இன்று ரீ-ரிலீஸ் ஆகும் சச்சின் படம்! எப்படி இருக்கிறது Re-Mastered வெர்சன்?

சச்சின், ஜெனிலியா நடிப்பில் வெளியான சச்சின் படம் இன்று உலகம் முழுவதும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. பல ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.

Written by - RK Spark | Last Updated : Apr 18, 2025, 10:01 AM IST
  • இன்று வெளியாகும் சச்சின் படம்.
  • ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
  • ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
இன்று ரீ-ரிலீஸ் ஆகும் சச்சின் படம்! எப்படி இருக்கிறது Re-Mastered வெர்சன்?

கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான சச்சின் படம் வெளியாகி 20 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் இன்று தமிழக முழுவதும் ரீ-ரீலீஸ் ஆகிறது. ஜான் மகேந்திரன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஜய், ஜெனிலியா, ரகுவரன், வடிவேலு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். 2002 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான நீத்தோ படத்தின் தமிழ் ரீமேக் தான் சச்சின் படமாகும். ரஜினியின் சந்திரமுகி படத்துடன் இணைந்து சச்சின் படமும் வெளியானதால் அந்த சமயத்தில் வசூலில் பெரிதாக வெற்றியடையவில்லை.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | 3 பெரிய நடிகர்கள் இணைந்து நடிக்கும் 45 படம்! டீசர் வெளியீட்டு விழா..

கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் சூப்பர் ஹிட் ஆன கில்லி படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வசூல் சாதனை படைத்தது. பல படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டாலும் கில்லி அளவிற்கு எந்த படமும் மக்களிடம் வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு சச்சின் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது. கிட்டத்தட்ட தமிழகத்தில் 450க்கும் மேற்பட்ட திரைகளில் சச்சின் ரீ ரிலீஸ் ஆகி உள்ளது. பல ஷோக்கள் ஹவுஸ்ஃபுல் ஆகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வாரம் வெளியாகும் புதிய படங்களுக்கு கூட இந்த அளவிற்கு வரவேற்பு இல்லை.

20 வருடங்களுக்கு பிறகு வெளியாகும் சச்சின் படத்திற்கு புதிய படத்தை போலவே ட்ரைலர், பாடல்களை ரிலீஸ் செய்து வந்தனர் தயாரிப்பு தரப்பு. தற்போது தீவிர அரசியலில் இறங்கி உள்ள விஜய் தனது கடைசி படமாக ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதனால் விஜய்யை எப்படியாவது திரையில் பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் இருந்து ரசிகர்களுக்கு சச்சின் படம் வரப்பிரசாதமாய் அமைந்துள்ளது. விஜயின் தீவிர ரசிகர்கள் பலரும் சச்சின் படத்தை திரையரங்கில் நிச்சயம் பார்த்திருக்க மாட்டார்கள்.

அதனால் இந்த படத்தை திரையில் பார்க்க வேண்டும் என்று பலரும் ஆர்வமுடன் உள்ளனர். மேலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள காமெடி காட்சிகள் அனைத்தும் இன்றளவும் மக்கள் மத்தியில் வரவேற்கை பெற்று வருகிறது. விஜய்க்கு வடிவேலுக்கும் இடையே கெமிஸ்ட்ரி நல்ல விதமாக ஒர்க் ஆகி இருக்கும். அதேபோல சச்சின் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களும் பெரிய அளவில் ஹிட் அடித்தது தான். 20 வருடங்களுக்கு பிறகு வெளியாவதால் படத்தை ரீ மாஸ்டர் செய்துள்ளனர். பழைய படம் என்பதால் இன்று பார்க்கும் பொழுது பல மிஸ்டேக்கள் நம் கண்ணில் படுகிறது. இருப்பினும் ஒரு புதிய படத்தை பார்ப்பது போல் என்ஜாய் செய்து ரசிகர்கள் பார்க்கின்றனர்.

மேலும் படிக்க | வயதானவரை திருமணம் செய்த பிரியங்கா? எத்தன வயசு வித்தியாசம் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News