Vijay TV Hit Shows Are Being Stopped : விஜய் தொலைக்காட்சி இப்போது வேறு ஒரு நிறுவனத்திடம் சென்று விட்டதாகவும், இதனால் சில நிகழ்ச்சிகள் இனி ஒளிபரப்பாகாது என்றும் கூறப்படுகிறது.

Vijay TV Hit Shows Are Being Stopped : தமிழ் மக்கள் மத்தியில் அதிக டிஆர்பி-யை பெற்ற தொலைக்காட்சியாக இருக்கிறது விஜய் டிவி. இந்த சேனலை தற்போது வேறு ஒரு நிறுவனம் வாங்கிவிட்டதாகவும், இதனால் சில நிகழ்ச்சிகள் கட் ஆவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
கைமாறிய விஜய் டிவி!
1990-2000 காலக்கட்டங்களில் வெகு சில தொலைக்கட்சிகள் மட்டும்தான் தமிழில் ஆரம்பிக்கப்பட்டது. அப்படி, தொடங்கப்பட்ட சேனல்களுள் ஒன்று விஜய் டிவி. முதலில் இதில் வேறு மொழி சீரியல்கள், படங்கள் தமிழில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற சில நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் சேனல் விஜய் டிவி. இந்த தொலைக்காட்சி 4 மாதங்களுக்கு முன்பு கைமாரி விட்டதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.
பலரை வளர்த்துவிட்ட நிறுவனம்..
இப்போது தமிழ் திரையுலகில் பிரபலமாக இருக்கும் பலர் ஆரம்பத்தில் தங்களது கெரியரை தொடங்கியது, விஜய் டிவி நிறுவனமாக இருந்திருக்கும். அப்படி, சிவகார்த்திகேயன், பாவனா, புகழ், கவின், திவ்யதர்ஷினி என பலரை சொல்லிக்கொண்டே போகலாம். சாதாரண தொகுப்பாளர்களாக இருந்தவர்கள் இங்கு வந்த பின்பு நட்சத்திர தொகுப்பாளராக மாறிவிட்டனர். நட்சத்திர தொகுப்பாளர்களாக இருந்தவர்கள், இங்கிருந்து சென்ற பிறகு சினிமாவில் இப்பாேது ஜொலித்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது இதில் ஹிட் ஆக இருக்கும் சில நிகழ்ச்சிகள் இனி ஒளிபரப்பு ஆகாது என்று கூறப்படுகிறது.
கலர்ஸ் தொலைக்காட்சி, அம்பானியின் கையில் இருக்கிறது. இப்போது அந்த தொலைக்காட்சிதான், விஜய் டிவியையும் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஹாட்ஸ்டார்+ஜியோ இணைந்து ஜியோ ஹாட்ஸ்டார் ஆகியிருக்கும் நிலையில், கலர்ஸ் சேனலையும் இதில் இணைக்க சில திட்டமிடல்கள் நடந்து வருவதாக தலவல்கள் வெளியாகியிருக்கிறது.
நீக்கப்படும் நிகழ்ச்சிகள்:
விஜய் டிவியில், பணியாளர்களும் தொகுப்பாளர்களும் குறைக்கப்படுவதாக கூறப்படுகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சில ஹிட் நிகழ்ச்சிகள், அந்த சேனலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டு, கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. அதில் நீயா நானா மற்றும் சூப்பர் சிங்கர் ஆகிய பெயர்களும் அடிபடுகிறது. நீயா நானா நிகழ்ச்சியை பொருத்தவரை அது கலர்ஸிற்கு மாறிய பின்பு, கோபிநாத் அதனை தொகுத்து வழங்குவாரா, அல்லது வேறு ஒரு தொகுப்பாளர் இருப்பாரா என்பது தெரியவில்லை. குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விஜய் டிவியிலேயே ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டு இருக்கிறார்களாம்.
இவர்கள் இனி இல்லையா?
விஜய் டிவியை, தற்பாேது வரை தமிழ் நாட்டில் இருந்த முதலாளிகள் கவனித்து வந்தனர். ஆனால் இனி இதனுடைய தலையமையகம் மும்பையில் இருக்கப்போவதாக கூறப்படுகிறது. இதனால், சில தொகுப்பாளர்கள் இந்த தொலைக்காட்சியை விட்டு வெளியேறி இருக்கிறார்களாம். அதில் பிரியங்காவின் பெயரும் அடிபடுகிறது. சூப்பர் சிங்கர்ஸ் உள்ளிட்ட சில முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர், சமீபத்தில்தான் திருமணம் முடித்தார். இவரும் மாகபா ஆனந்தும் சூப்பர் சிங்கர்ஸ் ஜூனியர் 10 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில், அதில் சர்ப்ரைஸாக இன்னொரு தாெகுப்பாளர் களமிறங்கினார். இனி, இவர் இந்நிகழ்ச்சிக்கு திரும்புவாரா அல்லது வேறு கலர்ஸ் தமிழுக்கு நிகழ்ச்சி கைமாறியவுடன் அங்கு சென்று விடுவாரா என்பது தெரியவில்லை.
பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வந்த இது போன்ற ஹிட் நிகழ்ச்சிகள், கலர்ஸ் தமிழுக்கு மாறுவதை எண்ணி ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ