தனையோ ரொமான்டிக் காமெடி திரைப்படங்கள் வந்துள்ளன. ஆனால், அதில் சில மட்டும்தான் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. அப்படி, ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த படம், சச்சின். இந்த படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருப்பார். வடிவேலு, பாலாஜி, சந்தானம், தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பர்.
ஜான் மகேந்திரன் இயக்கிய இந்த படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களும் பெரிய ஹிட் அடித்தன. அதற்கு காரணம், இப்படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தான். இப்படம் ஒரிஜினில் ரிலீஸின் போது பெரிய வெற்றியை பெறவில்லை. காரணம், இது வெளியாகும் போது அதனுடன் சேர்த்து சந்திரமுகி படமும் வெளியானது. இதனால், சச்சின் படத்தை அப்போதைய ரிலீஸின் போது யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி, இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதில் இடம் பெற்றிருக்கும் பல விஷயங்களை கவனித்த ரசிகர்கள், இதில் ஹீரோயின் ஜெனிலியாவின் தோழியாக ஸ்மிரிதி கதாப்பாத்திரத்தில் வந்த நடிகையையும் கவனிக்க தவறவில்லை.
தோழியாக வந்த ஸ்மிரிதி:
ஒரு திரைப்படத்தை எடுத்துக்கொண்டால், அதில் ஹீரோயின் வருவதும், ஹீரோயினுக்கு தோழியாக ஒருவர் வருவதும் சகஜம். ஆனால், அந்த நாயகிக்கு தோழியாக வரும் பெண்ணை பெரிதாக யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். அனைத்து கவனமும், நாயகியின் மீதே இருக்கும். ஆனால், காலம் மாறிவிட்டது. ஹீரோயின் மட்டுமல்ல, அவருக்கு தோழியாக வரும் பெண்ணையும் ரசிகர்கள் சைட் அடித்து வருகின்றனர். தற்போது சச்சின் ரீ-ரிலீஸிலும் அப்படி ரசிகர்கள் மத்தியில் வைரலான ஹீரோயின் தோழிதான் ஸ்மிரிதி. இவரது உண்மையான பெயர், ரஷ்மி. இந்த நடிகை குறித்து அனைவரும் இணையத்தில் தேடி வந்ததை அடுத்து, அவரே ஒரு வீடியோவை இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
நடிகை வெளியிட்ட வீடியோ:
ரஷ்மி, தற்போது இணையத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். அதில், சச்சின் ரீ-ரிலீஸிற்கு பிறகு தன்னை பலர் தன்னை தொடர்பு கொண்டதாகவும், அதனால் இந்த வீடியோவை பகிர்வதாகவும் அவர் கூறியிருக்கிறார். மேலும், அந்த சின்ன கதாப்பாத்திரத்தை இப்போது பெரிதாக அனைவரும் பார்த்து, தனக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதாக கூறியிருக்கும் அவர் அதனால் அதனை தானே முன்வந்து நன்றி கூற நினைத்ததாகவும் கூறினார்.
ஸ்மிரிதியின் கதாப்பாத்திரம் இவ்வளவு பெரிதாக பேசப்படுவதற்கு காரணம், அவர் ஷாலினியிடம் அளவற்ற நட்பாக இருந்ததாலும், சரியான முடிவை எடுப்பதற்கு உதவியாக இருந்ததாலும்தான் என்று கூறியிருக்கிறார். இந்த சின்ன ஸ்மிரிதி ரோலில் நடித்ததற்கு தான் பெருமையாக உணர்வதாகவும் கூறியிருக்கிறார். தான், ரியல் வாழ்விலும் அப்படிப்பட்ட பெண்தான் எனவும் கூறியிருக்கிறார். இந்த படம் நடிக்கும் போது, தான் கல்லூரியில் படித்து கொண்டிருந்ததாகவும் கூறியிருக்கிறார்.
ரஷ்மிக்கு திருமணம் ஆகி, ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அது மட்டுமல்ல, இவர் இப்போது ஆடை வடிவமைப்பாளராகவும் இருக்கிறார். சொந்தமாக தொழில் செய்து வரும் இவர், தற்போது பெங்களூருவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ