ரசிகர்களுக்கு விருந்து வைத்துக் கொண்டாடிய, விஜய் டிவி

சின்ன மருமகள் சீரியல் குழுவினர், விஜய் டிவி பிரபலங்கள், மக்களுடன் இணைந்து  கொண்டாடிய திருவிழா !!

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 23, 2025, 01:50 PM IST
  • ரசிகர்களுக்கு விருந்து வைத்த விஜய் டிவி
  • ரசிகர்களுக்கு மொய் விருந்து
ரசிகர்களுக்கு விருந்து வைத்துக் கொண்டாடிய, விஜய் டிவி

தமிழகத்தின் விருப்பமான தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், தற்போது திங்கள் முதல் வெள்ளி வரை இரவு தோறும் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் "சின்ன மருமகள்" நெடுந்தொடர், மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், மக்களுடன் இணைந்து உரையாடி, அவர்களுக்கு விருந்து வைத்துக் கொண்டாடியுள்ளது விஜய் டிவி. 

பெண்களை மையப்படுத்திய தமிழ் சீரியலுக்கு எப்போதுமே தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. குடும்ப பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசி, பெண் சக்தியின் பெருமையைப் பேசும் சின்ன மருமகள் தொடர், பெண்களிடம் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. அதிலும் கடந்த இரு வாரங்களாகப் பரபரப்பான கதைக்களத்தில் நகரும் இந்த சீரியல், பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனைக் கொண்டாடும் ஒரு கட்டமாக, மதுரையில் ஜுன் 13 மற்றும் விருதுநகரில் ஜூன் 14 தேதிகளில் நடைபெற்ற இந்த கொண்டாட்டம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் காலை பிரத்தியேகமாக, சின்ன மருமகள் சீரியல் ரசிகர்கள் 50 பேர் கலந்துகொண்டனர். பெண்களின் வாழ்க்கையில் நிகழும் நிகழ்கால பிரச்சனைகள், அவர்களுக்கு வரும் தடங்கல்கள், குடும்ப சிக்கல்கள் என சீரியலில் வருவது போலவே, தங்களின் சொந்தக் கதைகளை, குழுவினருடன் ரசிகர்கள் உணர்வுப்பூர்வமாக பகிர்ந்துகொண்டனர். சீரியல் குழுவினர் ரசிகர்களின் கதைகளைக் கேட்டு, அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து, அவர்களோடு மகிழ்வோடு உரையாடி மகிழ்ந்தனர். இந்த மொத்த நிகழ்வும் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானதாக இருந்தது.

மதியம் சின்ன மருமக்கள் தொடரின் தற்போதைய பரபரப்பான மொய் விருந்தை அடையாளப்படுத்தும் விதமாக, ரசிகர்களுக்கு அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது. ரசிகர்களுடன் படக்குழுவினரும் உணவருந்தி மகிழ்ந்தனர். 

மாலை, விஜய் டிவி சீரியல் நடிகர், நடிகையர்கள், குக் வித் கோமாளி, கலக்கப் போவது யாரு, சூப்பர் சிங்கர் முதலான விஜய் டிவி நிகழ்ச்சியின் பிரபலங்கள் அனைவரும் கலந்துகொள்ள, 4000 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் ஆடல் பாடல் நிகழ்வுகளுடன் கொண்டாட்டத் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழா விஜய் டிவி ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. 

 விஜய் டிவியின் சின்ன மருமகள் தொடர் முதலாக அனைத்து நிகழ்ச்சிகளையும், விஜய் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் கண்டு ரசியுங்கள்.

மேலும் படிக்க | போலீசார் பிடியில் நடிகர் ஸ்ரீகாந்த்... போதைப் பொருள் பயன்படுத்தினாரா? - தீவிர விசாரணை

மேலும் படிக்க | சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தை கைபற்றிய Netflix.. எத்தனை கோடி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News